ஒரு கவிதையும் ஒரு ஓவியமும்

நண்பரும் ஓவியருமான கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு எனும் ஓவியரும் அவரது தோழி ஷ்ரீகலாவும் எனது கன்னி அம்மன் என்ற கவிதையின் சில வரிகளை மொழிபெயர்த்து அதற்கு சிறு ஓவியமொன்றையும் வரைந்து சென்ற ஆண்டு பரிசாக அனுப்பியிருந்தார்கள். ஒரு கவிதை மலையாளத்தில் விளங்கப்பட்டு ஆங்கிலத்தில் கடக்கும் பொழுது மூன்று மொழிகளில் ஒரேகாட்சி மீள மீள நிகழ்வதன் அழகை நோக்கினேன். அதற்கு ஓவிய மொழியிலும் நான்காவதாக ஒரு பார்வை உருவாகுகையில் அதன் எல்லையின்மை …

வாழ்க்கைக்குத் திரும்புதல் : அறிமுக நிகழ்வு

எனது முதலாவது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதல் குமாரதேவன் வாசகர் வட்ட முதல் வெளியீடாக டிசம்பர் மாதம் முதலாம் திகதி காலை பத்து மணிக்கு யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் அறிமுக நிகழ்வு நடைபெற இருக்கிறது. இலக்கிய வாசகர்கள், நண்பர்களை நிகழ்வுக்கு அன்புடன் அழைக்கிறேன்.

ஈழத்துக் கவிதைகள் : கடிதம்

கிரி, ஆதியின் கவிதைகள் குறித்து நீங்கள் எழுதியிருந்த அகழ் கட்டுரை படித்தேன். நல்ல அறிமுகக் கட்டுரை. ஆதியை வாசிப்பதற்கான வரைபடத்தை கொடுத்திருக்கிறீர்கள். போரை உருக்கு ஆலையின் துருத்தியின் தீ ஆகவும், போரை வேறு மலைகளில் இருந்து இன்னொரு கோணத்தில் பார்க்கமுடியுமெனச் சொன்ன சொல்லாட்சிகளும் கட்டுரையில் அபாரமான மொழிவெளிப்பாடு. கூடவே ஈழத்தின் கவிதையின் கடந்த கால போதாமைகளைச் சுட்டியிருந்தீர்கள். ஈழ் கவிதை வரிசை உருவாக்குவது பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். அவை முக்கியமெனக் கருதுகிறேன். …

ஒற்றைக்கோடை : அறிமுகக் குறிப்பு

கவிஞர் ஆதி பார்த்திபனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ஒற்றைக்கோடை தாயதி பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிறது. அந்த நூல் குறித்தும் ஆதி பார்த்திபன் மற்றும் ஈழத்து இலக்கிய சூழல் பற்றியும் சிறு கட்டுரை அகழ் இணைய இலக்கிய இதழில் வெளிவந்திருக்கிறது.

இந்தாங்கோ இனிப்புத் தட்டு

வாழ்வில் இனிப்பதைப் பகிர்வதே முதன்மையானது. நாம் வாழும் காலம் தினந்தோறும் எதிர்மறை மனநிலைகளாலும் கசப்பின் கசடுகளாலும் பனித்திரையெனச் சூழப்பட்டிருக்கிறது. இதனிடையில் இந்தா வைத்துக் கொள் என வயதான பாட்டியோ தாத்தாவோ யாருமறியாமல் கைபொத்தி அழுத்தித் தரும் ரகசிய இனிப்புத் துண்டெனக் கவிதைகளை எழுதுகிறார் ஆனந்த்குமார். இனிப்பின் தித்திப்பை நாவுகளும் காதுகளும் இதயங்களும் மறந்துபோகலாகாது. வாழ்க்கை மகிழ்ச்சியான கணங்களின் தொகுப்பாக மட்டுமே எஞ்சுவது. அதற்கு மேல் எதுவும் கணக்கல்ல. வாழ்வின் நொடிகளை …

