பிரியத்துக்குரிய பெண்ணுக்கு: கடிதம் 03

பிரியத்துக்குரிய கிரிக்கு, அகச் சிக்கலை வழமைக்கு மாறாக, வாசிக்க நினைக்கும் வாசகருக்கு கொஞ்சம் விளங்கும் படியும் எழுதியிருப்பது குறித்து – இது உரையாடலுக்கான களங்களை அமைத்து தருமென்பதில் நம்பிக்கை கொள்கிறேன். நீங்கள் எழுதியிருப்பதை ஒரு பொதுவெளியில் தனியே வாசிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. வாசித்தவுடன் அதனை நான் புரிந்துகொண்ட விதம் உடனடியாக எனக்கு எந்த உணர்ச்சியையும் தரவில்லை. ஆனால் தொடர்ச்சியான அந்த ஆண் குரலின் சொற்கள் சமகாலத்தின் எல்லா நாவுக்குமான என் …

பிரியத்துக்குரிய பெண்ணுக்கு: கடிதம் 02

வணக்கம், உங்களுடைய பிரியத்துக்குரிய பெண்ணுக்கு என்ற புனைவில் இருந்து சில கேள்விகள் எனக்கு, ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட காதல்களில் இருக்க முடியும் என்ற விடயத்தை பலரும் விவாதித்து வருகின்ற வேளையில் அதை அடிப்படையாக வைத்து பல பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும் ஒடுக்குமுறைகளை எதிர்நோக்குவதும் வெவ்வேறு தளங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ஆனால் சம்மந்தப்பட்ட எவரும் அவற்றை பொதுவெளியில் விவாதிக்கவோ பொறுப்புக்கூறவோ தயாராக இல்லை இது வெறும் கதைகளாகவும் கொசிப்பாகவுமே வெளிவருகின்றன …

பிரியத்துக்குரிய பெண்ணுக்கு: கடிதம்

ஒரு போராட்டம் செய்யப்பட்டு இருக்கிறது இதற்குள்ளே. ஒரு யதார்த்தம் இருக்கிறது. அதேநேரம் புரட்சி இருக்கிறது. என் ஆண்மையின் அத்தனை விறைப்புத் தனங்களுக்குள்ளும் உள்ளே மரத்துபோன உணர்சி மிக்க பரம ரகசியமாக நீள நினைக்கும் காமத் தீயின் கட்டுக்கடங்காத ஆர்வத்தில் வரும் கோளாறுகளை எழுதும் அந்தத் துணிவு அதிர்கிறது. ஆரம்பத்தில் தூண்டி பின்னர் எல்லை தாண்டி இறுதியில் வாசகனை மனச்சிறையில் அடைக்கிறாய். என்னை போன்ற ஒரு ஆணுக்கு கிடைத்த ஒரு தண்டனை …

ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 03

ஆயுத வழி விடுதலைப்போரில் ஆர்வங் கொண்டெழுந்தோர் பெருமளவு இளைஞர்களே. ஆயுத வழியின் தொடக்க காலத்திலிருந்தே பாடசாலைக் கல்வியை இடையில் நிறுத்திக்கொண்டு பலர் விடுதலை இயக்கங்களில் இணைந்தனர். மிக இளம் வயதில் அவர்கள் கேட்டவற்றையும் அறிந்தவற்றையும் கொண்டு சிங்கள ராணுவத்தின் அடக்குமுறைகளை வெல்ல யுத்தமே வழியென்று நம்பினர். பேச்சு வார்த்தைகளில், கால இழுத்தடிப்புகளில் எல்லாம் அவர்களுக்கு விசனமிருந்தது. ஓர் அவசரம், துடிப்பு, வேகம். 1985 இல் வெளிவந்த மரணத்துள் வாழ்வோம் என்ற …

ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 02

90 களில் வெளியான நட்சத்திரன் செவ்விந்தியனின் ‘வசந்தம் 91’, பா. அகிலனின் ‘பதுங்குகுழி நாட்கள்’, அஸ்வகோஷின் ‘வனத்தின் அழைப்பு’ ஆகிய கவிதைத் தொகுப்புகள், ஈழத்தமிழ் கவிதை மொழியில் முக்கியமான கவித்துவ அடைவுகளைக் கொண்டவை. வனத்தின் அழைப்புத் தொகுதியில் போருக்குச் செல்பவர்கள் பற்றிய மதிப்பும் போர் உண்டாக்கியிருக்கும் அவநம்பிக்கையும் ஒருங்கே திரள்கின்றது. கவிதைகளில் தொல்கதைகளின் மீளுருவாக்கம், நெடுங் கவிதைகளில் கதைத்தன்மை கொண்ட தத்துவார்த்த விசாரணைகள் ஆழங் கொண்டன. போராளிகளின் நினைவுகள் உக்கிரமானவை. …

