இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக இருப்பர். 2012 ஆம் ஆண்டு நான் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் வேலணையூர் தாஸ் முகநூல் ஊடாக சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் படித்த பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்தில்…
Category: அபிப்பிராயங்கள்
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் – தேசத்தின் கோயில்
கண் விரித்தால் எங்கும் பச்சையாய்க் கிடக்கும் இயற்கையின் மண். முதுமரங்களும் ஆழமான காடுகளுமாக நிறைந்து கிடக்கும் அவ்வெளியை மனிதர்கள் தங்கள் கைகளால் உழுது விவசாய பூமியாக்கினர். நீண்ட நெடும் வயல்கள் உருவாகின. கால்நடைகள் செறிந்து மனித வாசம் வீசத் தொடங்கியது. குளங்கள் வெட்டியெடுக்கப்பட்டன. விவசாயம்…
சினிமாவுக்கோர் இயக்கம்
ஒரு மக்கள் இயக்கமென்பது மக்களிடமிருந்து எழுச்சி பெற்று வருவது. ‘Chikpo Movement ‘ என்ற ஆவணப்படத்தை நிகழ் படத்தை எப்படி ஒரு இயக்கமாக மாற்றுவது என்பது தொடர்பான கலந்துரையாடலின் முதலாவது உரையாடல் பகுதியாகப் பார்த்திருந்தோம். அந்த ஆவணப்படம், ஒரு மலைப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் தமது…
ராஷ்மோன் மனநிலை
ஆம், அப்படித் தான் சொல்ல முடியும் எளிமையான ஒரு கதை. விசாரணையின் பின் அடைமழை பொழிந்து கொண்டிருக்கும் போது கைவிடப்பட்ட கோயிலின் தாழ்வாரத்தில் ஒதுங்கி நிற்கும் துறவிக்கும் கிழவனுக்கும் வழிப்போக்கன் ஒருவனுக்குமிடையில் இடம்பெறும் உரையாடலாகவே காட்சிகள் அகல்கின்றன. காட்டு வழியால் செல்லும் போது ஒரு…
சுயசித்திரம் எனும் நீரில் கலங்கும் முகம்
கொஞ்சம் கொஞ்சமாக மனித முகங்கள் சலிப்பூட்டத் தொடங்கிவிட்டது என்ற எண்ணம் நீண்டகாலமாகவே மனதில் கசிந்துகொண்டிருந்தது. நிலக் காட்சிகளே மனசை ஆசுவாசப்படுத்துவதாக இருக்கிறது. எங்கும் விரியும் நிறங்களும் உலகமும் காலின் கீழேயும் கண்ணின் முன்னேயும் விரிவது தான் எஞ்சியிருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மனித முகங்களையிட்டு அஞ்சுகிறேன்….
மீண்டும் ஒரு மாணவர் புரட்சி
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நான் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் (2012 ) ஒரு ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவன் நயினாதீவுக்கு சுற்றுலாவுக்குச் சென்று விட்டு வரும் போது ஜெட்டியடியில் வைத்து வாகனத்தை திருப்பிய பொழுது கால் இடறி விழுந்து டயரில் தலை நசுங்குண்டு இறந்து போனான்….
அறமும் கல்வியும் – வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம்
வேலையில்லாப்பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பில் இதுவரை நான் எதுவும் எழுதவில்லை. இவ்வளவு காலம் நான் பல்கலைக் கழக மாணவர்களின் பல்வேறு நிலைப்பாடுகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றினால் குறிப்பிடும்படியான மாற்றம் கூட ஏற்படவில்லை. பல்வேறு காரணங்களின் தொடர்ச்சியும் நீட்சியுமாகவே இந்தப்…
பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏன் வெற்றி பெற வேண்டும்?
இதை எழுதிக் கொண்டிருக்கும் போது பதினைந்தாவது நாள் இருளத் தொடங்கி விட்டது. அடிப்படையில் ஐந்து நாட்களுக்கு மேல் கடந்த ஏழு வருடங்களில் எந்தவொரு ஜனநாயகவழிப் போராட்டங்களும் நீடித்ததில்லை. இந்தப் போராட்டம் அதனை மாற்றி எழுதியிருக்கிறது. இன்றோடு பதினைந்தாவது நாள். தொடரும் உறுதி மட்டும் தான்…
ஆமிக்காரனே! எயார் போஸே!
கேப்பாபுலவில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் பல வகையில் முக்கியமானது. ஈழத் தமிழர் வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் தொடர்ந்து ஜனநாயக வழிப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலமிது. இவற்றை சரியான வழியில் நகர்த்திச் செல்ல வேண்டியதும் ஆதரவளிக்க வேண்டியதும் நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்….
ஜல்லிக்கட்டு – நாம் கற்றுக் கொள்ளக் கூடியவை
இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது பொலிஸ் மாணவர்களை நெருக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் பெரும் அளவில் அரச இயந்திரத்தினால் ஒடுக்கப் பட்டு வருகிறது. ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈழத்திலும் புலம்பெயர்ந்தும் பல நாடுகளிலும்…