களத்திற்கு வருக!

எழுத்தாளர் கருணாகரன் புதியதாக இணையத்தளம் உருவாக்கியிருக்கிறார். அதில் அவர் தொடர்ந்து எழுதுவது பல வகையில் முக்கியமானது. முதன்மையாக முகநூல் சில்லறை விவாதங்களுக்கு வெளியே இணையத்தளங்களில் விவாதிப்பது இலக்கியத்தை மட்டுமே முதன்மை நோக்கமாக கொள்ளும் வாசகர்களை உருவாக்கும். என் தளம் ஆரம்பித்து மூன்று வருடங்களில் அதை நன்றாகவே உணர முடிகிறது. முகநூல் ஒரு அரட்டை வெளி. அங்கு தீவிர இலக்கியத்தை விவாதிப்பது போன்ற நேரவிரயம் பிறிதில்லை. தேநீர்க் கடைச் சாக்குப் போல …

மாலு பாண் விற்பவர்

||பிழைப்புவாதத்திற்கும் விருது ரியாஸ் குரானா படைப்பாளிகள் என்பவர்கள் சமூகத்தின் மனச்சாட்சியாக இருக்க வேண்டும் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பில், ஆளும் வர்க்கத்தின் ஏவலாட்களாகச் செயல்படும் அறிவுத்துறைத் துரோகத்தின் ஆகச்சிறந்த அடையாளம் கவிஞர் கருணாகரன். இது வெறும் பிழைப்புவாதத்தைக் கடந்த ஒரு கருத்தியல் வக்கிரம். தனது துரோகங்களையும் அரசியல் சமரசங்களையும் தந்திரமாக மூடிமறைக்க அவர் அரங்கேற்றும் நாடகங்கள் எந்தவொரு முதலாளித்துவத் தந்திரசாலியையும் மிஞ்சக் …

சிலந்தி வலையில் ஒரு பனித்துளி

  “எல்லா நிச்சயமின்மைகளுக்கும் அப்பால் இந்த வானத்தின் நிரந்தரம் என்னைத் திகைப்பூட்டிக் கொண்டேயிருக்கிறது” கருணாகரன்   தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இவ்வருடத்திற்கான இயல்விருது ஓவியர் ட்ரோஸ்கி மருதுவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் கருணாகரனுக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2026 இற்கான கவிதைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஈழத்து இலக்கியத்தின் விடுதலைப் போராட்டத்தின் பெருநீரோட்டத்தில் கருணாகரனளவுக்கு தவிப்பும் கொந்தளிப்புமான கவிஞனின் குரல் இல்லையெனவே நினைக்கிறேன். விடுதலைப் போராட்டம் நெடுகிலும் அதன் மைய விசையோடு சேர்ந்தியங்கிய …

பன்றியுமாய் அன்னமுமாய் சோதியுமாய்

  தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் தமிழ்பல்லவி எனும் இதழ் தனது நாற்பதாவது இதழினை ஈழத்துச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. அவ்விதழில் எழுத்தாளர் கருணாகரனின் நேர்காணல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. போருக்கு பிந்தைய வாழ்க்கை, இலக்கியச் சூழல் பற்றியே கேள்விகள் மையங் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு கேள்விக்கான பதிலின் ஒரு பகுதியில் கருணாகரன் இப்படி பதிலளிக்கிறார், “இன்னொரு தரப்பினர் போர் உண்டாக்கிய அனுபவங்களின் நிலைநின்று பேச விளைகிறார்கள். குறிப்பாகப் போரையும் அது உண்டாக்கிய பாதிப்பையும் …

‘கனவே திறந்து விடு, உன் கதவை’  

(கருணாகரன்) ‘இந்த உலகம் நம் முன் கற்களால் எழும்புகிறது’ கிரிசாந் எழுதிய ‘பால்யம்’ என்ற கவிதையில் இந்த வரிகளைப் படித்தபோது ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். ஏறக்குறைய இதையொத்ததாகவே சிவரமணியும் எழுதினார். ‘…இரவு; இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்; நாளைக் காலையில் சூரியன் உதிக்குமா என்பதில் கூட சந்தேகம் கொண்டுள்ள என்னிடம் கனவுகள் தம் அர்த்தத்தை இழந்தவைதான்..’ ‘… வெளியே பதற்றமற்று மௌனமாய் நிற்கும் மரங்களின் நிழல்கள் கீழே கிழிந்து போயுள்ளன…’ …

ஆட்டுக்குட்டி சுவேதா : குறிப்பு

பொங்கல் பரிசாக, கிரிசாந்தின் கதையைப்படித்தேன். அன்பும் காருண்யமும் உணர்ச்சிகளின் மோதுகையும் இணைகையுமே வாழ்க்கை என்பதை உணர்த்தும் கதை. மனிதர்கள் ஒருபோதும் மனிதர்களோடு மட்டும் வாழ்வதில்லை. அப்படி வாழவும் முடியாது. அவர்கள் சூழலோடு இணைந்தே வாழ்கிறார்கள். அந்தச் சூழல் அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாமே தவிர, சூழலை நீங்கி வாழ முடியாது. இங்கே சுவேதா என்ற ஆட்டுக்குட்டியின் உலகமே கதையாகியுள்ளது. அந்தக் குட்டி வாழ்கின்ற சூழலில் உள்ள மனிதர்கள், நாய்கள், …

பொன் நாள்

இன்றோடு ஐம்பது கவிஞர்களை எனது சிறு குறிப்புடன் பட்டியலாக்கமும் செய்து முன்வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒருவரெனக் கவிஞர்களுடனும் கவிதைகளுடனும் வாழ்ந்த இப்படியொரு காலம் வாழ்வில் முதல் முறையாக நிகழ்ந்திருப்பது. இத்தனை வருட வாசிப்பின் வழி எனக்குள் சேகரமாகிவரும் கவிதை பற்றிய மதிப்பீடு, பார்வைகளை உருவாக்கிய இக் கவிஞர்கள் என் முன்னோடிகள். ஒவ்வொருவரையும் மதிப்புடன் இக்கணத்தில் வணங்கிக் கொள்கிறேன். சதீஷ்குமார் சீனிவாசன், தர்மினி, ரஜிதா, ஆதி பார்த்திபன், பிரியாந்தி அருமைத்துரை, யோகி, …

கண்ணீர் மிக்க ஒளியுடையது

ஈழக் கவிதைகளின் மொழியுள் தேச விடுதலை என்ற கனவுடன் எழுந்த கவிஞர்களில் அக்காலம் முழுவதிலும் அதன் பின்னரும் சக பயணியாயும் சாட்சியாயும் எழுதப்பட்ட கவிதைகள் கருணாகரனுடையவை. அவரது மொழி தளும்பும் குடத்தின் நீராட்டம் போன்றது. அதற்குள் எப்பொழுதும் முடிவுறாத குற்றவுணர்ச்சிகளினதும் பொறுப்பேற்றலினதும் குரல் தளும்பிக்கொண்டேயிருக்கும். உறுதியான நம்பிக்கைகள் எரியும், பின்னர் அது நீறாகும், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அவரது கவிதைகள் தொடர்ந்து அலைந்து கொண்டேயிருக்கும். குற்றவுணர்ச்சியின் முனைகள் மொழியுள் முளைக்கும் …