13: விருபம் எழல்

பதும்மையும் இளம் பாணனும் காட்டின் ஒற்றை வழிக்குள் நுழைந்த பொழுது குருகெனக் காலசைத்து அவர்களை நோக்கி நாணிய பின் மனையின் பின் தூணில் சாய்ந்து நின்றாள் விருபாசிகை. மனையினுள்ளே வேறுகாடாரும் அங்கினியும் இன்னும் சில பெண்களும் அகிற்புகைக்குள் தோன்றி மறைந்து மீண்டு தோன்றினர். அங்கினி வேறுகாடாரின் வெண்முடிகள் சடைத்த மரக் கரங்களைப் பற்றியபடி அவரையே விழியுற்றிருந்தாள். விருபாசிகையின் வதனம் வெண்மதியென வளைவு அமைந்தது. முகத்தில் சிறுமலர் நுனிகளெனப் பருக்கள் முகைத்திருந்தன. …

12: சுழல் எழல்

ஆடற் சித்தரின் சொற்கள் சுழல் விழிக்குள் கலங்கிக் கலங்கி மண்கலயத்தில் நாணயங்களின் புரள்வென உருண்டன. வெளியே பகலின் வெளிச்சம் பதுங்கிக் பின்னால் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது. பகல் முழுவதும் சித்தரின் சொற்கள் உருண்டு உருண்டு உடலைத் தாள முடியாமல் நடுமுற்றப் பஞ்சணையில் படுத்திருந்தாள். அவள் தன்னை அதுவரை வளர்ந்து முகிழ்க்கும் சிறுமியென்றே எண்ணிக் கொண்டிருந்தாள். சித்தரின் விழிகளில் ஒளிர்ந்த முதற் பார்வையில் தானொரு சிறுமியல்ல என்பதை உணர்ந்தாள். சில நாட்களாகவே …

11: உருகம் எழல்

பாணர் குழுவொன்று புயலில் வீழ்ந்து கிடக்கும் மரமொன்றை மான் கூட்டமொன்று தாவிக் குதித்துச் செல்வது போல் வாகை சூடனைத் தாவிச் சென்றது. கால்களின் சத்தங்கள் குளம்பொலிகளென தன்னுள் எதிரொலிக்க மயக்கிலிருந்து கண்விழித்தான். நிலவு சரிந்து தாழ்ந்து போய்க் கொண்டிருந்தது. விழிகள் திறந்து கொண்டதுமே சுற்றி அலைந்த யாழிசையின் கூவல்களும் விறலியரின் தீங்குரல் பாடல்களும் பாணர்களின் உளறல்களும் அவனைச் சுற்றி மொய்க்கத் தொடங்கின. மதுச் சாலைக்கு முன்னிருந்த நெருப்பினருகில் போர்வீரர்கள் குழுவொன்று …

10: மயக்கு விளி

“போரில் நான் கொன்றவர்களை உயிருடன் எழுப்பினால் இன்னொரு அரசையே நான் நிறுவ முடியும் மூடனே” என்று ஆங்காரமாகக் கத்தியபடி தன் வெட்டுப்பட்ட குறைக் கரத்தை உயர்த்தியபடி மதுவில் உடல் நடுங்க மதுச்சாலை வாசலில் சாய்ந்திருந்தான் வாகை சூடன்.அவனது இடக்கால் சதைகள் துள்ளியணைந்தன. “என் உடலில் பாய்ந்த அம்புகளைக் கொண்டு என் படைக்கலத்தை ஆக்கிக் கொள்வேன். வடித்த குருதியைக் கொண்டு என் அரண்மனையை மண்ணில் குழைத்துக் கட்டி முடிப்பேன்” எனச் சொல்லிக்கொண்டிருக்கும் …

09: படையல் விளி

“மூநாள் திருவிழா நாளை தொடங்கவிருக்கிறது. ஒரு லட்சம் குடிகளுக்காவது உணவிட வேண்டும் மச்சாள். நீ அரியும் வெங்காயங்களை வைத்து ஒரு குழந்தைக்கு கூட உணவு கொடுக்க முடியாது” என்று சொல்லிக்கொண்டு வெற்றிலை வாயைத் துப்பிவிட்டு ஒவ்வொருவரையும் அவர்கள் சினம் கொள்ளுமளவுக்கு வைதபடி பெருஞ் சமையல் நிபுணர் இன்னவர் உலைக்களம் புகுந்த வண்டெனப் பறந்தபடியிருந்தார். “அடேய் குந்தவா, உனக்கு நான் என்னடா குறைவிட்டேன். குடிகளுக்கே உணவில்லையென்றாலும் உனக்கு ஆறு வேளை உண்டி …

