சிறகை : ஆவேசமான ஒரு பறத்தல்

ஈழத்து இலக்கியத்தில் புனைவுகள் மீதிருக்கும் அடிப்படையான சிக்கல்கள் மூன்று. முதலாவதான சிக்கல், புனைவுக்கான மொழியின்மை. இதைச் சுட்டிக் காட்டும் பொழுது பலரிடமும் குழப்பமான முகபாவனைகளையே எதிர்கொண்டிருக்கிறேன். என் சின்ன வயது முதல் ஈழத்துப் புனைவுகளைக் கண்டு ஓட்டமும் நடையுமாய் தப்பி ஓடிய நினைவுகள் வருகின்றன. தோராயமாக பத்து, பன்னிரண்டு வருடங்களாக புத்தக வெளியீடுகள், உரையாடல்களில் பங்கு பற்றியிருக்கிறேன். தலைப்பாடாய் அடித்து இதெல்லாம் இலக்கியமே இல்லை என பல உதாரணங்களைக் காட்டி …

சினிமாவா இலக்கியமா

சினிமாவா இலக்கியமா சரியாக ஒரு விடயத்தை கடத்தும். இது அரசியல் கேள்வி தான். தமிழர்களின் தேசநிலைப்பாட்டை இலக்கியங்கள் வாயிலாக நிறுவுவதா இல்லை சல்லியர்கள், மேதகு போல சினிமாக்களினால் விளங்கப்படுத்துவது சரியாக அதை கடத்துமா. தணிக்கை தடைகளை கடந்து உண்மை தாங்கும் அல்லது உணர்வு தாங்கும் பணி எதில் சரியாக அமையும். Rtr Kirishanth * வணக்கம், இலக்கியம் தான். அதில் மாற்றம் என்றும் நிகழ முடியாது. இலக்கியம் மொழியின் ஊடாக …

வரிக்கு வரி உண்மை

போரில்லாத காலத்தில் மன்னன் வேட்டைக்குப் போனது போல புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும் சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் உத்தேசிக்கும் போது அவை மிக விசாலமான பெரும் பரப்பு. அதனுள் பல வர்ண பேதங்களும், அழகியற் தரப்புகளும், வடிவ பேதங்களும் கூட உண்டு. ஆனாலும் அவற்றை எல்லாம் மேவி நாவல் எனும் கலை வடிவம் …

விமர்சகன் – கடிதம்

ஒரு பிரச்சனையும் அல்லது அதே போன்ற பல பிரச்சனைகளின் வெளிப்பாடு அல்லது அதற்கான தீர்வுகளை தேடும் ஒரு பொறி என்பதே படைப்புகள். படைப்புகளை உருவாக்கும் போது படைப்பினை பற்றிய அறிவு செறிவு மற்றும் அதன் பயன்பாட்டு நோக்கு மற்றும் அதன் வடிவமைப்பு அதற்கான பயணம் என்பதில் ஒரு படைப்பாளன் அருவுருவாகி நிற்கிறார். அவனில் அதை சென்று அடைய செய்யும் நுட்பங்களும் நுணுக்கங்களும் விளம்பரங்களாகவோ இல்லை இலக்கியங்களாகவோ நயங்களுடனோ எழுதி, வாசித்து, …