இரண்டு கையளவு ஒற்றைச் சூரியகாந்திப்பூ
தினசரியின் கொடுமணல் மீது கால் வெதுக்க நடக்கும் கவிஞர்கள் மொழியில் தோன்றுவதுண்டு. சமூகச் சிக்கல்களையும் மானுட நெருக்கடிகளையும் ஒன்றாகக் குவித்துப் பார்ப்பது எந்தவொரு அகத்தையும் கொந்தளிப்பூட்டக் கூடியது. சமூகத்தின் அழியாத சிக்கல்களினை மாற்றும் கருவியாகக் கவிதையையும் தன்னையும் ஆக்கிக் கொண்ட கவிஞர்களில் ஆத்மாநாம் முக்கியமானவர். அரசியல் கவிதைகள் மானுடரின் ஆன்மீகத்தை ஒரு நுனியால் பற்றிப் பிடித்து வளரும் பொழுதுதான் கற்சுவரில் கொடியென கவிதைகள் தழைக்கும். ஆத்மாநாமின் கவிதைகள் தன்னகம் என்ற …
