83: புலரியாட்டம்

“முன்னை நாள் களியென்பது அடுத்த நாள் வேடிக்கையே” எனச் சொல்லி உரக்கச் சிரித்தான் ஓசையிலான். அவனது இடையாடை புழுதியும் சேறும் கொண்டு ஆக்கியதைப் போல் நிறத்திருந்தது. அவனது குழலில் சிறுமலர்ப் பிசிறல்கள் ஒட்டியிருந்தன. காதின் ஒரு மணிக்குண்டலம் எவ்விடம் தொலைந்ததென செவித்துளையை உருட்டிக் கொண்டிருந்தான். அவன் முன்னே ஓளித்துண்டுகள் விழும் மூங்கில் சாளரத்தில் சாய்ந்தபடி திரிபதங்கன் புன்னகைத்துக் கொண்டிருந்தான். திரிபதங்கனின் மேலாடையற்ற உடல் போர்வேழத்தின் முகபாடமென மின்னிக் கொண்டிருந்தது. அவனது …

82: புலரிப்பனி

புலரி மெல்லக் கரைந்து ஒலிகளாகி இளம் பாணன் நின்றிருந்த சதுக்கத்தில் வெளிச்சம் கதகதப்பான குழவியின் தேகச்சூடென விழுந்து கொண்டிருந்தது. எத்தனை முறை நசிந்து மாண்டாலும் எங்கென்று அறியாத திசைகளிலிருந்து எழுந்து வந்து நிரையைச் சீராக்கி அறுபடாது தொடர்ந்து செல்லும் எறும்புகளைப் போல மக்கள் கூட்டம் ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சதுக்கத்திலிருந்து அம்பலம் செல்லும் வழியை ஒருமுறை நோக்கும் எண்ணம் இளம் பாணனுக்குள் விந்து சீறியடங்கிய பின்னர் குறியை நோக்கும் …

81: வெறுந்தேகம்

சிற்பனில் எரியத் தொடங்கிய சூர்ப்பனகையின் கொல்காம மூச்சின் தழல் கருவானில் மின்னிடும் உடுக்களில் பட்டெதிரொளித்தது. வீணையின் தொன்மையான தந்திகளில் தொல்லிசை எழுந்தது. பறைகள் ஆயிரமும் மூச்சென உயர்ந்து வெறித்தன. ஆயிரம் உடுக்குகள் தலைசிலுப்பித் தோல்கள் அதிர்ந்தன. ஈசனை எழுப்பும் இசையென்றானவையில் எழுந்தாள் சூர்ப்பனகை. சிற்பன் ஒருகணம் விழிமூடித் திறந்து ஆடலின் முதலசைவை ஊழ்கம் கொண்ட போது திருதிகாவின் மலர் முகம் மின்னிப் பூரணையென்று வானில் ஒளிர்ந்தது. விண்ணிலிருந்த ஒளிவட்டத் தண்மதியில் …

80: விழவின் தெய்வம்

“எண்ணுவதே இறையென்றாகுவது. இறையின்றி இருத்தலும் எண்ணமே” என்றார் வேறுகாடார். இளம் பாணன் நாகதேவி ஆலயத்தின் மாபெரும் சிற்பங்களையும் நாகமென்ற ஒற்றை உயிரியின் எண்ணற்ற மடிப்புகளையும் புடைப்புகளையும் உக்கிரங்களையும் சாந்தங்களையும் வேட்கைகளையும் நெளிதல்களையும் அமைதல்களையும் அங்கற்று இருப்பதென்ற மயக்குகளையும் நோக்கிக் கொண்டிருந்தான். “இளம் பாணனே. இங்கிருப்பவை பல்லாயிரமாண்டுகளாக மானுடர் கண்ட நாகங்களின் விழிமணிகள் என்றறிக. ஒவ்வொரு முறை ஒருநாகம் கல்லாலயத்தில் அமைக்கப்படும் தோறும் எங்கோ எவரோ கண்களால் கண்டுற்ற அதன் வெளிச்சம் …

79: மாயச்சிறகுகள்

நீலழகன் பொற்தேரில் குருளையெனப் பாய்ந்து ஏறுவதை நோக்கிய தமிழ்ச்செல்வன் புன்னகை மீண்டான். ஒவ்வொரு முறை நீலன் உடலும் உளமும் சோர்ந்து நோயுறும் போதும் ஓரிழை புன்னகை தமிழ்ச்செல்வனிடமிருந்து உதிருவதை எவரும் அறியார். இரவின் மாயப்போர்வை பட்டினத்தை மூடுவதை தலையுயர்த்தி நோக்கியவன் தீப்பந்தங்களும் வெளிச்சத் தட்டுகளும் இரவின் வண்ணக் கலவைகளை பேரழகில் சுடர்ப்பதை நோக்கியிருந்தான். தன் தேரில் வீரர்கள் உதவியுடன் பிடிகோலை மேலே கொடுத்தவன் காயத்தொட்டிலைத் தூக்குவதைப் போல முன்னின்றும் பின்னின்றும் …

