முத்து

எல்லா வகையிலும் விசாரணை செய்யப்பட்ட சிறுவனொருவன்
சிரித்துக் கொண்டே மகத்தான பொய்களைச் சொல்லிக்கொண்டிருந்தான்
அவன் சொல்லும் பொய்களை அளந்து எடுக்க எந்தக் கொம்பனாலும் இயலவில்லை
அவ்வளவு நேர்த்தி
அவ்வளவு அசாத்தியம்

சோர்ந்து போய் அவனைக் கைவிட்டோம்

அம்மா சத்தியமாக நடந்ததைச் சொல் என்றாள் ஒரு ஆசிரியை

பின்னர் கண்டு கொண்டோம்

அவனுள் உண்மை ஒளிர்விடும் முத்தென இருந்துகொண்டு தானிருந்திருக்கிறது
என்றும்.

ஏதோவொரு தூசு தான் அவனுள் முத்தாகியிருக்கிறது
என்றும்.

(‘குக்கூ’ சிவராஜ் அண்ணனுக்கு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *