பொன்னிதழும் முதலிதழும் 

ஈழத்து வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கான இதழான எழுநாவின் ஐம்பதாவது இதழ் வெளியாகியிருக்கிறது. ஈழத்துச் சூழலில் வரலாறு, பண்பாடு, அரசியல், சூழலியல் என பல துறைசார் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். தொடர்ச்சியாக ஓர் ஆய்விதழ் இயங்குவதற்கான புறச்சூழல் அரிதாக இருக்கின்ற பின்னணியில் இத்தகையதொரு தொடர் முயற்சி ஒருவகை சாகசப் பயணமே.  சில முக்கியமான தொடர்களாக நான் கருதுபவை, மயூரநாதனின் வரைபடங்கள், கொலனித்துவ காலம் தொடர்பிலான கட்டுரைகள். தி. செல்வமனோகரனின் நாட்டார் …