யாழ். சர்வதேச புத்தகத் திருவிழா : 2026
நல்லூர்த் திருவிழாவினை ஒட்டி நிகழும் யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா செப்டெம்பர் 5 – 9 வரை நல்லூரின் அருகில் உள்ள சங்கிலியன் பூங்காவில் நடைபெற இருக்கின்றது. ஆர்வமுள்ளோர் பயன் பெறுக.
நல்லூர்த் திருவிழாவினை ஒட்டி நிகழும் யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா செப்டெம்பர் 5 – 9 வரை நல்லூரின் அருகில் உள்ள சங்கிலியன் பூங்காவில் நடைபெற இருக்கின்றது. ஆர்வமுள்ளோர் பயன் பெறுக.
ஈழத்து புலத்தில் பண்பாட்டு ஆய்வுகளை பரந்துபட்ட தளத்தில் தொடர்ந்தும் வெளியிடும் எழுநா இதழின் 43 இதழினைத் தற்போது அவர்களின் இணையத்தளத்தில் வாசிக்க முடியும். வரலாறும் தத்துவமும் இலக்கியத்தின் இரண்டு சிறகுகள். ஈழத்து இலக்கியச் சூழல் இது இரண்டும் முயங்காத வெறுவெளி. வரலாற்று ஆய்வுகளுக்கு புனைவு வெளியில் பல அடுக்குகள் கொண்ட முக்கியத்துவம் உண்டு. காலகட்டத்தை புரிந்து கொள்ளவும், வரலாறு இயங்கும் ஓட்டத்தை அறியவும் ஒரு புனைவெழுத்தாளர் ஓயாது ஆய்வுகளை வாசிக்க …
ஜனவரி மாதத்திற்கான எழுநா இதழினை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்பதனை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம். தொடர்புகளுக்கு : இல 63. சேர்.பொன் இராமநாதன் வீதி,கலட்டிச் சந்தி, திருநெல்வேலி,யாழ்ப்பாணம்.+94 77 797 5029 எழுநா இணையத்தளம் : எழுநா
அண்மையில் செம்மணிக்கு அருகில் யாழ்ப்பாணத்து வரவேற்பு வளைவில் இடம்பெற்ற ‘வாசலிலே கிருசாந்தி’ எனும் செம்மணி தொடர்பான கவிதைகளின் புத்தக வெளியீட்டிலும் கிருசாந்தியின் நினைவு கூரலிலும் பங்குபற்றியிருந்தேன். எழுநா வெளியீடாக வந்திருக்கும் இந்தக் கவிதை நூலிலிருந்து நிலாந்தனின் ‘அமைதி நகரின் மனம்பெரிகள்’ கவிதையை அங்கு வாசித்தேன். கவிதை வாசிப்பின் சிறு முற்பகுதி விடுபட்டிருக்கிறது. எஞ்சியதை பதிவிட்டிருக்கிறேன். செழியனின் கவிதை வரியைப் போல, “எஞ்சியிருப்பவை கரித் துண்டுகளே ஆயினும் எழுதியே முடிப்போம்”. ஒளிப்படம் …
எழுநா இதழும் அவர்களது பதிப்பகமும் ஈழத்தை மையமாகக் கொண்ட ஆய்வுகளையும் வரலாற்று உரையாடலையும் தொடர்ச்சியான செயலூக்கத்துடனும் முறையான ஒழுங்கமைப்புடனும் நிகழ்த்தி வருகிறார்கள். அவர்களது புத்தக மன்றம் செயற்பாட்டில் இணைய விரும்புபவர்கள் கீழ்வரும் வகையில் அவர்களது பெருஞ்செயலுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கலாம். * ‘ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறார். வாசகர்கள் அதை முழுமைப்படுத்துகிறார்கள்’ எழுநா புத்தக மன்றம், வருடாந்தச் சந்தாவை அடிப்படையாகக் கொண்டது. இதில் இணைவதன் மூலம் எழுநாவின் …
யாழ்ப்பாணப் பட்டினத்திற்கு வந்த முதல் டச்சு பிரிடிகென்டின் பெயர் பிலிப்பஸ் போல்தேயஸ். இவரது பெயரையும் இவர் பற்றிய கதையையும் முதன்முதலில் எனக்குச் சொன்னது என் துணைவி பிரிந்தா. அவரது ஆய்வுக்காக யாழ்ப்பாணம் தொடர்பிலான முதல் ஓவிய வழியிலான ஆவணங்களை அவர் ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது போல்தேயசின் பெயரையும் அவரது நூலில் உள்ள ஓவியங்களே யாழ்ப்பாணம் தொடர்பில் நமக்கிருக்கும் முதல் காட்சி ஆதாரங்கள் எனச் சொல்லியிருந்தார். 2019 இல் இலங்கையில் சுவரோவியங்களை …
ஈழத்திலிருந்து வெளிவரும் ஆய்விதழான எழுநாவின் 33 ஆவது இதழ் வெளியாகியிருக்கிறது. வரலாறு மற்றும் பண்பாட்டின் மீதான மறுவாசிப்புகளையும் உரையாடல்களையும் நோக்கி நம் சமூகத்தின் பார்வை குவிக்கப்பட வேண்டும். விவாதங்களின் வழி அவை மேம்படுத்தப்படல் வேண்டும். அதற்கான களமாக மேலெழுந்து தொடர்ச்சியாக விசையுடன் இயங்கும் இதழ். இணைப்பு : எழுநா இதழ் 33
எழுநா இணைய இதழில் தி. செல்வமனோகரன் எழுதி வரும் நாட்டார் தெய்வங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் முக்கியமானவை. ஈழத்து நாட்டார் தெய்வங்கள் குறித்த வரலாற்று மற்றும் சமகாலப் பயில்வுகள் குறித்த புறச்சித்திரத்தை அளிப்பவை. வாசிப்பில் ஒரு நேர்கோட்டை இழுத்துக் கொண்டு செல்வது போல ஒன்றன் பின் ஒன்றாக நீள்பவை. உள்ளூர் பயில்வுகளையும் தெய்வங்களையும் அறிமுகம் செய்து கொள்வது புனைவெழுத்தாளர்களின் கனவுகளை நிரம்பச் செய்ய உதவும். நமது பண்பாட்டு மனத்தை உண்டாக்கிக் …