78: காலத்தூண்

விண்மீன்களின் முதல் விழிகள் ஒரு இமைப்பிற்குள் பல்லாயிரமென வானைச் சுடர்த்தன. விண்யாழி ஒவ்வொரு விண்மீனும் விழிப்பதைக் குழந்தைக் கண்களால் நோக்குபவளென வியப்புக் கொண்டிருந்தாள். முதல் நாள் களிவிழவை செருக்களத்தில் வித்தான மாவீரர்கள் விண்மீன்களாய் விழிகொண்டு நோக்குவர் என்பது குடி நம்பிக்கை. அன்று வானில் கோடிகோடியாய் விண்மீன்கள் துள்ளிப் பெருகும் என்பதை சிற்றிளமை முதலே அறிவாள் விண்யாழி. நீலழகனை நேர்நோக்கிக் காண்பதென்பது ஒவ்வொரு புலி வீரருக்கும் மீண்டும் மண்ணில் பிறப்பதென்றாகும் என்பது …

77: வட்ட மலர்

ஆழ்பிலவென நெடுநீட்டகம் கொண்டிருக்கும் அரசு சூழ்தல் கற்றவர்களின் உதட்டில் ஓயாது ஒளிரும் புன்னகைக்கு எப்பொருளுமில்லையெனப் பொன்னன் எண்ணினான். தமிழ்ச்செல்வன் பிடிகோலில் இடக்கரத்தை ஊன்றி அடிவேர் சாய்ந்து நிற்கும் தென்னையென அமைச்சர்களின் தேரில் வளைந்திருந்தார். அவரது முகத்தின் புன்னகையை நோக்கிய குடிகள் அவை தான் அந்த மந்திரப் புன்னகையெனக் கூவினர். அவர் தான் புன்னகைக்கும் பெருமதியாளர் எனச் சொல்லி மந்தணக் குரலில் வாழ்த்தினர். அரசு சூழ்தலில் புகழ்பெற்றவர்கள் அணியும் இரண்டு அணிகலன்களில் …

76: களித் தோழியர்

“களிப்பெருக்கையே மானுடர் முதன்மையாக விழைகின்றனர் என்பது பொய் இளம் பாணனே. இங்கு நீ காணுகின்ற ஒவ்வொருவரும் அடையும் களிக்கு அதன் மரக்கிளைகளையும் கனிகளையும் பூக்களையும் இலைகளையும் விட ஆயிரக்கணான துயர்கள் மண்ணினுள் ஆழத்து ஆழங் காண வேர்கொண்டு பரவி நிற்கின்றன. இருளின்றி ஒளியை அறியமுடியாதைப் போலத் துக்கங்களின்றி மகிழ்வையும் அறிய முடியாது. இளமையின் களி போதமற்றது. தன் செயல்களின் பொருளை அறியாதது. ஆகவே தூயதென்று ஆகக் கூடியது. முதிர்ந்து வருபவரின் …

75: பவனி

அமைச்சர்கள் முன்னிரையில் ஒருங்கியதும் சிறு முரசுகள் மும்முறை எழுந்தணைந்து விம்மின. சூரியன் பொற்தேரில் வந்தமைந்து தழல் முகம் எழுந்தது. ஒவ்வொரு வளைவும் புடைப்பும் சிற்பங்களும் மலர்ச்சரங்களும் ஒளித்தழல் சூடின. சூர்ப்பனகர் செருமியபோது தமிழ்ச்செல்வன் குனிந்து “அனைத்தும் ஒருங்கி விட்டன பேரமைச்சரே. இன்னும் சிலகணங்களில் அரசரும் அரசியாரும் எழுவர். இளவரசர்களும் தளபதிகளும் பின் தேர்களில் ஒருங்கிவிட்டனர்” என்றார். தமிழ்ச்செல்வனின் உதட்டில் புன்னகை இரு இதழ்களெனச் சுடர் கொண்டிருந்தது. மானுடர் கொள்ளும் மெய்யான …

74: அணியறை : 02

பேராடி அதிகனவெனத் தன்னைத் தான் விரித்துக் கொள்ளும் மாதோகையில் வண்ணங்களினாலும் மினுக்குகளாலும் சூழ்ந்தெழுந்திருந்தது. பதும்மை நோக்கிழக்காமல் உற்று நிற்பதை அடியாழத்தில் ஓர் பனிப்புல்லின் நுனித்தீண்டலென உணர்ந்தாள் விருபாசிகை. நலுங்கியவளின் முகம் சிரித்து உருகுவது போல் விரிந்தது. பதும்மை போதம் மீண்டு மெல்லக் காலடிகள் கொண்டு மென்பஞ்சு அடிகளால் நடக்கும் பூனைக் குட்டியென விருபாசிகைக்குப் பின்னால் நெருங்கிப் பேராடியில் ஒளிரும் அவளின் தேகத்தை நோக்கினாள். விருபாசிகையின் கூந்தல் சடைநாகமென நீண்டிருந்தது. வெண் …