மார்பிடைப் பெருங்குளம்

மட்டக்களப்பில் உள்ள கற்பாறைக் குன்றொன்றின் அருகில் ஒரு நீர்நிலை இருந்தது. சுற்றிலும் உயர்ந்து நீண்ட மரங்கள். எழுத்தாளர் இமையம் அந்த நீரகத்தைப் பார்த்தபடி நின்றுவிட்டுத் திரும்பி அவரின் இயல்பான புருவத் துள்ளலுடன் சொன்னார், “சங்கக் கவிஞன் சொல்லுறான், பெண் அழுத கண்ணீர் மார்பிடையில் கொக்குகள் மேயும் குளமென்று ஆகியதென்று, அவனுங் கவிஞன், நீயுங் கவிஞனா? அவன் எப்பிடி யோசிச்சிருக்கிறான். இன்னிக்குள்ள எவனாவது அப்பிடி எழுதுவானா?” ஒரு கணம் அக்கேள்வியை எதிர்கொள்ள …

விசும்பு ஆடு அன்னம்

சிறுவயதிலிருந்தே தேர் என்பது இருப்பதில் ஆகப்பெரிய அசையும் மரச்சிற்மென மனதில் ஆகியிருக்கிறது. குரும்பைகளை வைத்து ஈர்க்கில் கோர்த்து ஆக்கும் குரும்பட்டித் தேர் முதல் ஆயிரமாயிரங் கரங்கள் தொட்டு வடக்கயிறால் இழுக்கும் பெருந்தேர் வரை எல்லாமே காதணி பூண்டு சிற்பச் சிறகுகள் அசைத்து மண் ஊரும் பறவையென ஆடி வருவது. சங்க காலத்தில் போக்குவரத்திற்கென வாகனமாகப் பயன்படுத்தப்பட்ட தேர் எப்பறவையெனத் தோற்றங் கொள்ளுமென உலோச்சனாரை வாசிக்கும் வரையில் தெரிந்திருக்கவில்லை. மின்னுச்செய் கருவிய …

ஒளிக்குருத்து

சங்கப் பாடல்களில் உள்ள ஒலியிழைகள் நுண்ணியவை. சொற்கள் சர சரவென நீர்த்தொட்டிக்குள் விழுந்த பாம்பென ஒலியை நோக்கித் தலையெழுந்தபடியே இருப்பவை. அவ்வெழுகை நேரிடையாக எழும் கவிதைகள் உள்ளெழுச்சியில் பாடலெனத் திகழக்கூடியவை. இந்தக் குறிப்பில் உள்ள ஒளவையாரின் இரு கவிதைகள் ஒலியிழையின் தலையெழ மனத்துள் உரத்தெழுபவை. நான் வழமையாகச் செல்லும் வழியில் இருந்த குளத்தடித் தூங்குமூஞ்சி வாகை மரங்கள், சில நாட்கள் இடைவெளியில் முழுதும் மலர்ந்து வேறொரு தெய்வீகமாய் உருமாறி நின்றன. …

கறுமலர்க்காடு

கவிதை என்பது ஒன்றை இன்னொன்றாக்கிக் கொண்டேயிருக்கும் கலை. கருங்கற்பாறைகளாலான கரைகொண்ட குளமொன்றில் செவ்விதழ்கள் உரிந்தும் உரியாமலும் நீண்டு கிடக்கும் தாமரைகள். காற்று உய் உய் என விசிறியடிக்க மழை பலத்துப் பெய்யும் முன்னிரவின் தொடக்கம். ஞாயிறு இருள்மேகங்களின் பின்னிருப்பதால் ஒளியிழக்காத உலகு. எருமைகள் நாப்பிரட்டி குளமிறங்கி தலையை இடமும் வலமும் அசைத்தபடி நகர்கின்றன. குளத்திற்கு அப்பால் கறுத்த மலர்களாலான காட்டின் வரை. அதற்கு அப்பால் மழை சூடிய மலை. பச்சையும் …

அதிகாலையை எழுப்பியது குற்றம்

பழந்தமிழ் இலக்கியங்களை அவற்றின் சொல்லிணைவுகளின் வடிவிற்காக சிறுவயதில் வாசித்திருக்கிறேன். இரண்டு சொற்கள் இணையும் போது உண்டாகும் இழைவு பொன்னணியில் வைரச் சுட்டிகை போற் துலங்கும். இன்னொரு பருவத்தில் அதன் இசைக்காக வாசித்திருக்கிறேன், சொல்லும் போது தோன்றும் தாளம், மனம் குதூகலித்து அடையும் மனக்கால்களின் ஒலியெழ கூச்சலெனத் திரண்டு மெளனமென ஆகும் வரை அச்சொற்களின் இசை கேட்டு ஆடியிருக்கிறேன். பின்னர் அவற்றின் உள்ளுள்ள காட்சியினதும் கதையினதும் இணைவினால் உண்டாகும் வேறொரு வாசிப்பினை …