பாவைக்கைச்சுடர்

அண்மையில் வாசித்த கவிதைகளில் ஒளி என்ற இந்தக் கவிதை இன்னதென்று அறியாத புதுவுணர்வை மனதிற்குள் உண்டாக்கியபடியே இருக்கிறது. மனசு கவிதையின் இறுதி வரிகளை உருட்டியபடியே இருக்கிறது. எளிமையான ஒரு கவிதை தான். ஆனால் ஏணைக்குள் கிடக்கும் குழந்தை தலையை மட்டும் வெளியில் நீட்டி, நான் ஒரு அதிசயம் என்று ஈறு தெரியச் சிரிப்பது போல் தோற்றங் காட்டுகிறது. கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் எனக்கு மிகவும் பிடித்த கதை. ஒவ்வொரு …

சூது

நான் அளவில் பெரிய சூதுகளை ஆடியிருக்கிறேன்அவற்றில்வாழ்க்கையிடம் வாழ்க்கையைவைத்து ஆடிய சூதுதான்அளவில் மிகச் சிறியது. (2024)

அழுதுகொண்டே மலையேறும் சிறுவன்

சபரிநாதனின் ‘தூஆ’ என்ற கவிதைத் தொகுப்பினை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பண்டிகை நாளின் விடியலில் முழுகித் தலை இழுத்துப் புத்தாடை அணிந்த பின் ஐந்து நிமிடத்திற்கொருமுறை தன்னழகை வியக்கும் சிறுவனைப் போலத் தொகுப்பை திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல கவிதைகள் மொழியில் நிகழ்வது, நாமே நம்மின் அழகை ஆடியில் பார்க்கும் ஒரு தருணமல்லவா. தூஆ தமிழிற்கு அத்தகையதொரு வரவு. தொகுப்பைப் பற்றிப் பின்னர் விரிவாக எழுதுவேன். நான்கு நாட்களாகக் காய்ச்சலும் …

பொன் நாள்

இன்றோடு ஐம்பது கவிஞர்களை எனது சிறு குறிப்புடன் பட்டியலாக்கமும் செய்து முன்வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒருவரெனக் கவிஞர்களுடனும் கவிதைகளுடனும் வாழ்ந்த இப்படியொரு காலம் வாழ்வில் முதல் முறையாக நிகழ்ந்திருப்பது. இத்தனை வருட வாசிப்பின் வழி எனக்குள் சேகரமாகிவரும் கவிதை பற்றிய மதிப்பீடு, பார்வைகளை உருவாக்கிய இக் கவிஞர்கள் என் முன்னோடிகள். ஒவ்வொருவரையும் மதிப்புடன் இக்கணத்தில் வணங்கிக் கொள்கிறேன். சதீஷ்குமார் சீனிவாசன், தர்மினி, ரஜிதா, ஆதி பார்த்திபன், பிரியாந்தி அருமைத்துரை, யோகி, …

பச்சை மொழி

கவிதையின் அலங்காரங்கள் பொறுக்க முடியாத ஒருவர் அதனைக் கழற்றி வீசி எறிந்து கொண்டே எழுதும் கவிதைகள் என கற்பகம் யசோதரவின் கவிதைகள் மொழியில் நிகழ்கின்றன. பைத்தியமூட்டும் நம் காலத்தினது பெண் தன்னிலையின் குரல்கள் பித்தியும் ஆங்காரியுமாக எழுவதன் ஒரு கீற்று அவரிலும் திகழ்கிறது. மொழி தன் அறிவார்ந்த பச்சைத் தன்மையால் எழுத விழைபவை அவை. கற்பகம் யசோதரவின் கவியுலகில் யுத்தமும் அதன் அக இடுக்குகளில் மரித்த உயிர்க்கணங்களின் அலறலும் சமூக …