இளங்கவிகளுக்கு சில அட்வைஸ்கள்

தமிழ்கூறும் நல்லுலகிலே புதிதாக எழுதவரும் இளங்கவிகளுக்கு சீனியர் கவிஞர்கள் அட்வைஸ்களை வழங்குவது வழமையும் கடமையும். சபரிநாதன், பெருந்தேவி, போகன் சங்கர் ஆகிய மூவரினதும் சில கவிதைகள் தங்களது அனுபவங்களாகவும் அட்வைஸ்களாகவும் சுவாரசியமாக இருந்தன. சில கவிதைகள் அனுபவங்களாகவும் சிலது அட்வைஸ்களாகவும் இருந்தன. அனுபவங்களை வாசிக்கும் போது பாவமாகவும் அட்வைஸ்களைக் கேட்கும் பொழுது பயமாகவும் இருந்தது. இதையெல்லாம் வாசித்த பின் என்னத்தை எழுதி என்னத்தை வாசிச்சு என்று சுய இரக்கமாகவும், இதையெல்லாம் …

பாவைக்கைச்சுடர்

அண்மையில் வாசித்த கவிதைகளில் ஒளி என்ற இந்தக் கவிதை இன்னதென்று அறியாத புதுவுணர்வை மனதிற்குள் உண்டாக்கியபடியே இருக்கிறது. மனசு கவிதையின் இறுதி வரிகளை உருட்டியபடியே இருக்கிறது. எளிமையான ஒரு கவிதை தான். ஆனால் ஏணைக்குள் கிடக்கும் குழந்தை தலையை மட்டும் வெளியில் நீட்டி, நான் ஒரு அதிசயம் என்று ஈறு தெரியச் சிரிப்பது போல் தோற்றங் காட்டுகிறது. கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் எனக்கு மிகவும் பிடித்த கதை. ஒவ்வொரு …

அழுதுகொண்டே மலையேறும் சிறுவன்

சபரிநாதனின் ‘தூஆ’ என்ற கவிதைத் தொகுப்பினை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பண்டிகை நாளின் விடியலில் முழுகித் தலை இழுத்துப் புத்தாடை அணிந்த பின் ஐந்து நிமிடத்திற்கொருமுறை தன்னழகை வியக்கும் சிறுவனைப் போலத் தொகுப்பை திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல கவிதைகள் மொழியில் நிகழ்வது, நாமே நம்மின் அழகை ஆடியில் பார்க்கும் ஒரு தருணமல்லவா. தூஆ தமிழிற்கு அத்தகையதொரு வரவு. தொகுப்பைப் பற்றிப் பின்னர் விரிவாக எழுதுவேன். நான்கு நாட்களாகக் காய்ச்சலும் …

மெய்த்துயர்

வணக்கம் கிரிசாந், இருத்தலியம் என்றால் என்ன? இது கவிதைகளில் பயன்படுத்தப்படுகிறதா?உதாரணங்கள் தர முடியுமா? கவிதைகளுக்கும் கோட்பாடுகட்குமான சம்பந்தம் என்ன? கவிதைகள் கோட்பாட்டின் பிரகாரமாகத்தான் எழுத வேண்டுமா?இந்த கவிதையில் இன்ன கோட்பாடு என எப்படி அடையாளம் காண்பது? உங்கள் கவிதைகள் எந்த கோட்பாட்டின் பிரகாரம் அமைந்தது? லலிதகோபன் * வணக்கம் லலிதகோபன், தத்துவம் எனும் அறிவுத் தளத்தில் நானொரு வாசகன் மட்டுமே. தத்துவங்களை முறையாகவோ அல்லது முறைசாரமலோ பயின்றவனல்ல. எனது ஆர்வத்தின்பாற்பட்டு …

எப்பொழுதும் கவிஞன்

ஒரு கவிஞனாக வேண்டும் என்று முடிவெடுத்தீர்கள். பொதுவாக கலை சார்ந்த செயல்களை பகுதி நேரமாகவே தேர்வு செய்கையில் அதற்கு மறுதலையாக கவிஞனாக வேண்டும் என்று முடிவெடுத்தது பெரிய விடயம். ஆனால் சில காலங்கள் உங்கள் இலக்கிய செயற்பாட்டை காணவில்லை. இடைப்பட்ட இந்த காலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? லலிதகோபன் * வணக்கம் லலிதகோபன், உங்கள் தொடர்ச்சியான கேள்விகள் மகிழ்ச்சியையும் தொடர்ந்து விவாதிக்கும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. நான் கவிஞனாகுவது அல்லது எழுத்தாளராகுவது …

செயற்களம் புகுவோருக்கு

ஒவ்வொரு சமூகப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் அததற்கான தனித்தன்மையான அணுகுமுறைகளைக் கோரக் கூடியவை. அப்பிரச்சினைகளைக் கையாளும் தனிமனிதர்களோ சமூக மட்ட அமைப்புகளோ யாரும் எவை குறித்தும் முழுமையான அறிதல்களோ பார்வைகளோ தீர்வுகளோ அறிந்தவர்களல்ல. தொடக்கத்தில் அச் சிக்கலும் அதைத் தீர்க்க வேண்டும் என்ற உந்துதலும் அவர்களிடமிருக்கும். எந்தவொரு செயற் தொடக்கமும் நாம் அவதானிக்கும் அன்றாடத்திலிருந்தே நம்முள் விதையென விழுகின்றன. நாம் அவற்றால் அலைக்கழிகிறோம். என்ன செய்வதெனத் தெரியாமல் திகைக்கின்றோம். ஆனால் செயல்படுதலென்பது …

இடைநிலை வாசகர்கள்: ஒரு கடிதம்

அன்புள்ள கிரி, உங்கள் கடிதத்துக்கு நன்றி. இன்னுமொரு கேள்வி. நல்ல வாசகர்களை அவதானித்துப் பார்க்கும் போது சிறு வயதில் இருந்தே வாசிப்பு பழக்கத்திற்கான ஏதோ ஒரு ஊக்கி அவர்களுக்கு இருந்து இருக்கிறது. உதாரணமாக வீட்டில் யாரோ ஒருவர் வாசிப்பவராக இருக்கிறார்கள். வீட்டில் நூலகமோ புத்தக சேகரமோ இருக்கிறது இப்படியாக சில காரணங்கள் நிறைய வாசகர்களால் சொல்லப்படுகிறது. ஆனால் இடையில் வாசிப்புக்கு வந்து சேரும் நிகழ்வுகள் அபூர்வமாக இருக்கிறது. இந்த இடையில் …

பரா லைட்: வாசகர் கடிதம்

காலம் என்பது இருளிலிருந்து ஒளிக்கும் ஒளியிலிருந்து இருளுக்குமாய் தாவுகின்ற ஒரு குரங்கு. இந்தக் குரங்கினை கிளைகளிலிருந்து அகற்றிவிட்டால் எஞ்சி நிற்பது மொட்டை வெளிச்சம் இல்லாவிடின் பட்டை இருள். சமயங்களில் நம்மை வலிந்து இருளுக்குள் திணித்து கொள்கையில் அங்கே பரா வெளிச்சங்களாக உங்களைத் துலக்குபவை கவிதைகள் எனலாம். இந்தப் பரா வெளிச்சத்தை யாரோ ஒருவர் ஏவியிருக்கலாம். ஆனால் துலங்கும் அதன் ஒளியில் வாசிக்கப்படுவதாக உங்களின் அகம் அமைந்து விடுகிறது. என்ன இது …

உருவச் சிதைப்பிலிருந்து பருமட்டான உருவத்துக்கு

* கண்ணாடிப் பேழைக்குள் நெளியும் பாம்புகள். திருவிழாத் தெருக்கள் கலகலத்துக் கொண்டிருக்கின்றன. ஞாபகம் தன் அந்தக் கணத்திலிருந்து ஆதிக் கணம் வரை திரும்பத் திரும்ப அலைகிறது. பாதளக் கிணற்றில் ஓடும் மோட்டார் சைக்கிளைப் போல் மறுபடியும் மறுபடியும் வளைய வளைய சுற்றுகிறது. ஒரேயொரு “கிளிப் ” வாங்கிக் கொடுத்துவிட வேண்டும். அம்மா ஞாபகங்கள் இராத்திரித் திருவிழாவில் சீலையில் முடிந்திருந்த தாள்களில் சிலவற்றைத் தருகிறாள். விபூதி வாசம் குங்கும முகம். எல்லா …

நன்றியின் நிழல்: ஒரு குறிப்பு

வாழ்க்கைக்குத் திரும்புதல் கிரிசாந்தினுடைய முதலாவது கவிதைத் தொகுதி, குமாரதேவன் வாசகர் வட்ட வெளியீடாக வந்திருக்கிறது. முகநூலிலும் பிற ஊடகங்களிலும் நாளாந்தம் கவிதைகள் என எழுதப்படுகின்றவற்றில் எது கவிதை எனத் தேடிச் சலிக்கின்ற கவிதை மனங்களுக்கு ஆத்மார்த்தமான திருப்தி அளிக்கக்கூடிய ஒரு தொகுப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக இதில் உள்ள அகம் சார்ந்த கவிதைகள், நிஜ உலகின் நிகழ்வெளியில் நின்று மனதைப் பிய்தெடுத்து ஒரு தனித்த வெளியில் மனதை மிதக்க விடுகின்ற பித்து …