உருக்கும் நெருப்பின் கண்ணீர்
யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தனித்து ஒளிரும் குரலொன்று நமது மொழியில் நிகழ்ந்தது. அதுவரையிருந்த மொழியடுக்கினைத் தனது கனவால் வேறொன்றெனத் திரட்டியது. அதிகாரம் கொப்பளிக்கும் இச் சமூகத்தின் மனசாட்சியை சிலுவையிலறைந்தது. எஸ் போஸ் என்கிற சந்திரபோஸ் சுதாகர் தான் அந்த மகத்தான கவிஞர். எஸ்போசின் மொழி ஒரு பழஞ்சுரங்கத்தைப்போன்றது, அதற்குளிருந்து மந்திரம் நிறைந்த வார்த்தைகளை எடுத்துவைத்து ஓர் பிரமாண்டமான வாழ்க்கையை அவர் நம்முன் நிகழ்த்திக்காட்டுகிறார். அவரது கவிதைகளுக்குள் நுழையும் …
