மூதன்னையின் இரண்டாம் தொடுகை

என் மூன்று ஆசிரியர்களின் ஆசி பெற்ற அந்த நாள் வியாச குரு பூர்ணிமா என அடுத்த நாள் யதார்த்தன் மெசேஜ் அனுப்பியிருந்தார். ஒவ்வொரு வருடமும் வரும் வைகாசி முழு நிலவு நாளை வியாசரின் பிறந்த நாளாக, குரு பூர்ணிமாவாக கொண்டாடுகிறார்கள். ஜெயமோகனின் வெண்முரசு நிறைவடைந்த பின்னர் ஆண்டு தோறும் வெண்முரசு நாளாகாவும் அது கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய ஒரு நாளில் இத்தனை ஆசிகள் கிடைத்திருப்பது முதலில் மகிழ்ச்சியாகவும் இப்பொழுது பொறுப்பாகவும் …

சிவராஜ் : அணையா நெருப்பின் சுடர்

19 வயதில் தனக்கு கிடைத்த எல்லாவற்றையும் யாரோ ஒருவரின் கண்ணீரை துடைக்க கொடுத்த மனம் அதன் தன்மை மாறாமல் இன்றும் அப்படியே இருக்கிறது. குக்கூ துவங்கிய நாள் தொட்டு இன்றுவரை எண்ணிலடங்கா செயல்கள் நம்பிக்கைகள் நினைத்து பார்க்க முடியாதளவு மனிதர்கள் நன்மை அடைந்துள்ளனர். ஒரு பெரும் செயல்கள் நில்லாமல் இந்திய நிலப்பரப்பெங்கும் நடைப்பெறுகிறது. இந்த தினமணியின் முதல் பக்க செய்தி 1999 ஆண்டில் வெளியானது. இத்தனை காலம் ஒன்றில் நிலைத்திருந்து …

‘குக்கூ’ சிவராஜ் – ஒரு விருது

சிவராஜ் அண்ணனை ஒரு முறையாவது நேரில் கண்டு தேம்பத் தேம்பச் சிரித்து கட்டியணைத்து நெஞ்சுடைய தழுவிக்கொள்ள வேண்டும் என நினைப்பவன் நான். அவர் நம் காலத்தின் பேரறத்தின் ஆன்மா கொள்ளும் தீரா அலைச்சலும் மாபெரும் உத்வேகமும் கொண்டவர். அவரைப் போல முற்றிலும் நேர்மறையான ஆளுமையை என் வாழ்நாளில் உணர்ந்ததில்லை. ஒருமுறை கூட நேரில் பார்க்காத, எங்கோ இவ்வளவு தொலைவில் இன்னொரு தீவில் இருக்கும் எளிய எழுத்தாளனுக்கும் சுரக்கும் பரிவு அவர். …

மூதன்னை தொட்ட மலர்

நேற்று மாலை ‘குக்கூ’ சிவராஜ் அண்ணாவிடமிருந்து ஒரு செய்தி வந்திருந்தது. ஓர் ஒளிப்படமும் குரற்பதிவும் இருந்தன. காந்தியவாதத்தின் பழுத்துக் கனிந்த தமிழ் முகமான மூதன்னை கிருஷ்ணாம்மாள் ஜெகந்நாதன் கொடிறோஸ் வாசித்துக் கொண்டிருந்தார். கண்கள் விம்ம அக்காட்சியை திரும்பத் திரும்பப் பார்த்தேன். எத்தனை களங்களைக் கண்ட கண்கள், எத்தனை பேராளுமைகளைக் கண்ட கண்கள், எத்தனை மானுட முகங்களின் துயர் கேட்டுக் கசிந்த கண்கள், எத்தனை அனலுடன் மானுடத்திற்கெனச் சினம் கொண்ட கண்கள், …

தன்னறம் விருது 2025 : ஆவணப்படம்

கடந்த வருடத்திற்கான தன்னறம் இலக்கிய விருது எழுத்தாளரும் கோட்பாட்டாளருமான சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருது வழங்கப்படுபவர்களைத் தன்னறம் குழுவினர் எடுக்கும் ஆவணப்படங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. ஒவ்வொரு ஆளுமையினதும் துல்லியமான இயல்புகளையும் உடலசைவுகளையும் கைப்பள்ளத்தில் அள்ளிச் சேர்க்க முனைபவை. ஷோபா சக்தியின் ஆவணப்படம் என் மனதுக்கு மிக நெருக்கமானது. இன்றளவும் ஈழத்தில் அவரது புனைவுலகம் குறித்த முழுமையான மதிப்பீட்டை நான் உட்பட எவரும் இன்னும் எழுதவில்லை. ஒரு இரகசிய இயக்கத்தின் …

