Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

Month: June 2024

47: மாகதா : 02

Posted on June 30, 2024

மடாலயத்தில் உணவு சமைக்கும் வாசனை எழுந்து புகையின் இன்மணம் காற்றில் வீசிக் கொண்டிருந்தது. மாகதா இளம் பாணனின் மெல்லுடலை நோக்கியபடியிருந்தார். அவனுள் சுழிக்கும் உடலசைவுகள் நிரந்தரம் என்பது போல் தோன்றியது. இளையவர்களிடம் தோன்றும் மிதப்பிற்கும் கனவுகளுக்கும் அப்பால் துயர் கொண்டிருப்பவன். துயரை அனுபவிப்பவர்களை விடச்…

46: மாகதா

Posted on June 29, 2024

“உங்கள் சொற்கள் எதன் பொருட்டு எழும் பாணரே” என அமைதியில் எழும் நதியலையென ஒலித்த குரலில் கேட்டார் மகாசோதி. நீண்டு தடித்த பேரரச மரத்தில் நலுங்கிக் கொண்ட ஆயிரமாயிரம் இலைகளின் தளும்பல்களின் கீழ் பனையோலையால் இழைக்கப்பட்ட நீள் பாயில் ஊழ்கத்தில் உடலமைத்து அமர்ந்திருந்தார். அவர்…

45: சிம்ம நிழல்

Posted on June 28, 2024

நெடிய மூங்கில் கழிகளால் தூணிடப்பட்டு பழுத்த பனையோலைகளால் சீராகக் கூரையிடப்பட்ட சத்திரமொன்றில் இளவெயில் தன் ஒளிக்கரங்களை நீட்டியிருந்தது. இடையிலிருந்த சாளரங்களால் சிறு ஒளித்தூண்கள் சத்திரத்தின் உள்ளே விழுந்து கொண்டிருந்தன. வீதியில் பெருகிய குடிகளின் காலடிகளால் விம்மியெழுந்த புழுதியின் தூசுகள் அவ்வொளித் தூண்களில் பரவி ஒளித்தூசென…

வாழ்க்கைக்குத் திரும்புதல்

Posted on June 27, 2024

எனது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதலை வாங்க விரும்பும் நண்பர்கள், வாசகர்கள் எனது மின்னஞ்சல் மூலமோ வட்ஸ் அப் மூலமோ தொடர்பு கொண்டு தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கையில் பெற்றுக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் அனுப்பிய…

44: ஓயா மழை : 02

Posted on June 27, 2024

“மழைப் பொழிவு இருட்டில் வைரத் துளிகளென எங்கள் மீது கொட்டிக் கொண்டிருந்தது. மேனி மயங்கிக் கிடந்த என்னைத் தன்னிரு கரங்களில் இளங் கன்றை ஏந்துவது போல் தூக்கிக் கொண்டார். கருவறையின் முன்முக மண்டபத்தில் சில அகல்கள் தழலாடின. எனது விழிகள் பாதி சரிந்து தூங்கின….

43: ஓயா மழை

Posted on June 26, 2024

காலை பரபரவென விடிந்து கொண்டிருப்பதை அங்கினி நோக்கியபடி உவகையில் முகம் விரிய நின்றாள். விழவுக் காலங்களில் உளம் கசப்பை அடைய முயலும் போதெல்லாம் தேன்வழுகும் பாறையில் நிற்கும் தேரையெனத் தன்னை உணர்வாள். வழுக்கிச் சென்று காமத்தின் வாயில் விழுந்து கொள்வாள். உடலை விழைவின் கலமென…

42: இருட் குழவிகள் : 02

Posted on June 25, 2024

“மானுடர் தம் சொந்த நிழல்களைச் சந்தேகிப்பவர்கள் கூத்தரே. இளமையில் நாம் எண்ணும் கனவுகள் மெய்போலத் தோன்றுபவை. அணுகும் தோறும் காதல் கொண்ட பெண் காதலைப் பூரணம் என எண்ணுவதைப் போல் தோற்றமளிப்பவை. அவை நீடிக்கும் காலத்தில் அப்பூரணத்தின் விளிம்புகள் கரைவதை நம் அகம் நோக்க…

41: இருட் குழவிகள்

Posted on June 24, 2024

பேரொளியே நீ இருட்டின் குழவிமேதமையே நீ பித்தின் குழவிஅழிகலன்களே நீங்கள் மானுடரின் குழவிகள்அழியாத இருட்டே நீ வாழ்கஉன்னை வணங்குகிறோம்எங்களை விட்டு அகலாதிருகருமையே நீயே பேரழகுஇருள் கிரணங்களே நீங்களே எங் கரங்கள்இருளே விழியாகுக இருளே வழியாகுகஇருளே துணையாகுகஇருட்டின் மர்மங்களே எங்களைக் காக்குகஇருள் நாவுகளே எங்களின் புலனாகுகஇருள்…

40: ஆடுகாய்கள்

Posted on June 23, 2024

ஆட்டம் முடிந்ததும் லீலியா செலினியைக் கவனிப்பற்கென தானகியுடன் சென்றாள். நிலவை எழுந்து நின்று சதுரங்கப் பலகையை நோக்கினாள். இரு அரசிகள் கட்டத்தின் நடுவிலே வீற்றிருந்தார்கள். சுற்றிலும் ஆடுகாய்கள். நீலனுடன் சதுரங்கம் விளையாடுவது நிலவைக்கு சொல்லாடும் மகிழ்ச்சியளிப்பது. அவன் சமமான எதிரி. இரண்டு சமமான எதிரிகள்…

39: ஆட்டம்

Posted on June 22, 2024

நிலவையின் மஞ்சத்தறையில் லீலியா உசையை நோக்கியபடி நின்றாள். “நீலா” “நீலா” என மிழற்றினாள் உசை. பச்சையின் எழிலாலான உசையின் சிறகுகளை நோக்கியவள் கூண்டின் வாயிலைத் திறந்து உசையை உள்ளங்கையில் வைத்துக் கொண்டாள். அகலில் ஏந்திய சுடரென உசை அவள் கரத்தில் நிமிர்ந்து நின்றாள். நிலவை…

Posts pagination

1 2 … 4 Next
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,154)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,996)
  • காதலின் முன் பருவம் (1,971)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,903)
  • விடுதலையில் கவிதை (1,882)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme