முதுவான் கவிதைகள்

உலகிலே பேசப்படும் மொழிகளிலெல்லாம் காதல் அரும்பவும் தழைக்கவும் பூக்கவும் கூடிய யாவிலும் உள்ள பொதுத்தன்மைகள் மாறாது. காதல் எங்கு பூப்பினும் அதன் சுகந்தம் பரவிக் கொண்டேயிருப்பது. ஆதார விசைகளில் காதல் உண்டாக்கும் மாயங்கள் ஒன்று போலவே தோன்றுவது மானுட இயல்பு. கேரளப் பழங்குடிகளில் பதினொரு மொழிகளில் பதினெட்டுக் கவிஞர்களின் கவிதைகளை நிர்மால்யா மொழிபெயர்த்து தன்னறம் பதிப்பக வெளியீடாக ‘கேரள பழங்குடி கவிதைகள்’ எனும் பெயரில் வெளிவந்திருக்கிறது. இத் தொகுப்பில் அசோகன் …

அதிகாலையை எழுப்பியது குற்றம்

பழந்தமிழ் இலக்கியங்களை அவற்றின் சொல்லிணைவுகளின் வடிவிற்காக சிறுவயதில் வாசித்திருக்கிறேன். இரண்டு சொற்கள் இணையும் போது உண்டாகும் இழைவு பொன்னணியில் வைரச் சுட்டிகை போற் துலங்கும். இன்னொரு பருவத்தில் அதன் இசைக்காக வாசித்திருக்கிறேன், சொல்லும் போது தோன்றும் தாளம், மனம் குதூகலித்து அடையும் மனக்கால்களின் ஒலியெழ கூச்சலெனத் திரண்டு மெளனமென ஆகும் வரை அச்சொற்களின் இசை கேட்டு ஆடியிருக்கிறேன். பின்னர் அவற்றின் உள்ளுள்ள காட்சியினதும் கதையினதும் இணைவினால் உண்டாகும் வேறொரு வாசிப்பினை …

தும்பி: அருகும் கனவுகளின் பேரிறக்கை

ஐந்து வருடங்களுக்கு முன் எமது பசுமைச்சுவடுகள் அமைப்பு தொடங்கி சிறுவர்களுக்கான உரையாடல்கள், கதைகூறல்கள் ஆரம்பித்த காலகட்டங்களில் கிரிசாந் மூலமாக தும்பியின் அறிமுகமும், தன்னற வெளியீடுகள் பற்றியும் அறிந்தோம். செயற்பாட்டு தளங்களில் வாசிப்பின் தொடரியக்கத்திற்கு இவை இரண்டின் மூலமாகவும் பெற்றுக்கொண்ட வாழ்வென்பது கனவு போலிருக்கின்றது. அவையே என்னைச் செதுக்கி இருக்கின்றன. குக்கூ மற்றும் தன்னறத்தின் வெளியீடுகளாக எமது அமைப்பிற்கெனப் பெற்றுக்கொண்ட புத்தகங்களில் வாழ்வதற்கான கருணையும், எளிமையும் மட்டுமே திருப்பத் திருப்ப சொல்லப்பட்டன. …

மிடிமை

கவிஞர்கள் இவ்வுலகின் மிடிமைகள் மீது கொள்ளும் கோபமென்பது இல்லாமையின் மீது உருவாகும் அனல். கவி தன் சொற்களில்லாத வேளையில் மாபெரும் இன்மையில் உழல்பவர். இல்லாமை கொன்று போடும் கோபத்தின் எல்லைக்குச் செல்வது பாரதியின் சொற்களிலும் வழிவது. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்ற கோரிக்கையில் என்ன நியாயம் இருக்க முடியும். ஒருவனுக்காக அனைத்தையும் அழிப்பதா! யூமா வாசுகியின் தீராத கணக்கு கவிதையில் உள்ள கனல் பாரதியின் …

கருணையின் முன் நீட்டப்படும் கை

தும்பி சிறுவர் இதழை ஈழத்தமிழர்கள் ஏன் வாங்க வேண்டும்? இப்பொழுது அவ்விதழ் நிறுத்தப்படும் அறிவிப்பு வெளியாகியிருக்கும் வேளையில் ஈழத்தமிழர்கள் எவ்விதம் அவர்களின் செயல்களுக்குக் கைகொடுக்கலாம்? அவர்களது இவ்விடர் நேரத்தில் நாம் ஏன் உடனிருக்க வேண்டும்? ஒரு தமிழர் எதற்காகத் தும்பி இதழை வாங்க வேண்டும்? ‘ஆகப் பெரிய கனவு’ கட்டுரையைத் தொடர்ந்து இத்தகைய கேள்விகளை என்னிடம் பல நண்பர்கள் கேட்டிருந்தனர். அதனை ஒரு நல்விளைவெனவே கொள்கிறேன். பலருடைய ஆர்வமும் என்னையும் …

