லீலி – கடிதம்

கதை நல்லா இருந்தது. உங்க கவித்துவமான மொழி நடை, இந்த கதையை ஒரு படி மேலெடுத்து செல்கிறது. “காதலைத் தட்டி எழுப்பாதீர்…தானே விரும்பும் வரை” இந்த ஒற்றை வரி மொத்தக் கதையையும் தாங்கி நிற்கிறது.  ரோசி சிஸ்டருடான லீலி அம்மாவின் உறவு பற்றி வெளிப்படையாக சொல்லாமல் செல்வதும், அதே போல் மிர்னாவிற்கும், லீலிக்கும் உள்ள உறவும்… லீலியின் அம்மா அப்பாவின் சாவு நிகழ்வை பற்றிய உங்க சித்தரிப்பு பதைக்க வைத்தது. கதையின் முடிவில் “என் லீலி விழித்துக் கொண்டாள்” என்பதும் … ஒரு open end போலத்தான் எனக்கு தோணுது. அந்த உறவை தொடர்கிறாளா? முடித்துக் கொள்கிறாளா?… மூப்பரின் கதையை என்னால் இன்னும் லீலி கதையோடு பொருத்திக் கொள்ள இயலவில்லை.

மீண்டும் மீண்டும் வாசிக்க கதை இன்னும் விரிந்து வரும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள் கிரிசாந்.

மதுபாலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *