77: வட்ட மலர்
ஆழ்பிலவென நெடுநீட்டகம் கொண்டிருக்கும் அரசு சூழ்தல் கற்றவர்களின் உதட்டில் ஓயாது ஒளிரும் புன்னகைக்கு எப்பொருளுமில்லையெனப் பொன்னன் எண்ணினான். தமிழ்ச்செல்வன் பிடிகோலில் இடக்கரத்தை ஊன்றி அடிவேர் சாய்ந்து நிற்கும் தென்னையென அமைச்சர்களின் தேரில் வளைந்திருந்தார். அவரது முகத்தின் புன்னகையை நோக்கிய குடிகள் அவை தான் அந்த மந்திரப் புன்னகையெனக் கூவினர். அவர் தான் புன்னகைக்கும் பெருமதியாளர் எனச் சொல்லி மந்தணக் குரலில் வாழ்த்தினர். அரசு சூழ்தலில் புகழ்பெற்றவர்கள் அணியும் இரண்டு அணிகலன்களில் …
