வெடிமணியமும் இடியன் துவக்கும்

மதிசுதாவின் வெடிமணியமும் இடியன் துவக்கும் சிறு படம் பார்த்தேன். தொடக்கத்திலே மதிசுதா ஒரு முழு நீளப்படத்திற்கு எழுதப்பட்ட திட்டமிடப்பட்ட, கதையைப் பொருளாதாரப் பிரச்சினைகளால் சிறுபடமாக எடுத்து முடித்ததாகப் போட்டிருந்தார். ‘நல்லபடம்’ எடுக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களுக்கு ஈழ சினிமா கொடுக்க கூடிய முதல் நெருக்கடி, பணம். எனக்கு அதில் எப்போதும் ஆதங்கம் உண்டு. அச்சூழலை மாற்ற வேண்டும் என்பதிலும் பெருத்த உடன்பாடு உள்ளது. ஆனால் இது படத்திலே எழுதப்பட்ட ப்ரேமாக …

கிணற்றுத் தவளைகளும் சிறகுள்ள மீன்களும்

தன்னம்பிக்கையற்ற, அதிகாரத்திற்கு முன் ஒடுங்கி நிற்கும், சமூகம் பற்றிய அக்கறையென்பது வேறு யாருடையது என்று விளங்கி வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களை நான் சந்த்தித்திருக்கிறேன். அக்கறையுள்ள மாணவர்களையும் பார்க்கிறேன். அக்கறையுள்ளவர்கள் வாழ்வில் அம்மாற்றத்தை ஏற்படுத்தியதால் ஆழமான பங்களிப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. அத்தகையவர்கள் மிகக் குறைவாக இருக்கின்றனர் என்பதே துயரம். சமூகத்தில் இணைந்து வாழத் தான் கல்வி, தான் அதில் உயர்ந்தவன் என்ற அகங்காரத்தின் மேல் ஏற்றிவைப்பதல்ல. அனைவருக்கும் சுயமரியாதையும் சமதர்மமுள்ள சமூக …

நீருக்கடியில் ஓடிக்கொண்டிருக்கிறது திமிங்கலம்

கவிஞர்கள் ஒரு கால கட்டத்தின் குறியீடாக மாறக்கூடிய அரிதான நிகழ்வுகள் நடக்கும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு கம்பீரமான குறியீடாக பாரதியார் எப்படி மாறினாரோ, அப்படி ஈழப் போராட்டத்தின் ஏராளாமான சம்பவங்களுக்கான, குறிப்பாக சித்திரவதைகள், இயக்கங்களினுடைய அநீதி, அரசினுடைய அடக்குமுறை, சமூகத்தினுடைய புறக்கணிப்பு போன்ற எல்லாவற்றிற்கு ஊடாகவும் தொடர்ந்து பயணித்து எப்படி ஒருவன் கவிஞனாக ஆகிறான், தொடர்ந்தும் அந்த நம்பிக்கையோடு போராடுகிறான். அதனூடாக தனது வாழ்க்கையை எப்படி ஒரு குறியீடாக …

கவிதைகளின் புதிய வழி

முற்குறிப்புகள் 1 கவிதைகளின் உருவாக்கம் மற்றும் பரிமாணங்கள் மிக விரிவானவை, மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள், நவீனத்திற்குப் பிந்தைய கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என்று விசாலமான பகுப்புகளைக் கொண்டவை. ஆகவே இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட விரும்பும் கருத்துக்களின் எல்லைகள் என்பவை நவீனம் மற்றும் நவீனத்திற்குப் பிந்தைய கவிதைகள் எனும் பகுப்புகளிற்குள் வரக்கூடிய கவிதைகளின் தன்மைகள், அவற்றின் பொதுப்போக்குகள் பற்றியே. மேலும் கவிதைகள் கால, இட மாற்றங்களுக்கமைய கருத்தியல் உள்ளடக்க மாற்றங்களையும் பிரதிபலித்தும் …

வரலாற்றில் கசப்பை எழுதுதல்

ஆஸ்க்விச் வதைமுகாமும் தன் வரலாற்றின் எழுத்தும் ஆஸ்க்விச் வதைமுகாமில் எலி வீசல் தன் தந்தையுடன் சென்று பின்னர் அங்கிருந்து வெளியேறும் ஒரு வருட அனுபவங்களின் தொகுப்பு ‘ இரவு ‘ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. இடப்பெயர்வு, அலைச்சல், இனவெறி, ஆதிக்க வெறி, கொடுந்தண்டனைகள் பற்றிய ஒரு சிறுவனின் பார்வையிலிருந்து விரியும் ஒரு வராலாற்றின் சிறு தீற்றுத் தான் அந்தத் தன்வரலாறு. வரலாற்றின் விசைகளைக் கணிப்பதென்பதும், நிலைப்பாடுகளை எடுப்பதென்பதும், அதிலிருந்து தனது …

