கொடிறோஸ் – வாசக வகைகள்
கிரிசாந் கொடிறோஸ் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே புத்தகத்திற்காக ஆர்வத்துடன் காத்திருந்தேன். வாசித்த பின் ஒரே ஒரு ஏமாற்றம் குறு நாவலாக இல்லாமல் நாவலாக இருந்திருக்கலாம் என்பதாகும். நான் தீவிர இலக்கியத்திற்கு புது வாசகன். சில மாதங்களாக தொடர்ந்து நாவல்களையே வாசிப்பதனால் எனக்கு அப்படித் தோன்றி இருக்கலாம். கதையின் வெளிப்பாடு பற்றி தர்மு பிரசாத் பதிப்புரையில் குறிப்பிட்ட குறுநாவலின் தன்மையை போலவே பல சிறுகதைகளின் தொகுப்பு போலவும், நாவலின் ஒரு …
