லீலி – கடிதம்
கதை நல்லா இருந்தது. உங்க கவித்துவமான மொழி நடை, இந்த கதையை ஒரு படி மேலெடுத்து செல்கிறது. “காதலைத் தட்டி எழுப்பாதீர்…தானே விரும்பும் வரை” இந்த ஒற்றை வரி மொத்தக் கதையையும் தாங்கி நிற்கிறது. ரோசி சிஸ்டருடான லீலி அம்மாவின் உறவு பற்றி வெளிப்படையாக சொல்லாமல் செல்வதும், அதே போல் மிர்னாவிற்கும், லீலிக்கும் உள்ள உறவும்… லீலியின் அம்மா அப்பாவின் சாவு நிகழ்வை பற்றிய உங்க சித்தரிப்பு பதைக்க வைத்தது. …
