புத்தகங்கள் மீதான தடை

இலங்கை அரசின் தமிழ் புத்தகத் தடைக்கு எதிரான கண்டனமும் கூட்டு அறிக்கையும் “ஒரு புத்தகத்தைத் தடை செய்வது என்பது ஒரு  எழுத்தாளரின் ஒற்றைக் குரலை மட்டும் ஒடுக்குவதல்ல, மக்களின் நினைவுகளையும் அறியும் உரிமைகளையும் அழிப்பதாகும்” இலங்கை அரசு தொடர்ச்சியாக தமிழ்ப் புத்தகங்களைத் தடை செய்து வருகிறது. சுங்கத் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு  அமைச்சு ஆகியன பொறுப்பற்ற முறையிலும், தெளிவான காரணங்களின்றியும் தமிழ்ப் புத்தகங்களைத் தடுத்து வருகின்றன. இந்தத் தடைகள் சுதந்திரமான …

எப்போதும்

ஒரு திசையில் கொடி சுழற்றினர்மறு திசையில் கொடி பிடித்தனர் ஒரு வானத்தின் கீழ் எல்லாம் நிகழ்கின்றன ஒரு காற்று வீசுகிறதுமறு காற்று எரிகிறது ஒரு வழியில் மலர் தூவப்பட்டிருக்கிறதுமறு வழியில் கண்ணீர் இறைக்கப்பட்டிருகிறது ஒரு மரத்தின் கீழ் எல்லாம்சொரிகின்றன ஒருவர் மறக்கிறார்இன்னொருவர் மறக்க மாட்டேன் என்கிறார் ஒரு கனவு பலிக்கிறதுமறு கனவு தீகின்றது ஒரு பூமியில் எல்லாம் விளைகின்றன பொன்னும் பிணமும்சாவீடும் மங்களமும். (2021) ஒளிப்படம் (2024) : பிரபாகரன் …

நீருக்கடியில் ஓடிக்கொண்டிருக்கிறது திமிங்கலம்

கவிஞர்கள் ஒரு கால கட்டத்தின் குறியீடாக மாறக்கூடிய அரிதான நிகழ்வுகள் நடக்கும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு கம்பீரமான குறியீடாக பாரதியார் எப்படி மாறினாரோ, அப்படி ஈழப் போராட்டத்தின் ஏராளாமான சம்பவங்களுக்கான, குறிப்பாக சித்திரவதைகள், இயக்கங்களினுடைய அநீதி, அரசினுடைய அடக்குமுறை, சமூகத்தினுடைய புறக்கணிப்பு போன்ற எல்லாவற்றிற்கு ஊடாகவும் தொடர்ந்து பயணித்து எப்படி ஒருவன் கவிஞனாக ஆகிறான், தொடர்ந்தும் அந்த நம்பிக்கையோடு போராடுகிறான். அதனூடாக தனது வாழ்க்கையை எப்படி ஒரு குறியீடாக …

பெண் நடந்த பாதை

என்னுடைய இளம் வயது முதல் கோயில்களின் உள்ளே செல்வது மிகவும் குறைவு. அதன் அழகியல் சார்ந்த அம்சங்களை ஒருதடவையிலேயே கிரகித்துக் கொள்வது தான் வழமை. அதற்குப் பின் அங்கு செல்வதற்கோ பார்ப்பதற்கோ எதுவுமில்லை. வெகு ஆழமாக எனக்கும் கோயில்களுக்குமிடையில் இடைவெளியொன்று எப்பொழுதுமே உண்டு. ஆனால் திருவிழாக்களைப் பொறுத்த வரையில் சிறு வயது முதலே அதன் நறுமணம் வீசும் தெருக்களின் மீதும் கண்ணொளிரும் விளக்குகள் மீதும் பல்வேறு அடையாளங்களுடன் விரியும் காட்சிகள் …

இன்னும் எவரெவர் கால்களில் விழ வேண்டுமோ?

முன்னெப்போதுமில்லாத அளவு சமூக வலைத்தளவாசிகளும் மக்களும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு முன்வர ஆரம்பித்திருக்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற உண்ணாவிரதத்தில் இரண்டாவது நாள் மதியத்திலிருந்து அது முடியும் இறுதித் தருணம் வரை அந்த போராட்டப் பந்தலையே சுற்றிக் கொண்டிருந்தேன். இரவில் அந்த உண்ணாவிரதிகளுடன் உரையாடுவதும், பகலில் வரும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்களின் எண்ணவோட்டங்களையும் பார்த்துக்கொண்டிருப்பதுமாக மூண்டு பகல் மூன்று இரவு அங்கு தான். மக்களின் போராடும் உரிமையை நான் மதிக்கிறேன். ஆனால் எல்லாப் …

ஆகாயத்தில் ஒரு வாக்கு

யுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் “நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆகாயத்தில் ஒரு வாக்குக் கேட்டது, யேசு சொன்னார், நீ வீடு கட்டி முடிப்பாயடி எண்டு. அது பலிச்சது. அது மாதிரி மேல் லோகத்தில இதுக்கெல்லாம் ஒரு தீர்ப்பு இருக்கெண்டு நம்பிறன். எங்கட பிள்ளையள கொண்டு, கொத்தி எறிஞ்சு போட்டாங்களோ தெரியாது. மைத்திரியும் சொல்ல மாட்டான், மகிந்தவும் சொல்ல மாட்டான். அதையெல்லாம் யேசுதான் பார்த்துக்கொள்ளுவார். நான் யேசுவ …