குறையொன்றுமில்லை…

நவீன தமிழில் குழந்தைகளைப் பற்றி எழுதப்படும் கவிதைகளை கூர்ந்து அவதானித்து வருகிறேன். கவிகளின் மனதளவில் மிக அதிகமான குழந்தைகள் பழைய தத்துவார்த்தச் சுமைகள் நீங்கி பையப் பைய நடந்து வந்து சிரிப்புக் காட்டி, தம் ஆசைகள் விரித்துப் பறக்கிறார்கள். போகன் சங்கர், ஆனந்த் குமார், சபரிநாதன் மூவரதும் கவியுலகில் உள்ள குழந்தைகளின் தன்மைகள் அவர்களால் ஈடேறும் கவித்துவ உண்மைகள் முக்கியமானவை. * நண்பரின் மகள்ஒலி நீக்கம் செய்யப்பட்டஒரு உடலுக்குள்இருபதாண்டு காலம் …

முத்து

எல்லா வகையிலும் விசாரணை செய்யப்பட்ட சிறுவனொருவன்சிரித்துக் கொண்டே மகத்தான பொய்களைச் சொல்லிக்கொண்டிருந்தான்அவன் சொல்லும் பொய்களை அளந்து எடுக்க எந்தக் கொம்பனாலும் இயலவில்லைஅவ்வளவு நேர்த்திஅவ்வளவு அசாத்தியம் சோர்ந்து போய் அவனைக் கைவிட்டோம் அம்மா சத்தியமாக நடந்ததைச் சொல் என்றாள் ஒரு ஆசிரியை பின்னர் கண்டு கொண்டோம் அவனுள் உண்மை ஒளிர்விடும் முத்தென இருந்துகொண்டு தானிருந்திருக்கிறதுஎன்றும். ஏதோவொரு தூசு தான் அவனுள் முத்தாகியிருக்கிறதுஎன்றும். (‘குக்கூ’ சிவராஜ் அண்ணனுக்கு)

கல்லெழும் விதை: ஒரு உரை

தும்பி இதழின் நிறுத்தம் பற்றிய செய்தி இரவு முழுவதும் மனதிற்குச் சோர்வளித்துக் கொண்டேயிருந்தது. இச்சோர்வு எனக்கு அவசியமற்றது போல் தோன்றினாலும் உள்ளத்தின் சக்கரங்கள் உருளவில்லை. அவை திரும்பத் திரும்ப ஒரே பூவில் சுற்றும் தும்பியென வட்டமடித்துக் கொண்டிருந்தது. இச்சோர்வை உதறியாக வேண்டும். எவ்வகையிலும் மனம் ஏதாவதொரு இழப்பை, துயரை பெரிதென ஆக்கிக் கொண்டு சோர்வை விழையக் கூடும். இவ்வகைச் சுழல்களுக்குள் நான் பலதடவைகள் சிக்கியிருக்கிறேன். ஒரு உந்தல் கிளர்ந்தால் போதுமான …

சூரநடம்

சின்ன வயதில் சூரன் போர் பார்க்கப் போவது மகிழ்ச்சியான ஒன்று, சூரர்கள் கடவுளைப் போல அல்ல, வேடிக்கையானவர்கள், கோபமூட்டுபவர்கள், கொல்லப்படப் போவபர்கள் என்று பலவிதக் கற்பனைகளைக் கொண்டிருந்தேன். சூரன்போரில் பயன்படுத்தப்படும் முகமூடிகள், ஆடைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை மிக ஆர்வத்துடன் பார்ப்பேன். நல்லூரில் பரிவாரம் சூழ வரும் படைகள் மோதிக்கொண்டு மாங்காய்கள் பொறுக்கிக் கொண்டு சேவலும் மயிலும் வெளிப்படும் காட்சியில் உடம்பு சிலிர்க்க வைக்கும் நாடகம் திரும்பவும் அதே உக்கிரத்துடன் …

நீர் என்பதும் ஒரு உயிர் வார்த்தை

நீ மோட்டர் சைக்கிள எடுத்திட்டு போவன் மச்சான், இல்லை சைக்கிள் என்டா நல்லமடா கதைச்சிட்டே போவம் என்றேன். ஆனால் உள்ளிக்கிருந்த பயம் இரண்டு வருடங்களாக மோட்டர்சைக்கிள் தொட்டதுமில்ல அதே வேளை லைசன்சுமில்லை, நண்பர்கள் இருவரும் அரைமனதாக சம்மதித்து ஒரே மோட்டார் சைக்கிளில் மூவரும் போவதென்று முடிவாகியது, எந்தத் தீர்மானமும் இல்லாமல் இடம் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஒரு அசட்டுத்தைரியத்துடன் வெளிக்கிட்டோம். எனது நண்பனுடன் பேசி விட்டு முதலில் அவனது …