45: சிம்ம நிழல்
நெடிய மூங்கில் கழிகளால் தூணிடப்பட்டு பழுத்த பனையோலைகளால் சீராகக் கூரையிடப்பட்ட சத்திரமொன்றில் இளவெயில் தன் ஒளிக்கரங்களை நீட்டியிருந்தது. இடையிலிருந்த சாளரங்களால் சிறு ஒளித்தூண்கள் சத்திரத்தின் உள்ளே விழுந்து கொண்டிருந்தன. வீதியில் பெருகிய குடிகளின் காலடிகளால் விம்மியெழுந்த புழுதியின் தூசுகள் அவ்வொளித் தூண்களில் பரவி ஒளித்தூசென மின்னின. புரவிகளின் கனைப்பொலிகளும் அவை கால்மாற்றிக் கொண்டு நிற்கும் ஓசைகளும் எழுந்தன. நிரையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டில்களில் இருந்த காளைகளின் கொம்புகளில் கட்டியிருந்த சலங்கைகள் …
