Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

Month: October 2024

நிகழ்வு நிறுத்தம்

Posted on October 31, 2024

அனாரின் ஐம்பதாவது அகவையை முன்னிட்டு குமாரதேவன் வாசகர் வட்டத்தினால் ஒருங்கிணைக்கப்பட இருந்த தமிழ் நிலத்துப் பாடினி எனும் நிகழ்வு நிறுத்தப்படுகிறது. நிகழ்வினை முன்னெடுப்பதில் ஏற்படும் அழுத்தங்களை கருத்தில் கொண்டு இம்முடிவு அறிவிக்கப்படுகிறது. சுபம்.

நோவிலும் வாழ்வு : அறிமுகம்

Posted on October 31, 2024

கவிஞர் வசிகரனின் முதற் கவிதைத் தொகுப்பின் அறிமுகம் இவ்வாரம் நிகழவிருக்கிறது. ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக தொகுப்பு வெளிவந்திருக்கிறது. நிகழ்வை கவிஞர் கருணாகரன் தலைமை கொள்கிறார். நிகழ்வில் எழுத்தாளர் சு. குணேஸ்வரன், கவிஞர் வட்டக்கச்சி வினோத் ஆகியோர் உரையாற்றுகின்றனர். * கற்பாறைகளை மோதி மோதி ஒவ்வொரு…

129: செண்டுவெளியாட்டம்

Posted on October 30, 2024

விண்யாழி நிழல் விழும் நீண்ட பனைமரங்களின் காட்டு வழி நால்வருடனும் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். கொற்றனும் ஓசையிலானும் சொல்லாடிக் கொண்டிருந்தனர். இரண்டு நாய்க்குட்டிகள் வால்குழைத்துக் கடித்து சிற்றுறுமல் உறுமி பாய்ந்து கவ்விக் கொள்வது போல இருவரும் சீறிக்கொண்டு வந்தனர். நிரதையும் திருதையும் அவர்களின்…

128: நதிவழி

Posted on October 29, 2024

ஒருவன் எண்ணப் போவதை அக்கணத்திற்கு முன்னரே அறிபவரே தோழனும் எதிரியும் என எண்ணிக் கொண்டான் தமிழ்ச்செல்வன். அவனது நரையிழைத்த குழல் காற்றின் துள்ளலில் நலுங்கிக் கொண்டிருந்தது. காவற் கோபுரத்திலிருந்து மீண்டு தன் ஊன்றுகோல் கற்தரையில் எழுப்பும் ஒலியை ஊழ்க நுண்சொல்லென எண்ணியபடி நடந்து சென்று…

ஒற்றைக்கோடை : விற்பனையில்

Posted on October 28, 2024

கவிஞர் ஆதி பார்த்திபனின் தாயதி வெளியீடான ஒற்றைக்கோடை கவிதைத் தொகுப்பினை தற்போது கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். கிடைக்குமிடங்கள்:

127: மழைக்குயில் : 03

Posted on October 10, 2024

மானுடரில் சிலருள் எரியணையாக் கலமொன்று தன்னைத் தானே அமைத்துக் கொண்டு மண் நிகழ்கிறது. வற்றாத தாகத்தின் நாக்குகளால் அம்மானுடரை அவரின் இறுதிக்கணம் வரை குன்றாத தவிப்புக் கொள்ளச் செய்கிறது. எதனாலும் எரிக்கப்படாத எதானாலும் பெருக்கப்படாத எதனாலும் அழிக்கப்படாத அது அதனாலேயே முற்றமைகிறது. அதைத் தாகநாவு…

126: மழைக்குயில் : 02

Posted on October 9, 2024

நீலன் உருவிய வாளுடன் சங்கறுத்து விழுவது போல சூர்ப்பனகரின் கனவு விரிந்தது. நீலன் மன்றில் உருகம் ஏந்தி என்னை அன்னையர் எவரேனும் கொல்க என இரந்து நிற்பவன் போல எழுந்தபோது தனது அனிச்சையாய் கால்கள் எழுந்து நிற்பதை தானே தனக்குள் வியப்புடன் நோக்கினார். அதுவொரு…

ஒற்றைக்கோடை

Posted on October 8, 2024

கவிஞரும் நண்பருமான ஆதி பார்த்திபனின் கவிதைத் தொகுதி தாயதி பதிப்பக வெளியீடாக ஒற்றைக் கோடை எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கின்றது. அதன் வெளியீட்டு நிகழ்வு தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் அவரைப் பற்றி எழுதிய குறிப்பொன்றை மீளவும் மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். தொடர்ந்து செயல்…

125: மழைக்குயில்

Posted on October 8, 2024

சூர்ப்பனகர் தனது இல்லத்தின் மேல்முகப்பில் தாழ்வாக இடப்பட்டிருந்த மூங்கில் கழிகளாலான கூரையின் கீழ் நின்று பட்டினத்தை நோக்கிக் கொண்டிருந்தார். இளமழையின் புகைத்தூவிகள் அந்தரத்திலிருந்து மண்ணுக்கும் மரங்களுக்கும் பருப்பொருட்களனைத்துக்குமென வீழ்வதை தன் சிவப்பேறிய விழிகளால் துழாவினார். அவரது நடை பருத்த வயிற்றின் நடனத்திற்கெனக் கால்கள் கொண்டது…

124: ஆழிசூடிகை : 04

Posted on October 7, 2024

“துயருற்ற நாளொன்றில் குயவன் வனைந்த குடம் போலக் கிடப்பது என் அகம்” என உதடுகளுக்குள் சொற்களை மடித்து மடித்துச் சொன்னார் வேறுகாடார். இருதியாள் அச்சொற்களைக் கேட்டவளெனத் தன் பெருமேனியை தூணில் சாய்த்து கால்களைத் திண்ணையில் தூங்க வைத்தபடி அமர்ந்திருந்தாள். இளமழை எப்பிசிறுமின்றி வந்தது போலவே…

Posts pagination

1 2 Next
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,176)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,011)
  • காதலின் முன் பருவம் (2,002)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,912)
  • விடுதலையில் கவிதை (1,901)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme