எப்போதும்

ஒரு திசையில் கொடி சுழற்றினர்
மறு திசையில் கொடி பிடித்தனர்

ஒரு வானத்தின் கீழ் எல்லாம் நிகழ்கின்றன

ஒரு காற்று வீசுகிறது
மறு காற்று எரிகிறது

ஒரு வழியில் மலர் தூவப்பட்டிருக்கிறது
மறு வழியில் கண்ணீர் இறைக்கப்பட்டிருகிறது

ஒரு மரத்தின் கீழ் எல்லாம்
சொரிகின்றன

ஒருவர் மறக்கிறார்
இன்னொருவர் மறக்க மாட்டேன் என்கிறார்

ஒரு கனவு பலிக்கிறது
மறு கனவு தீகின்றது

ஒரு பூமியில் எல்லாம் விளைகின்றன

பொன்னும் பிணமும்
சாவீடும் மங்களமும்.

(2021)

ஒளிப்படம் (2024) : பிரபாகரன் டிலக்சன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *