கவிதைச் சுவரொட்டி

ஓஷோவின் சொல்லுண்டு “உண்மை சந்தையிடத்துக்கு வந்தாக வேண்டும்” என்று. நான் அதை ஏற்பவன். இலக்கியமோ கலையோ அது எல்லோருக்கும் அவசியமான ஒன்று. ஒரு குறுங்குழுவின் தனிக்களியல்ல. மொத்த மானுடத்தினதும் பண்பாட்டினதும் திரண்ட அறுவடை. அதில் ஒவ்வொரு நெல்லும் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும். எனது கவிதைகள் சிலவற்றை நண்பர்கள் சுவரொட்டிகளாகச் செய்து வருகிறார்கள். அதன் முதலாவது சுவரொட்டி இது.

மியாவ்

விலங்குகளுக்கும் எனக்கும் எப்பொழுதும் இருக்கும் உறவு சுகுமாரனின் தந்தை பற்றிய கவிதையொன்றில் வருவது போல அன்போ வெறுப்போ அற்ற நிலை தான். அவையும் இங்கு வாழ்கின்றன. என்னைப் போலவே. ஒருமுறை யாழ் குயர் விழாவில் கலந்துரையாடல் ஒன்றில் விலங்குகளுக்கும் தமக்கும் இடையிலான உறவைப் பற்றி ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் வெளியே சென்றுவிட்டு இடையில் திரும்பிய பொழுது அக்கேள்வியை ஹரி கேட்டார். உங்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான தொடர்பு எப்படி என. …

திகதி மாற்றம்

எனது கவிதை நூலான வாழ்க்கைக்குத் திரும்புதலின் வெளியீட்டு நிகழ்வினை மழையினாலும் புயலினாலும் உண்டான இடர்க்கால நிலமைகளைக் கருத்தில் கொண்டு வரும் கிழமைக்கு மாற்றியிருக்கிறோம். 01. 12. 2024 இடம்பெற இருந்த நூல் வெளியீடு 08. 12. 2024 அன்று காலை பத்து மணிக்கு யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறும். அனைத்து நண்பர்கள் மற்றும் இலக்கிய வாசகர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.

மலரினைச் சாத்துமென்!

மலரினைச் சாத்துமென்! இரத்தமூறிடும் கால இடுக்கில்புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென்மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும்உயிர்களை இழந்தும்ஆழப்பாயும் வேர்களின் வீர்யம்மண் தான் அறியும்இரைச்சலை மேவி இசைக்கும் நாளில்எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொருமலரினைச் சாத்துமென்! * காலத்துயர் போகிற போக்கில்விளம்பர வரிகளுடன் இனங்கண்டு விட்டுசம்பந்தமில்லாதது போல்போகப் போகிற மனிதரை எண்ணி சஞ்சலப்படுகிறேன் முகமூடிகளின் நகரத் தெருக்களில் அவளைப் பற்றிபளிச்சிடும் வரியைஇனியும் எழுதாமலிருக்க முடியாதுசும்மா கொட்டிவிட்டுப் போகிற வார்த்தையைப் போலவா… …

பித்தும் கவிதையும் : 02

பத்தொன்பது வயதில், கவிஞரும் ஓவியரும் அரசியல் பத்தி எழுத்தாளருமான நிலாந்தன் அவர்களிடம் பேச்சு மூல ஆங்கிலம் கற்கச் சென்றேன். அவருடன் அரசியல் பற்றியும் இலக்கியம் பற்றியும் நிறைய உரையாடியிருக்கிறேன். கவிதைகளை வாசித்து அபிப்பிராயங்கள் சொல்லுவார். ஓர் ஆளுமையாகவும் ஆசிரியராகவும் என்னை அவர் ஈர்த்தார். றமணன் அண்ணாவும் நிலாந்தன் அண்ணாவும் மேடைப் பேச்சில் மிகவும் வசீகரமானவர்கள். உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளிவந்த பின் இங்கே பல்கலைக்கழகம் கிடைக்க வாய்ப்பில்லை என்றானது. இரண்டாம் …

