சலாங்கையா – கடிதம்

அன்புடையீர், வணக்கம் “தளம்” இதழை அதன் ஆசிரியர் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். “உங்கள் அண்ணனைப் பற்றி ஒரு சிறுகதை,வந்திருக்கிறது படித்துப் பாருங்கள்” என்று போன் செய்திருந்தார். நான் தெளிவத்தையின் தம்பி. தமிழ்நாட்டில் இருக்கின்றேன். அண்ணனின் சிறுகதைகளை நிறைய வாசித்திருப்பீர்கள். முதற்கண் அதற்கு நன்றி. அண்ணனுடைய அனைத்து சிறுகதைகளும் 59 ம் ஒரே நூலாக தொகுத்து வெளிவந்திருக்கிறது. தாங்கள் எங்கே இருக்கிறீர்கள். வெளிநாட்டிலா. சத்துரு கொன்றான் மட்டகளப்பில் இருக்கிறது என்று நினைக்கிறேன். …

சலாங்கையா – சிறுகதை

மலைப் பாறையின் இடையில் சிக்கிக் கொண்டது போல என் வலக்கை விரல்கள் அவரது கையால் உறுதியாகப் பிடிக்கப்பட்டிருக்க, தோளில் மறுகையைப் போட்டுக் கொண்டு “எங்கள ஏத்துக்குங்கன்னு சொல்லல. புரிஞ்சுக்குங்கன்னு தான் சொல்லுறன்” என்றார். நடுக்கமற்ற உடுக்கொலி போன்ற கார்வை கொண்ட குரல். குமிழ் விளக்கின் மஞ்சள் ஒளி அவரில் விளாசிக் கொண்டிருந்தது. கரிய பாறையில் நீர்மினுக்கம் போல. மின்னும் மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால் பருத்த மீன்கள் போன்ற கண்களில் சுருக்கமான …