அஞ்சலி : நன்மிளிர்

கவிஞரும் எழுத்தாளருமான நண்பர் ஆதி பார்த்திபனின் இரண்டாவது மகன் 26 நாட்கள் பிறந்திருந்த வேளை தொற்று ஒன்றினால் இரண்டு நாட்களுக்கு முன்னர் (21.10.2025) அன்று மரணமடைந்திருக்கிறார். அவருக்கு நன்மிளிர் என்று பெயர் சூட்டியிருந்தார்கள். இனிய பிஞ்சு மகன் உலகை பார்க்க முன்னரே பிரிந்து விட்டான். அஞ்சலிகள் மகனே. புத்திர சோகம் எந்த வயதிலும் கொடியது. உடலின் அனைத்து துயரங்களும் இன்பங்களும் வற்றிவிட்ட பிறகு உடலின் அனைத்து கண்ணீரும் புன்னகையும் வற்றி …

களியின் ஆன்மீகம்

ஒரு வானமும் ஒரு மரமும் மிச்சமிருக்கும் வரை மானுடத்தின் மீது நம்பிக்கை குன்றாதிருக்க வேண்டுமென ஒலிக்கும் கவிஞனின் குரலே ஆதி பார்த்திபன். ஈழத்துக் கவிதைகளில் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும் அதன் நுண்மைகள் பற்றிய வரிகளும் கீற்றுகளிடையே நிலவெனத் தோன்றிக் கொண்டேயிருப்பவை. வாழ்வை போரின் ஓவியத்துணியில் வரைந்து பார்த்தவை. போர் உச்ச கட்ட உணர்ச்சிகளின் கொல்லன் துருத்தி போன்றது. ஊதுந்தோறும் பல்லாயிரம் தீப்பொறித் துளிகளெனச் சீறியெழுபவை. தீ பொன்னின் நிறமென ஆவது …

ஒற்றைக்கோடை : அறிமுகக் குறிப்பு

கவிஞர் ஆதி பார்த்திபனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ஒற்றைக்கோடை தாயதி பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிறது. அந்த நூல் குறித்தும் ஆதி பார்த்திபன் மற்றும் ஈழத்து இலக்கிய சூழல் பற்றியும் சிறு கட்டுரை அகழ் இணைய இலக்கிய இதழில் வெளிவந்திருக்கிறது.

ஒற்றைக்கோடை

கவிஞரும் நண்பருமான ஆதி பார்த்திபனின் கவிதைத் தொகுதி தாயதி பதிப்பக வெளியீடாக ஒற்றைக் கோடை எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கின்றது. அதன் வெளியீட்டு நிகழ்வு தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் அவரைப் பற்றி எழுதிய குறிப்பொன்றை மீளவும் மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். தொடர்ந்து செயல் புரிக! * யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் அதன் சாம்பலிலும் தணலிலும் இருந்து எழுந்த முதல் தலைமுறைக் கவிஞர்கள் எதிர்கொண்டது இரண்டு வகையான அடிப்படைகளிலான வாழ்வை, …

நீர் என்பதும் ஒரு உயிர் வார்த்தை

நீ மோட்டர் சைக்கிள எடுத்திட்டு போவன் மச்சான், இல்லை சைக்கிள் என்டா நல்லமடா கதைச்சிட்டே போவம் என்றேன். ஆனால் உள்ளிக்கிருந்த பயம் இரண்டு வருடங்களாக மோட்டர்சைக்கிள் தொட்டதுமில்ல அதே வேளை லைசன்சுமில்லை, நண்பர்கள் இருவரும் அரைமனதாக சம்மதித்து ஒரே மோட்டார் சைக்கிளில் மூவரும் போவதென்று முடிவாகியது, எந்தத் தீர்மானமும் இல்லாமல் இடம் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஒரு அசட்டுத்தைரியத்துடன் வெளிக்கிட்டோம். எனது நண்பனுடன் பேசி விட்டு முதலில் அவனது …

செயற்களம் புகுவோருக்கு: 02

வரலாற்றின் திரைச்சீலைகள் சுன்னாகம் நிலத்தடி நீரில் அங்குள்ள மின்சார உற்பத்தி நிறுவனமொன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயில் மூலம் அந்தச் சுற்றுவட்டத்தில் நீர் மாசடைந்திருக்கிறது என்பதை நான் அறிந்த போது வருடம் 2015. விதை குழுமம் ஆரம்பித்த புதிது அது. பெப்ரவரி 14 காதலர் தினத்தில் காதல் கவிதைகள் வாசிப்பதற்கான நிகழ்வொன்றை யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்தோம். சுன்னாக நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் நண்பர்கள் …

காதலின் முன் பருவம்

யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் அதன் சாம்பலிலும் தணலிலும் இருந்து எழுந்த முதல் தலைமுறைக் கவிஞர்கள் எதிர்கொண்டது இரண்டு வகையான அடிப்படைகளிலான வாழ்வை, ஒன்று, அவர்களது இளமைக் காலம் யுத்தத்தின் ஏதோவொரு பகுதி நினைவைக் கொண்டது. அதே நேரம் அது நடந்து கொண்டிருந்த போது அவர்கள் இளையவர்கள். போர் உக்கிரமாக நிகழ்ந்த நிலத்திற்கு வெளியில் வேறொரு வாழ்வு நிகழ்ந்து கொண்டிருந்தது. உள்ளிருந்தவர்கள் அதன் மிகுதிகளையும் இறுதியையும் ஞாபகக் கிண்ணங்களில் ஏந்தினர். மற்றையவர்கள் …

மாயா மற்றும் மக்தலேனா சில சிலுவையில் அறையப்பட்டவர்களின் கதைகள்

(குறிப்பு: ஆதி பார்த்திபன், யுத்தத்திற்குப் பின் உருவான புதிய தலைமுறைக் கவிஞர்களில் முதன்மையானவர்களில் ஒருவர். அவரது பெரும்பாலான புனைவுகள் மற்றும் கவிதைகள் அன்பின் தீராத அலைவை, முன் பருவக் காதலின் குழப்பங்களையும் மனநிலைகளையும் எழுதிச்செல்பவை. இது இவரது ஆரம்பகால எழுத்துகளில் ஒன்று) கடிதம் ஒன்று அன்புள்ள ஜீஸஸ்இன்று உங்களைச் சிலுவையில் அறைந்து முதல் நாள், என்னால் அழாமல் இருக்கமுடியவில்லை இருந்தும், நீங்கள் புனிதமானவர் நானோ உங்களுக்குச் சற்றும் பொருத்தமில்லாதவள் என்பதால் …

மாற்றுக் குரல்

யாழ்பாணத்தைச் சேர்ந்த மாற்றுப்பாலினத்தவர்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட உரையாடல்களை கடந்த காலத்தில் இரண்டு முறை விதை குழுமம் ஊடாக நிகழ்த்தியிருந்தோம், முதலாவதாக அவர்களின் பிரச்சினைகளை அவர்களே உரையாடுவது நிகழ்ந்தது. அதில் பல விவாதங்களை நிகழ்த்தி சில முடிவுகளுக்கு வந்திருந்தோம். ஒரு பொது தளத்தை இதன் பொருட்டு உருவாக்குவதென்பது அவற்றுள் முக்கியமான ஒரு முடிவு. பிறகு சில மாதங்களின் பின் மறுபடியும் கூடி அதற்கான அமைப்பு கட்டமைப்பை உருவாக்குவது …