ஆகாயத்தில் ஒரு வாக்கு

யுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் “நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆகாயத்தில் ஒரு வாக்குக் கேட்டது, யேசு சொன்னார், நீ வீடு கட்டி முடிப்பாயடி எண்டு. அது பலிச்சது. அது மாதிரி மேல் லோகத்தில இதுக்கெல்லாம் ஒரு தீர்ப்பு இருக்கெண்டு நம்பிறன். எங்கட பிள்ளையள கொண்டு, கொத்தி எறிஞ்சு போட்டாங்களோ தெரியாது. மைத்திரியும் சொல்ல மாட்டான், மகிந்தவும் சொல்ல மாட்டான். அதையெல்லாம் யேசுதான் பார்த்துக்கொள்ளுவார். நான் யேசுவ …

மெல்லத் தமிழ் இனிச் சாகும்

‘எழுக தமிழ்’ தமிழ் பேசும் சமூகங்களை எல்லாம் உள்ளடக்கியதா என்பது தான் எழுக தமிழ் மீது உள்ள மையவாத அரசியல். வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள், அதுவும் பூர்வீகமாக இருப்பவர்கள் என்பவர்களுக்கு மட்டுமே எழுக தமிழ். வடக்கில் வாழும் மலையக மக்கள் தமிழுக்கு பொருட்டில்லையா, முஸ்லிம் மக்கள்? பழங்குடியினர்? இவர்கள் எல்லாம் ஏன் தமிழுக்குள் வரவில்லை. தமிழை நாம் ஏன் பிரதேசங்களுக்குள் சுருக்குகிறோம். அனைவரினதும் விடுதலைதான் எந்த விடுதலையையும் நீடித்து …

சமகால இலங்கை முஸ்லிம் சமூகத்தை வாசித்தல் – ‘உம்மத்’ நாவலை முன்வைத்து

அறிமுகம் அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நாவல் ‘உம்மத்’. கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஸர்மிளா செயித்தால் எழுதப்பட்டிருக்கிறது. அதன் சமகாலத் தன்மையைக் கருத்திற் கொண்டு, இந்தப் பத்தி முஸ்லிம் சமூகத்தினதும், குறிப்பாக அதன் பெண்களின் நிலைமையைப் பற்றியும் அறிய இந்த நூலை (புத்தகத்தில் குறிப்பிட்டதன் படியே இதை நாவல் என அறிமுகம் செய்கிறது பத்தி) பயன்படுத்துகிறது. இன ரீதியாக மூன்றாவது நிலையில் இருக்கும் இலங்கை முஸ்லிம் இனம், அதன் உள்ளடுக்குகளில் எதைச் …

காவியத் தருணம்

“எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகையாளும் நியதிகளின் போக்கு விந்தையானது தான்” – கோபி கிருஷ்ணன் – யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டில் ஒரு முஸ்லிம் வியாபாரியை எனக்குத் தெரியும். கைகளில் பொருட்களை கொண்டு சென்று விற்று பிழைப்பவர். பல்வேறு தருணங்களில் அவர் என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். சில நாள் கதைத்தும் இருக்கிறேன். ஒரு நாள், பஸ்ஸில் ஒரு இளைஞன், கையில் துண்டு சீட்டு ஒன்று வைத்து பிச்சையெடுத்துக் கொண்டு வந்தான். நானோ குழந்தை …

சார்லி சப்ளினின் தீர்க்கதரிசனம்

நான் வைத்திருக்கும் புத்தகங்களில் இதுவரை அதிகமாக நண்பர்களால் படிக்கப்பட்டது அல்லது மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது பா .ராகவன் எழுதிய ஹிட்லரின் வாழ்கை வரலாறுதான். இயல்பாகவே ஹிட்லர் என்ற உருவத்தின் மீது அல்லது படிமத்தின் மீது ஒரு கவர்ச்சி இருக்கும். ஏனெனில், நன்மையை விட தீமையே கவர்ச்சியானது .ஒரு சாதாரண சிறுவன் சர்வாதிகாரியாகும் கதை எவ்வளவு தீவிரமாக படிக்கப்படுகிறது. இது ஒரு பொது மனோ நிலை. மக்கள் இயல்பாகவே சாகசங்களின் மீது …

டால், டிக்கி, டமால் – கொண்டாட்டத்தின் இசை

ஆதிவாசிகள் நெருப்பைச் சுற்றி ஆடுவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கக் கூடும். அது தெய்வமாகிய நெருப்பை சாட்சியாக வைத்து ஆடும் நடனம். அப்படி பல்வேறு வகையான இசை பாரம்பரியங்கள் உலகெங்கும் உண்டு. மேட்டுக் குடிக்கும் உண்டு. தாழ்த்தப்பட்டோருக்கும் உண்டு. டைட்டானிக் படத்தில் இந்த மேட்டுக்குடி பம்மாத்துகளுக்கும் எளிய மக்களின் கொண்டாட்டத்திற்கும் ஒரு அருமையான உதாரணம் உண்டு. கதாநாயகன் ஜாக் கதாநாயகி றோசை காப்பாற்றுவான், அதற்காக அவளுக்கு நிச்சயம் செய்திருக்கும் மாப்பிள்ளை அவனை …

டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள்

யாழ்ப்பாணத்தின் பக்கத்தில் ஒரு மினி நகரம் தான் திருநெல்வேலி. செல்லமாக தின்னவேலி என்று அழைப்பார்கள். இங்கே மிடில் கிளாஸ்தான் ஆதிக்கம் அதிகம். பெரும்பாலும் வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள், வங்கிகளின் மற்றும் தனியார் கம்பனிகளின் கொத்தடிமைகள் என்று நகரமே பரபரப்பாகதானிருக்கும். ஸ்பெஷலாக சொல்வதென்றால், தின்னவேலி மார்க்கெட் ரொம்ப பிரபலம். காலையிலேயே களை கட்டிவிடும். பொடி நடையாக நடந்துபோனால் பின்வருபவனவற்றை நீங்கள் பார்க்கலாம். பீடியை இழுத்து பனியில் அற்புதமாக விடும் வீபூதி பூசிய …

கூடற் காலம்

தாழிடா ஜன்னலில் மின்னலின் வெளிச்சம்மயங்கும் உடல்களில் போதையின் நடனம். அருந்தமுத்தத்தின் முதற் தீர்த்தம். பேரொளியின் நிலவு வதனம். இம் மழையின் கரிப்பு நீஇச் சுவையின் நாவு நான் தானாய்க் காயவிடு இவ்விரவை. (2019)

வணக்கப் பாடல்

மூதக் கிழவியொருத்திஓங்கிய வானம் போய்தூர விழுந்ததடி காயும் கதிர் விரிவே. உழு நிலமே ; கனற் கன்றேநுனித்த மார்பே ; பசுந் தோலேகூந்தற் குலைவே ; குயில் இளம் பாட்டேகாமக் கிழங்கே கொல் நெருப்பே ; குளிர் இரும்பே வடியுதடி பாத்திரச் சோறு. விடைத்த கரும்பே ; பெய் மழையேரோமக் காலே ; இமைச் சலாகைகளேபின் தோள் வெளியே ; பிருஷ்ட சாதுக்களேவெண் சுக்கிலமே ; விண் சிலம்பே பரல் …

தொடக்கம்

குமாரதேவன் வாசகர் வட்டத்தின் தொடக்க நிகழ்வும் அவரது நினைவுப் பகிர்வும் கன்னாதிட்டியில் உள்ள சண்முகம் சைவக் கடையில், அவரது பிறந்த தினமான 10. 12. 2023, மாலை 5.30 மணி தொடக்கம் 7 மணி வரை, அவரது உறவினர்கள், கடை ஊழியர்கள், நண்பர்கள் இணைந்து இடம்பெற்றது. குன்றாத ஆர்வம் கொண்ட வாசகரான அவரது நினைவுகளின் பொருட்டு இவ் வட்டம் இயங்கும். வாசகர் வட்டத்தின் முதல் நிகழ்வுத் தொடராக ‘மீளச் சொல்லுதல்’ …