பொருள் கொள்ளுதலும் எதிர் கொள்ளுதலும்

இன்று மாலை ‘பிரியத்துக்குரிய பெண்ணுக்கு’ என்ற புனைவுப் பிரதியொன்றை வெளியிட்டிருந்தேன். அதையொட்டிப் பல நண்பர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்ன பிரச்சினை உனக்கு?. இது ஒரு மோசமான பிரதி, ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துகிறது. பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாக எழுதியிருக்கிறாய் என்று ஏசிக்கொண்டிருக்கிறார்கள். இதில் இரண்டு விடயங்களை அடிப்படையாக உரையாட வேண்டியிருக்கிறது. ஒன்று, ஒரு புனைவை எழுதுபவரின் சொந்த வாழ்க்கையில் நிகழும் ஒன்றைத் தான் பிரதியில் எழுதுகிறார்கள் என்று நினைப்பவர்கள். இது வாசிப்பு …

பிரியத்துக்குரிய பெண்ணுக்கு

நானொரு புணர் மிருகமாக என்னைக் கற்பனை செய்து கொள்கிறேன். அது அந்தரத்தில் என் விலாவை விறைக்கச் செய்கிறது. புழுக்கள் என் தோலில் வளர்கின்றன. மயிர்களைப் போல. கொலைக் கணத்திற்கும் விலங்குப் புணர்ச்சிக்கும் மூளை என்னை அழைக்கின்றது. அதற்கு உடலெல்லாம், வெறும் உடல். பிறிதொன்றுமற்ற உடலாக உன்னை ஆக்கிக் கொள்கிறேன். இந்தக் கற்பனை என்னை சிலிர்க்க வைக்கிறது. நொதிக்கும் திராவகங்களை உன்னில் பொழிந்து கொண்டே கேவும் உன் முகத்தசையில் என் விந்தைத் …

ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 01

‘முதலில் உங்கள் சகோதரனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்’—மத்தேயு 5:24 பைபிளில் உள்ள கதையொன்றின்படி ஆதாமினதும் ஏவாளினதும் மூத்த மகன் காயீன், இளைய மகன் ஆபேல். இருவரும் தங்கள் விளைச்சல்களிலிருந்து காணிக்கையை கடவுளுக்குச் சமர்ப்பிக்க வருகிறார்கள். கடவுள் ஆபேலின் காணிக்கையில் மகிழ்கிறார். இதனால் கோபமுற்ற காயீன் தனது சொந்தச் சகோதரனாகிய ஆபேலைக் கொல்கிறான். அதன் பின், கடவுள் காயீனிடம் உன் தம்பி எங்கே என்று கேட்கிறார். காயீன், …

மூப்பதின் இனிமை

ஆயிரமாண்டுகாலம் பீப்பாயில் ஊற்றப்பட்டு, மா கடலின் கரை மணலில் தாழ்க்கப்பட்ட திராட்சையின் ஊறிய புளிப்பு, உதட்டிற் பரவ, நிறங்கள் கொட்டியவிழும் விளக்குகளின் தொடுகைகளை உணரும் தெருக்களில் அலையும் ஒரு கவிஞையின் மூப்பெய்திய மனம் கொள்ளும் உவகைகள் அந்த வைனின் ஆயிரமாண்டுகாலத் திரட்சியின் இனிப்பான கசப்பு. அது மானுட குலம் வாழ்வறிந்த இத்தனை காலமும் அலைந்து கொண்டும் மோதிக் கொண்டும் கொன்று கொண்டும் ஒன்றையொன்று அழித்தும் வாழ்வித்தும் உருமாறிய வாழ்வுகளின் அடியில் …

தெய்வங்களும் பாதாள நாகங்களும்

காதலிலும் காமத்திலும் ஆண் மனம் கொள்ளும் எதிர்நிலைகள் கவிதையில் இருமுனையும் கூர் கொண்ட மீன்முள்ளுகள் போல. அது ஒன்றினது இரு திசைகளெனவும் ஒரே உலோகத்தின் குளிரும் வெப்பமுமென ஆகுபவை. காதலும் காமமும் ஆண் மனதிற்குள் இரண்டு தனித்தனியான கதாப்பாத்திரங்களாகவே நிகழக்கூடியவை. அதற்கு அச்சமில்லை, குற்ற உணர்ச்சியில்லை, பல வேளைகளில் மானுட அடிப்படைகள் கூட இருப்பதில்லை. ஆண் காதலின் உலகம் கண்ணீரும் புனிதமும் பெருக்கெடுத்து ஓடுவதாக நிகழும் அதே வேளையில் அதன் …