அறமும் கல்வியும் – வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம்

வேலையில்லாப்பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பில் இதுவரை நான் எதுவும் எழுதவில்லை. இவ்வளவு காலம் நான் பல்கலைக் கழக மாணவர்களின் பல்வேறு நிலைப்பாடுகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றினால் குறிப்பிடும்படியான  மாற்றம் கூட ஏற்படவில்லை. பல்வேறு காரணங்களின் தொடர்ச்சியும் நீட்சியுமாகவே இந்தப் போராட்டம் இன்றுவரை கவனிப்புக் குறைந்த போராட்டமாகவும் அழுத்தத்தை உருவாக்க மிகவும் கஷ்டப் படவேண்டியுமிருக்கிறது என்று கருதுகிறேன். நான் இதற்கு முன் வைத்த விமர்சனங்கள் யாவும் …

பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏன் வெற்றி பெற வேண்டும்?

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது பதினைந்தாவது நாள் இருளத் தொடங்கி விட்டது. அடிப்படையில் ஐந்து நாட்களுக்கு மேல் கடந்த ஏழு வருடங்களில் எந்தவொரு ஜனநாயகவழிப் போராட்டங்களும் நீடித்ததில்லை. இந்தப் போராட்டம் அதனை மாற்றி எழுதியிருக்கிறது. இன்றோடு பதினைந்தாவது நாள். தொடரும் உறுதி மட்டும் தான் அந்த மக்களை நோக்கி பலரையும் ஈர்க்கும் வசீகரம். மேலும் அவர்களின் குரலில் உள்ள ஒற்றுமையும் சுரத்தும். முதல் நாள் இருந்ததிலிருந்து இம்மியளவும் மாறாது இன்றும் …

ஆமிக்காரனே! எயார் போஸே!

கேப்பாபுலவில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் பல வகையில் முக்கியமானது. ஈழத் தமிழர் வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் தொடர்ந்து ஜனநாயக வழிப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலமிது. இவற்றை சரியான வழியில் நகர்த்திச் செல்ல வேண்டியதும் ஆதரவளிக்க வேண்டியதும் நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். கேப்பாபுலவு மக்கள் இந்த போராட்டத்தின் போது காட்டும் உறுதி மெய்ச்சத் தக்கது. அங்கு குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்று வீதியில் படுத்து பனியில் நனைத்து …

ஜல்லிக்கட்டு – நாம் கற்றுக் கொள்ளக் கூடியவை

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது பொலிஸ் மாணவர்களை நெருக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் பெரும் அளவில் அரச இயந்திரத்தினால் ஒடுக்கப் பட்டு வருகிறது. ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈழத்திலும் புலம்பெயர்ந்தும் பல நாடுகளிலும் கவனயீர்ப்புகள் இடம்பெற்றன.சமூக வலைத்தளங்களிலும் பொது இடங்களிலும் இது பற்றி கார சாரமான பல விவாதங்கள் இடம்பெற்றன. ஆனால் இந்தப் போராட்டத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள …

இன்னும் எவரெவர் கால்களில் விழ வேண்டுமோ?

முன்னெப்போதுமில்லாத அளவு சமூக வலைத்தளவாசிகளும் மக்களும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு முன்வர ஆரம்பித்திருக்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற உண்ணாவிரதத்தில் இரண்டாவது நாள் மதியத்திலிருந்து அது முடியும் இறுதித் தருணம் வரை அந்த போராட்டப் பந்தலையே சுற்றிக் கொண்டிருந்தேன். இரவில் அந்த உண்ணாவிரதிகளுடன் உரையாடுவதும், பகலில் வரும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்களின் எண்ணவோட்டங்களையும் பார்த்துக்கொண்டிருப்பதுமாக மூண்டு பகல் மூன்று இரவு அங்கு தான். மக்களின் போராடும் உரிமையை நான் மதிக்கிறேன். ஆனால் எல்லாப் …

மெரினாவின் அலை ஒதுங்கிய கரை

ஏராளமான விமர்சனங்கள் வவுனியா உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது உருவாகி வருகிறது. வழமையை விட கடந்த ஆறு வருடங்களுக்கும் மேல் இடம்பெற்று வந்த காணாமல் ஆக்கப்பட்டு வந்தோர், அரசியல் கைதிகள், பயங்கரவாதச் சட்டம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இன்னும் பல அரசியல் பிரச்சினைகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தற்போது உருவாக்கியிருக்கும் அலை என்பது புதியது. வழமையாக சோக ஸ்ட்டேட்டஸ் போட்டு கண்ணீர் புரொபைல் போட்டு கடந்து விடும் ஆயிரக்கணக்கான …

ஜல்லிக்கட்டு – ஒரு அசலான மாற்றத்தைக் கற்றுக் கொள்ளுதல்

தமிழ் நாட்டில் இடம்பெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்திற்கு உலகம் முழுவதுமுள்ள பெரும்பாலான தமிழர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல நாடுகளில் தமிழக இளைஞர்களினதும் மக்களினதும் போராட்ட நியாயத்தினை அங்கீகரித்து கவனயீர்ப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். கடந்த பல தசாப்தங்களில் ஒரு மொழியாக தமிழர் சேர்ந்து நிகழ்த்தும் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் இதுவாகத் தானிருக்கும். ஈழத்தமிழர் போராட்டம் முக்கியமானது. ஆனால் இதன் அம்சமும் வடிவமும் மிக முக்கியமாக நாம் அவதானிக்க வேண்டியதென்று …

ஜல்லிக்கட்டுக்கு ஏன் ஈழத்தில் ஆதரவு?

தொடர்ந்து ஒரு சில மாற்றுக் கருத்தாளர்களால் இந்தக் கேள்வி முன்வைக்கப் பட்டு வந்துகொண்டிருக்கிறது. மூன்று விதத்தில் ஈழத்திலிருக்கும் கருத்தாளர்கள் அதனை எதிர்ப்பதாக நான் மட்டுக்கட்டுகிறேன். 1 – இது ஒரு சாதிய விளையாட்டு இதனை நாம் ஆதரிக்கக் கூடாது.2 – இது ஒரு ஆணாதிக்க விளையாட்டு இதனை நாம் ஆதரிக்கக் கூடாது.3 – ஈழம் தனக்கான தனிப் பண்பாட்டை உருவாக்க வேண்டும், இங்கேயே 1008  பிரச்சினைகள் உள்ளன. அதனால் நாம் …

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது?

( இவை தற்போதைய நிலைவரத்தை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான எத்தனிப்பாக கருத வேண்டாம் . அநேகமாக அனைவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்து விட்ட நிலையில் தான் இதனை பதிவிடுகிறேன். சுலக்சனுக்கும் கஜனுக்கும் நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழ்ந்து விடக் கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்காக நாம் பெற்றுக் கொடுக்க வேண்டிய நீதியை கண்டிப்பாக பெற்றுக் கொடுக்கவும் வேண்டும் . ஆனால் அதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராய் உள்ளோம், …

மாற்றுக் குரல்

யாழ்பாணத்தைச் சேர்ந்த மாற்றுப்பாலினத்தவர்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட உரையாடல்களை கடந்த காலத்தில் இரண்டு முறை விதை குழுமம் ஊடாக நிகழ்த்தியிருந்தோம், முதலாவதாக அவர்களின் பிரச்சினைகளை அவர்களே உரையாடுவது நிகழ்ந்தது. அதில் பல விவாதங்களை நிகழ்த்தி சில முடிவுகளுக்கு வந்திருந்தோம். ஒரு பொது தளத்தை இதன் பொருட்டு உருவாக்குவதென்பது அவற்றுள் முக்கியமான ஒரு முடிவு. பிறகு சில மாதங்களின் பின் மறுபடியும் கூடி அதற்கான அமைப்பு கட்டமைப்பை உருவாக்குவது …