ஒளிநாகம் – சதீஷ்குமார் சீனிவாசன்

நிழல் புற்று இந்த நிழல் ஒரு புற்று இருள் கூடி இருள் கூடித் தணியும் வெளிச்சப் பரல்கள் அந்திகளின் வழக்கத்தில் வழி தவறினேன் இன்னாரில்லை சென்றுசேர மனம் தவறி உடைகின்றன பொருட்கள் உடனிருந்தாலும் அன்பில்லை தூரத்தில் ததும்புகிறது கானல் உலகு நிழல் புற்று படிகிறது சொற்களில் நேர்மையிழந்த சொற்கள் யாருக்கு என்ன விலை எதற்கு எந்த விலை பாலங்கள் முடிந்தாக வேண்டிய நிர்பந்தங்கள் வீடுபோய் சேர வேண்டும் மயங்கள் தீர …

மலர்தலின் எந்த அமைதியுமின்றி

தர்மு பிரசாத்திடம் சுகுமாரனின் கவிதைகளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்த போது ஒரு அவதானத்தைச் சொன்னேன். இன்றளவும் சுகுமாரனின் முதற் கவிதை நூலான கோடை காலக் குறிப்புகள் தமிழ் வாசிப்புச் சூழலால் தொடர்ந்து நினைவு கூரப்படுகிறது. அவர் அந்தத் தொகுதியின் கவிதைகளில் வெளிப்பட்ட சீற்றமும் கொந்தளிப்புமான இளங் கவியாகவே இன்றளவும் முதன்மையாக மதிக்கப்படுகிறார். அது ஒரு வகையில் எதிர்மறையானது. அவரது நீண்ட நெடிய இன்றளவான எழுத்துகள் மீது மீண்டும் சிறிய வட்டமே …

தெய்வங்களும் பாதாள நாகங்களும்

காதலிலும் காமத்திலும் ஆண் மனம் கொள்ளும் எதிர்நிலைகள் கவிதையில் இருமுனையும் கூர் கொண்ட மீன்முள்ளுகள் போல. அது ஒன்றினது இரு திசைகளெனவும் ஒரே உலோகத்தின் குளிரும் வெப்பமுமென ஆகுபவை. காதலும் காமமும் ஆண் மனதிற்குள் இரண்டு தனித்தனியான கதாப்பாத்திரங்களாகவே நிகழக்கூடியவை. அதற்கு அச்சமில்லை, குற்ற உணர்ச்சியில்லை, பல வேளைகளில் மானுட அடிப்படைகள் கூட இருப்பதில்லை. ஆண் காதலின் உலகம் கண்ணீரும் புனிதமும் பெருக்கெடுத்து ஓடுவதாக நிகழும் அதே வேளையில் அதன் …