நீர் என்பதும் ஒரு உயிர் வார்த்தை

நீ மோட்டர் சைக்கிள எடுத்திட்டு போவன் மச்சான், இல்லை சைக்கிள் என்டா நல்லமடா கதைச்சிட்டே போவம் என்றேன். ஆனால் உள்ளிக்கிருந்த பயம் இரண்டு வருடங்களாக மோட்டர்சைக்கிள் தொட்டதுமில்ல அதே வேளை லைசன்சுமில்லை, நண்பர்கள் இருவரும் அரைமனதாக சம்மதித்து ஒரே மோட்டார் சைக்கிளில் மூவரும் போவதென்று முடிவாகியது, எந்தத் தீர்மானமும் இல்லாமல் இடம் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஒரு அசட்டுத்தைரியத்துடன் வெளிக்கிட்டோம். எனது நண்பனுடன் பேசி விட்டு முதலில் அவனது …

கடவுள் இருக்கான் குமாரு

அன்று சிவராத்திரி. அம்மாவை காலையில் கோவிலில் இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளின் மீது சாய்ந்த வாறு போனை எடுத்து வைபர் அரட்டைகளை கிண்டத் தொடங்கினேன். தோழியொருத்தி வீடியோ லிங் ஒன்றை அனுப்பியிருந்தாள். அது ஒரு தமிழ் குறும்படத்தின் லிங்“கடவுள் இருக்கான் குமாரு” என்று அதன் பெயர் குறிப்பிட்டு இருந்தது. எனக்கு உடனே விடயம் புரிந்தது நேற்றிரவு “கடவுள் இல்லையென்று ”நான் அவளுடன் நடத்திய விவாதத்திற்கு வலுச்சேர்க்க அவள் தன்பங்கிற்கு அனுப்பிய …

மோட்டார் – சைக்கிள் குறிப்புகள்: 01

”என்ர தண்ணியத் தவிர வேற ஒண்டையும் குடிக்க மாட்டன் ” அழுத்தம் திருத்தமாக உலகத்திற்கு அறிவித்தாள் அந்தக் கிழவி. ஒரே ஒரு முறை மட்டுமே அவளது கண்களை நேரே பார்த்தேன் – ஆழமான இரண்டு கிணறுகளைப் போலிருந்த அந்தக் கண்களில் நீர் நிரம்பியிருந்தது. தனிப்பட்ட பயணமாக ஏழாலை வடக்கு மற்றும் மல்லாகத்திலும் உள்ள கழிவொயிலால் பாதிக்கப்பட்ட கிணறுகளை பார்வையிடவும் மக்களை சந்தித்து உரையாடவும், எனது இரண்டு நண்பர்களுடன் பயணித்தேன். ஒரு …

செயற்களம் புகுவோருக்கு: 02

வரலாற்றின் திரைச்சீலைகள் சுன்னாகம் நிலத்தடி நீரில் அங்குள்ள மின்சார உற்பத்தி நிறுவனமொன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயில் மூலம் அந்தச் சுற்றுவட்டத்தில் நீர் மாசடைந்திருக்கிறது என்பதை நான் அறிந்த போது வருடம் 2015. விதை குழுமம் ஆரம்பித்த புதிது அது. பெப்ரவரி 14 காதலர் தினத்தில் காதல் கவிதைகள் வாசிப்பதற்கான நிகழ்வொன்றை யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்தோம். சுன்னாக நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் நண்பர்கள் …

உடல் செவ்வாது பிணி ஒவ்வாது

பாடலாசிரியர் தாமரையின் பாடல்கள் தன் சொற்தேர்வுகளாலும் அன்றாடத்தின் அவதானிப்பு நுண்மைகளாலும் புகழ் பெற்றவை. இவரது பாடல் வரிகள் இசையில் குழந்தையின் விரல்களில் தாயின் கூந்தலிழைகளென பற்றிக்கொள்பவை. ஒரு நல்ல பாடலாசிரியர் தனது சொல்லுலகின் தனித்துவத்தால் தனக்கான பொருளுலகையும் உருவாக்கக் கூடியவர். தாய்மை அல்லது தந்தைமை பற்றிய தாமரையின் பாடல்வரிகள் நம் காலத்தின் மகத்தான தாலாட்டுப் பாடல்களாக தாய்க்கும் தந்தைக்கும் ஆகியிருக்கின்றன. குழந்தைமை தாலாட்டும் பெற்றோர்களென அவர்களை எண்ணத் தூண்டுவது. * …