தற்புனைவு : ஒரு கேள்வி

“உண்மைக்கும் புனைவுக்கும் இடையில ஒரு புது வெளிய உருவாக்கி அதை ஏன் இவ்வளவுக்கு justify பண்ணணும்? எனக்கு விளங்கல்ல” என்று நண்பரொருவர் கேள்வி அனுப்பியிருந்தார். தற்புனைவு பற்றி படுபட்சி தொடர்பில் உண்டாகியிருக்கும் விவாதத்தின் தொடர்ச்சியாகவே இந்தக் கேள்வி வந்திருக்கிறது. உண்மை, புனைவு இரண்டையும் இலக்கியத்தில் ஏன் கடுமையாக வெட்டி வகுக்கிறோம் என்பதிலிருந்து தொடங்கலாம். உண்மைக்கு தெளிவான தர்க்கம் மற்றும் ஆதார அடிப்படை இருக்க வேண்டும். புனைவு அதை ஒரு பொருட்டாக …

கலையும் வாலும் : 2

இளவயதில் கவிதைகளை எழுதும் பொழுது எடிட்டிங் பற்றிய என் பார்வை வேறாக இருந்தது. இன்றுவரை என் எந்தக் கவிதைகளும் பிற எவராலும் செப்பனிடப்படவில்லை. கவிதையைப் பொறுத்த வரையில் அது சொல்லுளியின் முனை போன்றது. கூர்ந்தது, ஆகவே பிறிதை அனுமதிக்கும் இடைவெளி அற்றது. நானே கூட என் கவிதைகளை அந்த நேர மன எழுச்சிக்கு அப்பால் எடிட் செய்ததில்லை. சில நிமிடங்களில் தான் என் ஒவ்வொரு கவிதையும் எழுதப்பட்டன. ஆனால் இது …

கலையும் வாலும்

புனைவெழுத்தில் செம்மையாக்கம் (Editing) பற்றிய உரையாடல்கள் ‘படுபட்சி’ எனும் தற்புனைவு சார்ந்து பேஸ்புக்கில் நிகழ்ந்து வருவதாக நண்பர்கள் சிலர் அக்குறிப்புகளை அனுப்பியிருந்தனர். எழுத்தாளர்களான டிசே இளங்கோ, அ. யேசுராசா, பெருமாள் முருகன், ஷோபா சக்தி ஆகியோர் எழுதியவற்றை வாசித்தேன். டிலுக்சன் மோகன் என்பவரது கதையே படுபட்சி, அதில் செம்மையாக்க உதவியை ஷோபா சக்தி செய்திருக்கிறார். நான் படுபட்சி இன்னமும் வாசிக்கவில்லை. இந்த இடத்தில் இவர்களது வாத எல்லைகளுக்கு வெளியே செம்மையாக்கம் …

தும்பி : 87

தும்பி சிறார் இதழின் 87வது பிரதி அச்சில் மலர்ந்து இன்று கைவந்து சேர்ந்திருக்கிறது. சிறந்த சிறார் கதைகள் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவருக்கு உள்ளுமிருக்கும் குழந்தைமையை பாதுகாக்க உதவும் ஒப்பற்ற படைப்புகள். அவ்வகையில் இவ்விதழ் காலம் காலமாக தங்களுக்கு இடையே மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு கிராமங்களை மையமாக கொண்ட கதையை ஏந்தி வந்துள்ளது. கதையில் வரும் சிறுமி, தன்னை தாக்கிய மற்றொரு கிராமத்து சிறுவனை மீண்டும் தாக்கும் …

இல் / மீள் / எல்லையாக்கம் : திறப்பு

ஒளிப்படக் கலைஞர் தர்மபாலன் திலக்சனின் புதிய ஒளிப்படக் காட்சி ‘இல்/ மீள்/ எல்லையாக்கம்’ மானுடம் சர்வதேச கருத்தரங்கில் இன்று காலை பத்து மணிக்கு துவங்கி வைக்கப்படுகிறது. யாழ். பல்கலைக்கழகத்தில் கைலாசபதி அரங்கிற்கு அருகில் இருக்கும் காட்சிக் கூடத்தில் இடம்பெறவிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்வையிடலாம். தொடர்ச்சியான செயற்பாடுகளின் மூலமும் கலை வெளிப்பாட்டின் மூலமும் தனக்கான பாதையை உண்டாக்கி முன்னகரும் திலக்சனின் இக்காட்சி இந்தத் தீவின் எல்லைகள் பற்றிய அரசியலைப் பேசுவது. (தர்மபாலன் …

சிறிதினும் சிறிது : திறப்பு

பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் ஒளிப்படக் காட்சி நேற்று (14. 10. 2025) மாலை அவரது தந்தையினால் திறந்து வைக்கப்பட்டது. ஒளிப்படக் காட்சி இன்றும் நாளையும் (15, 16) காலை 10 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை பஸ்ரியன் சந்திக்கு அருகில் உள்ள ‘கலம்’ இல் இடம்பெறும். ஒளிப்படங்கள் : பிரிந்தா, குமணன்

தன்னறம் இலக்கிய விருது : 2025

“மொழியைப் பயன்படுத்துவது ஒரு மானுடச் செயல்பாடு. பானை செய்வதுபோல், அறிவியல் செய்வதுபோல் மொழியை பயன்படுத்துவதும் ஒரு மானுடச் செயல்பாடு. இதனால்தான், ‘என்னுடைய மொழியில்…’ என்று நாம் சொல்கிறோம். தொகுத்துச் சொல்வதென்றால், மொழியாக்கம் என்பது, ஒரு வார்த்தை எப்படியான அர்த்தங்களைக் கொண்டிருக்க முடியும் என்று துருவியகழும் செயலாகவே இருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு வார்த்தையின், ஒரு வாக்கியத்தின், ‘தொனி’யைப் பிடிப்பதற்கு நாம் வார்த்தையை, வாக்கியத்தைக் கடந்துசெல்ல வேண்டியுள்ளது. அதாவது, மூலப்பிரதி அதன் …

சிறிதினும் சிறிது : நிதிக் கோரிக்கை

எந்தவொரு கலை நிகழ்வும் சமூகத்தின் கூட்டுப் பங்களிப்புடன் நிகழ வேண்டும் என்பது என் திண்ணமான நிலைப்பாடு. ஒவ்வொரு நிகழ்விலும் சமூகம் பங்களிக்கும் பொழுது அது பிறிதொரு அர்த்தம் கொண்டதாக ஆகி விடும். ஒரு கோயில் திருவிழாவைப் போலவோ ஒரு சடங்கைப் போலவோ ஒரு போராட்டத்தைப் போலவோ அது நிகழ வேண்டியது. எனது தம்பி பிரசாந்தின் ஒளிப்படக் காட்சியான ‘சிறிதினும் சிறிது’ ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. Catalogue வேலைகள் வடிவமைப்பு நிலையில் …

சிறிதினும் சிறிது : அழைப்பிதழ்

எனது தம்பி பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் நினைவாக அவரது தனியாள் ஒளிப்படக் காட்சி 14. 11. 2025 அன்று தொடக்கம் 16 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்திலுள்ள சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள ‘கலம்’ கூடத்தில் இடம்பெற இருக்கின்றது. 14 ஆம் திகதி அவரது 31 ஆம் நாள் சடங்குகளும் மதிய போசனமும் திருநெல்வேலியில் உள்ள அப்பா வசிக்கும் இல்லத்தில் இடம்பெறும். கேணியடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீடு …