விண்கற் கிராமத்தில் ஒரு நாள்

குறிப்பு: இந்தக் குறிப்பினை நண்பர் கிஷோகர் தனது முகநூலில் எழுதியிருந்தார். அதீதமான உணர்ச்சிவசப்படும் மனிதர்களில், நானறிந்த தலைமகன்களில் ஒருவர். ஆனால் ஆழமாகப் பார்த்தால் அதேயளவு வெறுப்பும் கசப்பும் சூழ்ந்த இருளில் வாழவும் நேரக்கூடியவர். அவரது ஆரம்ப காலங்களில் இருந்தே அவரது எழுத்துக்களில் வெளிப்படும் நகைச்சுவையை ரசிப்பேன். சில நேரங்களில் எரிச்சலும் ஊட்டுவார். ஆனால் அவர் எழுதிய சில குறிப்புகள் அபூர்வமான வாழ்கணங்களைக் கொண்டவை. இக் குறிப்பும் அத்தகைய ஒன்று. முகநூலில் …

வாசகர்கள் எனும் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள்

எந்தவொரு பண்பாட்டிலும் ஒவ்வொரு அறிவுத் துறையையும் ஆழப்படுத்தவும் விரிவான சமூக அறிதலையும் ஏற்படுத்துவது அத் துறைசார் வாசகர்களே. அவர்களே கேள்விகளின் மூலம் சந்தேகங்களையும் விடுபடல்களையும் நீக்குபவர்கள். அப்பங்களிப்பின் வழி அவர்கள் சமூகத்தின் அன்றாட சராசரித்தனத்திலிருந்து விலகி தனித்து ஒலிக்கிறார்கள். அவர்களே பெருந்திரளுக்கும் அறிவியக்கத்துக்குமிடையிலான நீள் பாலங்கள். பொதுவான உரையாடல்களைக் கவனிக்கும் போது உடனே புலப்படுவது ஒன்று தான், எந்த ஒரு துறை சார்ந்து விமர்சிக்கின்றோமோ அது தொடர்பில் குறைந்த பட்ச …

இனப்படுகொலைக்கெதிரான ஓர் மக்கள் இயக்கம்: கடிதம்

அழகாக வடிவமைக்கப்பட்ட கட்டுரை. ஆழமாக ஊடுருவிய இந்த இரவின் சரியாக 00.54 இல் இதை முடித்தேன். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக வந்த சீறீதரன் தன்னை நிலைநாட்ட, மாணவர்களையும் அழைத்துச் செய்யப்பட்ட ஒரு உப்பு சப்பற்ற போராட்டத்தில் இழுத்து செல்லப்பட்ட பல்கலைகழக மாணவரும், அவரை இழுத்து சீருடை அணியாத காவலரும் என்று மனதில் கட்டுரை பல கோணங்களில் விமர்சனமாக படர்கிறது. ஒரு கட்டத்தில் இந்த மாணவர் ஒன்றியம் எமதுபள்ளிகால மாணவர் …

குத்திக் கிளறலும் அரிதாரத்தை அசிட் ஊற்றிக் கழுவுதலும்

கருத்துச் சுதந்திரம் என்பது செயற் சுதந்திரமல்ல என்ற அடிப்படையிலிருந்தே எனது பார்வை உருவாகியிருக்கிறது. கருத்துகள் முன்னேற்றமடைவதற்கு, முரணியக்கங்கள் தமக்குள் தொடர்ந்து உரையாடி, ஒரு சமரசத்தை எட்டி, மேலும் தொடர்ந்து விவாதித்து, விரிவாகிக் கொண்டு செல்லக்கூடிய மாபெரும் உரையாடற் பரப்பாக ஆக வேண்டும், அதில் ஒரு சிறு துளியே நாம் ஒவ்வொருவரும் ஆற்றும் கருத்தியல் பங்களிப்பு. ஒவ்வொரு தரப்பிற்கும் அவற்றுக்கான வரலாற்றுப் பின்னணிகள், அதன் வழி உருவான பார்வைகள், நலன்கள் எல்லாமே …

என் தந்தையின் வீடு: கடிதம்

கிட்டதட்ட 2008 மாவீரர் உரையின் மிச்சம் எதிர்கால சந்ததியிடம் இந்த போராட்டத்தை கையளிப்பதாக பாலசந்திரன் தந்தை சொன்னது தான். பிளவுகளில் வரும் போதிமரங்களில் மெதுவாக வந்து தியானம் இருக்கும் புதிய தோரோக்களையும் உலக ஒழுங்கு சந்தையில் வந்தாடும் துவாரகாக்களுக்கும் எதையோ சொல்ல வருகிறது என்பதை விட இதைதான் சொல்கிறது அந்த ஆன்மாக்களின் வீடு பேறுக்காக யாகங்களை செய் என் இனமே என்று எதிர்காலத்திடம் கதறும் ஒரு நிகழ்கால புதுவையின் களக்கானம் …

வணக்கப்பாடல்: கடிதம்

முதல் வாசிப்பில்  காமக் கிழங்கே என்ற இடத்தில் தான்  என் கவனம் போனது மீண்டும் வாசித்தேன். ரசிக்கும் ஆணுக்குள் தான் பொங்கும் பச்சை அரிசி பாறையின் மூடி அடி வெப்பத்தில் தட்டி தட்டி விழுவதை பற்றித் தெரியும். அப்படியே கவிதை தடித்து போன உணர்ச்சி மிக்கவை தான். மரத்துப் போனவை என்பதை சொல்லி அந்த வெப்பத்துக்கு சுடர்இருள் என பெயர் இட்டு வளர்கிறது.  அங்கே ஒரு கட்டத்தில் நா(க்)கலப்பையின் உழுகை …

எப்போதும்

ஒரு திசையில் கொடி சுழற்றினர்மறு திசையில் கொடி பிடித்தனர் ஒரு வானத்தின் கீழ் எல்லாம் நிகழ்கின்றன ஒரு காற்று வீசுகிறதுமறு காற்று எரிகிறது ஒரு வழியில் மலர் தூவப்பட்டிருக்கிறதுமறு வழியில் கண்ணீர் இறைக்கப்பட்டிருகிறது ஒரு மரத்தின் கீழ் எல்லாம்சொரிகின்றன ஒருவர் மறக்கிறார்இன்னொருவர் மறக்க மாட்டேன் என்கிறார் ஒரு கனவு பலிக்கிறதுமறு கனவு தீகின்றது ஒரு பூமியில் எல்லாம் விளைகின்றன பொன்னும் பிணமும்சாவீடும் மங்களமும். (2021) ஒளிப்படம் (2024) : பிரபாகரன் …

எரியும் நெருப்பும் காற்றில்: 02

சிவரமணியின் வாழ்வும் கவிதையும் என்ற தலைப்பில் சித்திரலேகா மெளனகுரு சிவரமணியின் கவிதைத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை அக்காலட்டத்தின் மகத்தான ஆவணங்களில் ஒன்று, அதன் பின்னணியில் 1985 இலிருந்தான விடுதலைப்போராட்டத்தின் தன்மை மாற்றத்தைத் தீர்க்கமாக எதிர்கொள்கிறது அவ்வாவணம். அதிலிருந்து இந்த ஆக்கத்திற்குத் தேவையான பகுதிகளை இப்பகுதியில் சேர்த்திருக்கிறேன். * “சிவரமணி யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். குடும்பத்தில் இரு பெண் பிள்ளைகள். சிவரமணி மூத்தவர். சிவரமணியின் தந்தையார் …

எரியும் நெருப்பும் காற்றில்: 01

‘ஓ என் தேசமேஉன் மணல் வெளிகளில்நான் நடக்கின்றேன்உன் நிர்மலமான வானத்தில்நட்சத்திரங்களைநீ என் பார்வைக்கு பரிசளித்துள்ளாய்உனது சிரிப்பினால் என்சகோதரர்கள்வாழ்கின்றனர்நீ போர்த்துள்ள சோலையினுள்ஒளித்து வைத்துள்ளவெண் முத்துக்களை என் தங்கைகள்அணிந்துள்ளனர்வாழ்வுகளின் வாழ்வாய் நீ என்னைஅணிந்துள்ளாய் – உனக்குநான் கொடுப்பதுஉயிர் மட்டுமே’. 1985 இல் எழுதப்பட்ட சிவரமணியின் கவிதை இது. விடுதலைக்கான கனவு இளைஞர்களின் மனதில் சூல் கொண்ட காலத்தில் பெருங்கனவுகளில் வாழ்ந்த ஒரு கவிஞை சிவரமணி. வாழ்வுகளின் வாழ்வாய் நீ என்னை அணித்துள்ளாய் என்று …

கன்னி அம்மன், அப்பாவும் கோவர்த்தன கிரியும்: கடிதம்

கன்னி அம்மன் வயல்களில் சப்த கன்னிகளுக்கு கோயில் வைப்பார்கள். ஏழு பெண்கள். அவர்களுக்கும் நாகதம்பிரானுக்கும் அறுவடை மற்றும் விதைப்பு காலத்தில் தான் சிறப்பு வழிபாடு. அதுவரை அவர்களின் அறையில் தூக்கணாம் குருவியும் கூடு கட்டலாம். அவ்வளவும் சுதந்திரமாண பிராமணர் அற்ற கோவில்கள். அவை போபவர் வருவபர் எல்லாம் பூசை செய்தாலும், ஆரம்பத்தில் மரத்தின் கீழ் தன்னை வைத்த வயல்காரனின் பிள்ளை மீது அவளுக்கை ஒரு காதல் அதுவும் பக்தியை பாலனிடம் …