தாயும் தோழியும்

ஈழவிடுதலைப் போராட்டம் உருவாக்கியளித்த நியாயங்களினதும் அற மீறல்களினதும் குரல்களில் ஒளவை முக்கியமானவர். வரலாற்றின் இடர்காலங்களில் மனித மாண்பினை நினைவுறுத்தும் குரல்கள் கவிதையில் எழுவதுண்டு. அவை எதிர்கொள்ளும் வரலாற்றுத் தருணங்களை தன் அனுபவத்திலிருந்து மொத்த மக்கள் திரளின் கூட்டு எதிர்காலம் குறித்த பார்வையாக விரித்தெடுக்கக் கூடியவை. ஒளவை அத்தகைய குரலாக ஈழத்தில் எழுந்தவர். தன்னை மின்மினியெனக் கண்டெடுக்கும் பெண் தன்னிலையும் போருக்குச் செல்லும் போராளியின் தன்னிலையும் ஒருங்கு திரளும் இணைவு ஒளவையில் …

ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 01

‘முதலில் உங்கள் சகோதரனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்’—மத்தேயு 5:24 பைபிளில் உள்ள கதையொன்றின்படி ஆதாமினதும் ஏவாளினதும் மூத்த மகன் காயீன், இளைய மகன் ஆபேல். இருவரும் தங்கள் விளைச்சல்களிலிருந்து காணிக்கையை கடவுளுக்குச் சமர்ப்பிக்க வருகிறார்கள். கடவுள் ஆபேலின் காணிக்கையில் மகிழ்கிறார். இதனால் கோபமுற்ற காயீன் தனது சொந்தச் சகோதரனாகிய ஆபேலைக் கொல்கிறான். அதன் பின், கடவுள் காயீனிடம் உன் தம்பி எங்கே என்று கேட்கிறார். காயீன், …

எரியும் நெருப்பும் காற்றில்: 02

சிவரமணியின் வாழ்வும் கவிதையும் என்ற தலைப்பில் சித்திரலேகா மெளனகுரு சிவரமணியின் கவிதைத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை அக்காலட்டத்தின் மகத்தான ஆவணங்களில் ஒன்று, அதன் பின்னணியில் 1985 இலிருந்தான விடுதலைப்போராட்டத்தின் தன்மை மாற்றத்தைத் தீர்க்கமாக எதிர்கொள்கிறது அவ்வாவணம். அதிலிருந்து இந்த ஆக்கத்திற்குத் தேவையான பகுதிகளை இப்பகுதியில் சேர்த்திருக்கிறேன். * “சிவரமணி யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். குடும்பத்தில் இரு பெண் பிள்ளைகள். சிவரமணி மூத்தவர். சிவரமணியின் தந்தையார் …

சூல் கொளல்: 03

1980 காலகட்டத்தில் தமிழ்த்தேசியவாதம் முற்போக்கான ஏற்புடமையுடன் மக்களை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது. பெண் கவிஞர்கள் தேச விடுதலையில் தமக்கான பாத்திரத்தை வரித்துக் கொண்டனர். இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளுக்குள் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களும் சித்திரவதைகளும் வன்புணர்வுகளும் படுகொலைகளும் ஆயுதம் தாங்கி இராணுவத்தை அழிக்கும் ஆவேசத்தை வழங்கியிருந்தன. 1986 இல் பெண்கள் ஆய்வு வட்ட வெளியீடாக வந்த சொல்லாத சேதிகள் தமிழ்ச் சமூகத்திற்குள் உண்டான பெண்ணிய நோக்கிலான விடுதலை …

எரியும் நெருப்பும் காற்றில்: 03

அன்னா அக்மதோவா பற்றி நட்சத்திரன் செவ்விந்தியன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அக்மதோவாவை வாசிக்கும் பொழுது சிவரமணி அக்காவும் புலிகளால் கடத்திக் கொல்லப்பட்ட செல்வி அக்காவும் அவரது காதலரும் நினைவுக்கு வந்ததாக எழுதியிருந்தார். இந்த நினைவிலிருந்து ஒரு பொறி என்னில் ஒட்டியிருந்தது. நீண்ட காலம் கழித்து சிவரமணியின் இறுதிக்கால எழுத்துகளை வாசித்த போது நாம் நமது அன்னாவை இழந்து விட்டோம் என்றே தோன்றுகிறது. மகத்தான கூர்மையும் ஆழுள்ளத்தின் குரலை ஒலிக்கும் …