08: பலி விளி

மாலை கரைசேரும் யவன மரக்கலனில் தனக்கான வலிநீக்கு ஒளடதங்கள் வந்து சேரும் எனப் பேராவலுடன் காத்திருந்தான் தமிழ்க்குடியின் முதற் பரதவ அரசன் நீலழகன். போரில் அங்கங்களை வெட்டி வீழ்த்தும் போதும் ஆயிரமாயிரம் அம்புகள் பெருமழைப் பெருக்கென எதிரிகளின் படை மீது குவிந்து சதை புகும் பொழுதும் அவர்களின் கதறும் ஓலம் அவன் செவிகளை நிறைக்கும் பொழுதும் தனது பட்டினத்தில் அவர்கள் செய்த பாதகங்களினை எண்ணியெண்ணி இன்னும் இன்னும் அவர்களின் குருதி …

07: சித்த விளி

ஆடற் சித்தனின் சாம்பல் ஊறிய மேனியில் நெளிகாற்றொன்று மோதி கடுங்குழலைக் கலைக்க முடியாமல் அஞ்சி விலகி இன்னொன்றாக உருமாறிச் சென்று மறைந்தது. பல பருவங்களாக ஆறுகளிலும் குளங்களிலும் ஆழியிலும் குளித்துத் துணியால் உலர்த்தாமல் வெய்யிலில் காய்ந்த சடை இறுகியிருந்தது. தடித்த கரும் புருவங்களின் நுனிகள் கூர்ந்திருந்தன. இடைத்துணி புரளக் காட்டின் விளிம்பிலிருந்து பட்டினத்தின் பெரும் பாதைக்குள் நுழைந்தார். நூராத தீக்கங்குகளென விழிகள் கனன்று கொண்டிருந்தன. சுழல்விழி மனைவாசலில் சிகை பிரித்துக் …

06: யட்சி விளி

பேரரசி நிலவை சொப்பிரஸ் மரக்கலன் கரைக்குச் சேர்ந்த தகவல் அரசன் நீலழகனுக்குக் கிடைத்த பொழுது நீராடப்போவதாகச் சொல்லி அரண்மனையின் நீரகத்திற்குச் செல்ல ஆயதமானாள். இறுதியாக நடந்த போரில் அரசனின் நெஞ்சில் கீறிய வாளினாலும் அங்கத்தில் பட்ட புண்களினாலும் அவன் பலநாட்களாக வலியில் துடித்தான். மருத்துவிச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக அவனைத் தேற்றினர். ஒருமுழுப்பருவம் அவன் நிலவையின் அருகில் செல்லவேயில்லை. பரத்தையர்கள் வந்து அவனைக் குடிலில் பார்த்துச் செல்வதகாச் சேடிகள் மூலம் ஒற்றறிந்தாள். …

05: மந்திர விளி

ஆழியின் மேற்பரப்பு செந்தீயென ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்தியின் மேகங்கள் பழுப்புப் பச்சையும் பொன் மஞ்சளும் குழைந்த ராட்சத மேக ரதமென உருவமைந்திருந்தது. ஆழிப் புறாக்கள் மரக்கலத்தின் பின்னே குறுவால் எனத் தொடர்ந்து பறந்து வந்தன. அகன்ற பாய்களுடன் சொப்பிரஸ்ஸா கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. மரக்கலத்தில் நூற்றி ஐம்பது பேரளவில் ஓடிக் கொண்டும் பரபரத்துக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் திரிந்தனர். பெரிய வளைந்த சொண்டுகளையுடைய பலவர்ணக் கிளிகள், நீண்டு பருத்த ஒரு …

04: நாத விளி

பதும்மையின் அறைச் சாளரத்தை மாலையின் குளிர் வருடியபடி இருந்தது. மணிக்கதவம் தாழிடப்பட்டிருந்தது. பதும்மை தோழிகளுடன் கதைத்துக் கொண்டிருக்கிறாள். விரும்பும் போது வெளியே வருவாள் என முதுபரத்தை அங்கினி வேறுகாடாருக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். வேறுகாடார் தாம்பூலத்தை மடித்து முதுபரத்தைக்கு நீட்டினார். அவள் பாதி கடித்து மறுகடிக்கு வாய்திறந்த பொழுது மிகுதியைத் தன் வாயில் போட்டுக் கொண்டு அவளைப் பார்த்துச் சிரித்தார். அவள் நாணத்துடன் வேறுகாடாரின் பாதத்தில் ஒரு உதை கொடுத்தாள். குளிரான …