அசையும் நூலகங்களை உருவாக்குதல்

அசையும் நூலகங்களை உருவாக்குதல் நீண்டகாலமாகவே நூலகங்களை உருவாக்குதலும் அவற்றை மக்களின் பயன்பாடுள்ள வெளியாகவும் மாற்றவும் பல்வேறுபட்ட முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அண்மைக்காலமாக இளம் தலைமுறையினரும் இச் செயற்பாடுகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். புத்தக சேகரிப்பு நிலையங்களை உருவாக்குதல், புத்தகங்களை பொதுமக்களிடமிருந்து நேரடியாகச் சேமித்தல், நூலக உருவாக்கம் சார்ந்து இயங்குகின்ற அமைப்புகளுடன் உரையாடிப் புத்தங்களைப் பெறுதல், பின்னர் அவற்றைக் கொண்டு கிராம மட்ட அல்லது பாடசாலை நூலகங்களை உருவாக்குதல் என்பதாக அவர்களின் …

நிலமீட்புக்கான மக்கள் போராட்டங்கள் – அடைவுகளும் நிலமைகளும்

இரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பின் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களுக்குள் குடியிருக்கும் இராணுவத்தை வெளியேற்றி அல்லது அரசு கையகப்படுத்தியிருக்கும் காணிகளை விடுவித்து தமது நிலங்களைத் தமக்கே தாருங்கள் என்று தமிழ் பேசும் மக்கள் தமது ஜனநாயக வழிப் போராட்டங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக மெல்லிய அலைபோலத் தானும் இடைவிடாது மோதிக்கொண்டிருந்தனர். இரண்டாயிரத்துப் பதினைந்து, ஆட்சி மாற்றத்தின் பின்னர், பெருமெடுப்பில் இப்போராட்டங்கள், வெகுசன எழுச்சியாகவும், பிறரையும் உள்ளீர்த்துக் கொண்ட விரிந்த போராட்டங்களாகவும் உருமாறின. முதலில், …

எதிர்ப்பின் கொண்டாட்டம்

“The Casteless collective ” நீலம் பண்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன இசைக்குழு. தமிழ்நாட்டில் எனக்குப் பிடித்த “குரங்கன்” சுயாதீன இசைக்குழுவின் ‘தென்மா’ தான் இந்த புதிய குழுவினதும் இசைத்தயாரிப்பைச் செய்கிறார். பா. ரஞ்சித் தனது நண்பர்களுடன் இணைந்து நிகழ்த்தும் இந்த முன்னெடுப்பு மிக முக்கியமான பண்பாட்டு அரசியல் நிகழ்வு. அரசியல் மயப்படுத்தல் தான் இந்த இசையின் ஒரே குரல். சாதியின் பெயரில் தங்களுக்கு நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அநீதிகளின் …

இலக்கியமும் அரசியலும்

இலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளைக் கையாளுதல் உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை மற்றும் அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி எழுந்துள்ளன. குறித்த அரசியல் நிகழ்வுக்கான விவாதங்களை நிகழ்த்துதல், அல்லது சாட்சியமளித்தல் என்ற இரண்டும் தான் அதன் பிரதான இயங்குதிசைகள். இரண்டு வேறு வேறு நாவல்களையும் எழுத்தாளர்களையும் அரசியல் நிகழ்வுகளையும் கொண்டு இதன் தன்மைகளை உரையாடலாம். ஒன்று, வாசு முருகவேல் எழுதியுள்ள ஜெப்னா பேக்கரி. ‘முஸ்லிம்கள் …

இலக்கியம் எனும் இயக்கம்

இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக இருப்பர். 2012 ஆம் ஆண்டு நான் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் வேலணையூர் தாஸ் முகநூல் ஊடாக சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் படித்த பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்தில் தான் அவரது வீடிருந்தது. பின் பல காலம் பிள்ளைகளின் படிப்பிற்காக அந்த இடத்திலேயே சுற்றிச் சுற்றி வாடகை வீடுகளில் தாங்கினார். ஒரு சித்தாயுர்வேத வைத்தியர். …