கன்னி அம்மன்
தூக்கணாங் குருவிக் கூடுகள்நுனிகளில் தொங்கும் முதிய மரம் ‘நேற்றுநான் வருவேன் என்றுநினைத்தாயா’என்றேன் மஞ்சளாய் வெடித்தது சூரியன்வாய்க்காலின் வெள்ளம் உடலேறியது குழந்தைக்குள் சிரிக்கிறாய் வயல் நெல் நிரப்பிற்று மீண்டும்நெடுங்காலத்திற்குப் பிறகுதனது கருவறையில் அமர்ந்திருக்கும்கன்னி அம்மனைப் போல்வீற்றிருக்கிறாய் நெடும் பள்ளத்தில் வீழும்பேரருவியாய்திரும்பிச் சொல்கிறாய்சில வரிகளை பின்பாதைகள் எங்கும் செல்லக் காத்திருக்கின்றன கருவறை இருட்டுமூக்குத்தி வெளிச்சம். (2016)
