87: இச்சை அகம்
காலமென்பது நிற்காத பெருஞ்சுழலில் சிந்தப்படும் ஒற்றைப் பெருமழை. அதில் வீழ்பவரோ வெல்லப்படுபவரோ வஞ்சம் கொண்டவரோ பழிசுமந்தவரோ கொடூரரோ மேன்மையானவரோ நல்லதோ கெட்டதோ ஞானமோ அஞ்னானமோ தவமோ பற்றோ மாபெருங் காவியமோ கீழ்மையின் பிறவிகளோ அனைத்தும் திவலைகளே. சுழல் எதனால் உண்டாகிறது. ஒழிச்சலில்லாத காட்டுபுரவிகளின் பெரும் ஓட்டத்தில் விசையாய்க் காலத்தை எழுப்புவது எது. எது ஒரு அணுவை நான் உயிரென எண்ணச் செய்தது. அதில் எது பருத்து வடிவங்கள் பூண்டது. எது …
