தன்னறம் இலக்கிய விருது : 2024

மெய்யிலேயே ஈழத்தின் முதன்மையான இலக்கிய சாதனை ஷோபா சக்தியில் நிகழ்ந்தது. தன் கதைகளைச் சற்றே நீளமான அரசியல் துண்டுப்பிரசுரங்கள் எனச் சொல்லும் தற்பகடிக் கலைஞன் ஷோபா. தமிழீழம் எனும் பெருவேட்கை நெருப்பெரிந்த காலத்தில் அதன் உளச்சான்றை நோக்கியெழுந்த முதன்மையான கலைக்குரல். அறங்களை மாபெரும் கூட்டு உணர்ச்சிகள் பலவேறாக வகைப்படுத்துகின்றன. ஒன்றில் பொருந்துவது பிறிதில் பிழைப்பது. அறங்களை ஆக்குதலும் விரித்தலும் விவாதித்தலும் மறு விசாரணை புரிவதை இலக்கியம் தான் விழைந்தோ விழைவின்றியோ …

நீலி : பெருந்தேவி சிறப்பிதழ்

நீலி இதழில் கவிஞரும் எழுத்தாளருமான பெருந்தேவி அவர்கள் பற்றிய சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறார்கள். பெருந்தேவி தமிழின் முக்கியமான கவிஞர் என்பது என் எண்ணம். அவர் குறித்து சிறப்பிதழ் வெளியாகுவது முக்கியமான பண்பாட்டுச் செயற்பாடு. வாழ்த்துகள் நீலி இதழுக்கு. https://neeli.co.in/category/%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-2024/

நிகழ்வு நிறுத்தம்

அனாரின் ஐம்பதாவது அகவையை முன்னிட்டு குமாரதேவன் வாசகர் வட்டத்தினால் ஒருங்கிணைக்கப்பட இருந்த தமிழ் நிலத்துப் பாடினி எனும் நிகழ்வு நிறுத்தப்படுகிறது. நிகழ்வினை முன்னெடுப்பதில் ஏற்படும் அழுத்தங்களை கருத்தில் கொண்டு இம்முடிவு அறிவிக்கப்படுகிறது. சுபம்.

தடங்கல்

எனது இணையத்தளம் சில நாட்களாகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இயங்கவில்லை. இந்த நாட்களில் எழுதுவதும் நாளொன்றுக்கு மிகக் குறைவாகவே இருந்தது. எழுதியதைத் திரும்பத் திரும்பச் செப்பனிட்டுக் கொண்டிருந்தன விரல்கள். அம்பலம் ஏற முடியாத கூத்தனைப் போல தனித்து நடித்துக் கொண்டு ஆடியில் தன்னுருவைத் தானே அழிப்பது போலிருந்தது. மேலும் தளத்தைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் எவர் என்பதும் அறியக் கிடைத்தது. மொத்தமாகவே மூவரே தளமின்மையைக் கண்டு மடல் அனுப்பினார்கள். அவர்கள் என்னுடைய  …

தும்பி: அருகும் கனவுகளின் பேரிறக்கை

ஐந்து வருடங்களுக்கு முன் எமது பசுமைச்சுவடுகள் அமைப்பு தொடங்கி சிறுவர்களுக்கான உரையாடல்கள், கதைகூறல்கள் ஆரம்பித்த காலகட்டங்களில் கிரிசாந் மூலமாக தும்பியின் அறிமுகமும், தன்னற வெளியீடுகள் பற்றியும் அறிந்தோம். செயற்பாட்டு தளங்களில் வாசிப்பின் தொடரியக்கத்திற்கு இவை இரண்டின் மூலமாகவும் பெற்றுக்கொண்ட வாழ்வென்பது கனவு போலிருக்கின்றது. அவையே என்னைச் செதுக்கி இருக்கின்றன. குக்கூ மற்றும் தன்னறத்தின் வெளியீடுகளாக எமது அமைப்பிற்கெனப் பெற்றுக்கொண்ட புத்தகங்களில் வாழ்வதற்கான கருணையும், எளிமையும் மட்டுமே திருப்பத் திருப்ப சொல்லப்பட்டன. …

கருணையின் முன் நீட்டப்படும் கை

தும்பி சிறுவர் இதழை ஈழத்தமிழர்கள் ஏன் வாங்க வேண்டும்? இப்பொழுது அவ்விதழ் நிறுத்தப்படும் அறிவிப்பு வெளியாகியிருக்கும் வேளையில் ஈழத்தமிழர்கள் எவ்விதம் அவர்களின் செயல்களுக்குக் கைகொடுக்கலாம்? அவர்களது இவ்விடர் நேரத்தில் நாம் ஏன் உடனிருக்க வேண்டும்? ஒரு தமிழர் எதற்காகத் தும்பி இதழை வாங்க வேண்டும்? ‘ஆகப் பெரிய கனவு’ கட்டுரையைத் தொடர்ந்து இத்தகைய கேள்விகளை என்னிடம் பல நண்பர்கள் கேட்டிருந்தனர். அதனை ஒரு நல்விளைவெனவே கொள்கிறேன். பலருடைய ஆர்வமும் என்னையும் …

ஆகப் பெரிய கனவு

குழந்தைகளுக்கான உலகை உருவாக்கும் கைகளே இப்புவியில் மகத்தான எடையின்மை கொண்டவை. குழந்தைகளுக்காகக் காணும் கனவுகளே தூய்மையின் பொற்சிறகணிந்தவை. குழந்தைகளின் நிலையெண்ணிக் கண்ணீர் சிந்தும் விழிகளே தெய்வம் உறையும் அகல்கள். தும்பி சிறார் இதழ் தனது 81 ஆவது இதழுடன் பொருளாதாரச் சுமையால் தனது பறத்தலை நிறுத்துவதாகக் கண்ட அறிவிப்புத் தான் இதுவரையான வாழ்நாளில் நான் வாசித்த ஆகத் துயரார்ந்த செய்தி. தும்பியைப் போல் ஒரு இதழ் தமிழில் நிகழ்ந்தமை நம் …