பித்தும் கவிதையும் : 01

கவிதையால் மட்டுமே அடங்கக்கூடிய தாகமுடையவனாக இருப்பதே கவிதைக்கும் எனக்குமான உறவு. * வைரவர் கோயிலின் திருவிழாக் காலங்களில் குஞ்சுக்கண்ணா பாடும் தேவாரங்களைக் கேட்டு நின்றது கவிதையை அறிவதன் தொடக்க நினைவாக இருக்கிறது. எதிர் நிற்கின்ற தெய்வ உருவைக் குரலால் அழைத்துச் சொல்லால் உயிரளித்து “ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத்துரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்..” என்று நெஞ்சறைந்து உரிமையுடன் தெய்வமெழ வைக்கும் அந்தத் தேவாரங்களின் சொற்களிலே கவிதை …

ஒரு கவிதையும் ஒரு ஓவியமும்

நண்பரும் ஓவியருமான கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு எனும் ஓவியரும் அவரது தோழி ஷ்ரீகலாவும் எனது கன்னி அம்மன் என்ற கவிதையின் சில வரிகளை மொழிபெயர்த்து அதற்கு சிறு ஓவியமொன்றையும் வரைந்து சென்ற ஆண்டு பரிசாக அனுப்பியிருந்தார்கள். ஒரு கவிதை மலையாளத்தில் விளங்கப்பட்டு ஆங்கிலத்தில் கடக்கும் பொழுது மூன்று மொழிகளில் ஒரேகாட்சி மீள மீள நிகழ்வதன் அழகை நோக்கினேன். அதற்கு ஓவிய மொழியிலும் நான்காவதாக ஒரு பார்வை உருவாகுகையில் அதன் எல்லையின்மை …

வாழ்க்கைக்குத் திரும்புதல் : அறிமுக நிகழ்வு

எனது முதலாவது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதல் குமாரதேவன் வாசகர் வட்ட முதல் வெளியீடாக டிசம்பர் மாதம் முதலாம் திகதி காலை பத்து மணிக்கு யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் அறிமுக நிகழ்வு நடைபெற இருக்கிறது. இலக்கிய வாசகர்கள், நண்பர்களை நிகழ்வுக்கு அன்புடன் அழைக்கிறேன்.

ஈழத்துக் கவிதைகள் : கடிதம்

கிரி, ஆதியின் கவிதைகள் குறித்து நீங்கள் எழுதியிருந்த அகழ் கட்டுரை படித்தேன். நல்ல அறிமுகக் கட்டுரை. ஆதியை வாசிப்பதற்கான வரைபடத்தை கொடுத்திருக்கிறீர்கள். போரை உருக்கு ஆலையின் துருத்தியின் தீ ஆகவும், போரை வேறு மலைகளில் இருந்து இன்னொரு கோணத்தில் பார்க்கமுடியுமெனச் சொன்ன சொல்லாட்சிகளும் கட்டுரையில் அபாரமான மொழிவெளிப்பாடு. கூடவே ஈழத்தின் கவிதையின் கடந்த கால போதாமைகளைச் சுட்டியிருந்தீர்கள். ஈழ் கவிதை வரிசை உருவாக்குவது பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். அவை முக்கியமெனக் கருதுகிறேன். …

ஒற்றைக்கோடை : அறிமுகக் குறிப்பு

கவிஞர் ஆதி பார்த்திபனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ஒற்றைக்கோடை தாயதி பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிறது. அந்த நூல் குறித்தும் ஆதி பார்த்திபன் மற்றும் ஈழத்து இலக்கிய சூழல் பற்றியும் சிறு கட்டுரை அகழ் இணைய இலக்கிய இதழில் வெளிவந்திருக்கிறது.