தன்னறம் விருது : ஷோபா சக்தி

“இலக்கியம் ஒருபோதும் சலிப்பை உண்டு பண்ணாது. அது உங்களைப் பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும். இலக்கியம் உங்கள் மனதைச் சமநிலையில் வைத்து உங்களை நிதானப்படுத்தும். பொறுமையையும், அன்பையும், காதலையும் இருதயத்தில் கசிய விட்டவாறேயிருக்கும். வெறுப்பையும் பகையுணர்ச்சியையும் கழுவித் துடைக்கும். என்னுடைய நண்பர்கள் வாழ்க்கையைக் குறித்துப் புகார் சொல்லும் போதெல்லாம், நான் அவர்களுக்கு இலக்கிய வாசிப்பையே பரிந்துரைக்கிறேன். உங்களது நெற்றிக்கு நேரே துப்பாக்கி பிடிக்கப்பட்டிருக்கும் போது, கடவுளை நினைக்காதீர்கள்! மனைவி பிள்ளைகளை நினைக்காதீர்கள்! …

தும்பி: அருகும் கனவுகளின் பேரிறக்கை

ஐந்து வருடங்களுக்கு முன் எமது பசுமைச்சுவடுகள் அமைப்பு தொடங்கி சிறுவர்களுக்கான உரையாடல்கள், கதைகூறல்கள் ஆரம்பித்த காலகட்டங்களில் கிரிசாந் மூலமாக தும்பியின் அறிமுகமும், தன்னற வெளியீடுகள் பற்றியும் அறிந்தோம். செயற்பாட்டு தளங்களில் வாசிப்பின் தொடரியக்கத்திற்கு இவை இரண்டின் மூலமாகவும் பெற்றுக்கொண்ட வாழ்வென்பது கனவு போலிருக்கின்றது. அவையே என்னைச் செதுக்கி இருக்கின்றன. குக்கூ மற்றும் தன்னறத்தின் வெளியீடுகளாக எமது அமைப்பிற்கெனப் பெற்றுக்கொண்ட புத்தகங்களில் வாழ்வதற்கான கருணையும், எளிமையும் மட்டுமே திருப்பத் திருப்ப சொல்லப்பட்டன. …

முத்து

எல்லா வகையிலும் விசாரணை செய்யப்பட்ட சிறுவனொருவன்சிரித்துக் கொண்டே மகத்தான பொய்களைச் சொல்லிக்கொண்டிருந்தான்அவன் சொல்லும் பொய்களை அளந்து எடுக்க எந்தக் கொம்பனாலும் இயலவில்லைஅவ்வளவு நேர்த்திஅவ்வளவு அசாத்தியம் சோர்ந்து போய் அவனைக் கைவிட்டோம் அம்மா சத்தியமாக நடந்ததைச் சொல் என்றாள் ஒரு ஆசிரியை பின்னர் கண்டு கொண்டோம் அவனுள் உண்மை ஒளிர்விடும் முத்தென இருந்துகொண்டு தானிருந்திருக்கிறதுஎன்றும். ஏதோவொரு தூசு தான் அவனுள் முத்தாகியிருக்கிறதுஎன்றும். (‘குக்கூ’ சிவராஜ் அண்ணனுக்கு)

கல்லெழும் விதை: ஒரு உரை

தும்பி இதழின் நிறுத்தம் பற்றிய செய்தி இரவு முழுவதும் மனதிற்குச் சோர்வளித்துக் கொண்டேயிருந்தது. இச்சோர்வு எனக்கு அவசியமற்றது போல் தோன்றினாலும் உள்ளத்தின் சக்கரங்கள் உருளவில்லை. அவை திரும்பத் திரும்ப ஒரே பூவில் சுற்றும் தும்பியென வட்டமடித்துக் கொண்டிருந்தது. இச்சோர்வை உதறியாக வேண்டும். எவ்வகையிலும் மனம் ஏதாவதொரு இழப்பை, துயரை பெரிதென ஆக்கிக் கொண்டு சோர்வை விழையக் கூடும். இவ்வகைச் சுழல்களுக்குள் நான் பலதடவைகள் சிக்கியிருக்கிறேன். ஒரு உந்தல் கிளர்ந்தால் போதுமான …

ஆகப் பெரிய கனவு

குழந்தைகளுக்கான உலகை உருவாக்கும் கைகளே இப்புவியில் மகத்தான எடையின்மை கொண்டவை. குழந்தைகளுக்காகக் காணும் கனவுகளே தூய்மையின் பொற்சிறகணிந்தவை. குழந்தைகளின் நிலையெண்ணிக் கண்ணீர் சிந்தும் விழிகளே தெய்வம் உறையும் அகல்கள். தும்பி சிறார் இதழ் தனது 81 ஆவது இதழுடன் பொருளாதாரச் சுமையால் தனது பறத்தலை நிறுத்துவதாகக் கண்ட அறிவிப்புத் தான் இதுவரையான வாழ்நாளில் நான் வாசித்த ஆகத் துயரார்ந்த செய்தி. தும்பியைப் போல் ஒரு இதழ் தமிழில் நிகழ்ந்தமை நம் …