67: அம்பலம்

நூற்றுக்கணக்கான மரங்கொத்திகள் கொத்தி அறைவதைப் போல் அம்பலத்திலிருந்த தச்சர்களின் மரவுளிகள் ஒலியெழுப்பின. கீழும் மேலும் நீர்க்கலயங்களிலிருந்து புழுதியணைக்கும் பணி இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. ஈரம் ஊறித் ததும்பும் தாமரை இலை போல் ஆடியது நிலம். லட்சம் பேர் சுற்றியமர்ந்து நோக்கும் வண்ணம் மா அம்பலம் உயர்ந்து நின்றது. பெருந்தச்சரும் மன்றுத் தலைவர்களும் உரையாடிக் கொண்டு நின்றனர். அம்பலத்தை நோக்கியிருந்த சுழல் விழி குளிரும் மலரென அம்பலம் பனங்குற்றி மேல் முளைத்து …

66: பொற்தேர்

“ஐயமே அழகையும் அறிவையும் பெருமலையேறியின் காலில் சிறுகூழாங்கல்லென இடறி வீழ்த்துகிறது பொன்னா. இப்பொற் தேர் ஆயிரம் நுண்விழிகளால் பெருங் காலங்களில் கூடும் நுண்முனை அகங்களால் மேலும் நுணுக்கப்பட்டு இங்கு இங்கனம் ஆகிநிற்கிறது. மானுடர் ஆக்கிய அனைத்துக் கனவுகளும் இப்பொற் தேரைப் போன்றதே. எளிய உளமொன்றிற்கு இத்தனை பெருஞ்செலவு பகட்டெனவும் எதற்கென்றும் தோன்றும். வறுமையிலும் இன்மையிலும் உள்ளவர்க்குப் பகிர்ந்தளிக்கலாம் எனச் சொல்லும் நாவுகளும் உண்டு. ஆனால் மகத்தானவை எளிய உள்ளங்களுக்கானவை அல்ல. …

65: பரிச்சடங்கு

அரண்மனையின் புரவிக் கொட்டிலில் கனைப்புகளின் ஒலிகள் ஆரவாரமாய் ஒலித்துக் கொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான காவல் வீரர்கள் நுணுகி நுணுகி நோக்கிப் புரவிகளை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். சூரியனின் செம்பொன் ஒளி புரவிக்கொட்டிலின் இடைகளின் ஊடாக வெள்ளப் பீறெலென வழிந்து கொண்டிருந்து. இருநாழிகையில் பரிச்சடங்கிற்கான பணிகளை ஒருக்கி முடித்தாக வேண்டும் என எண்ணிக் கொண்ட இடவர் ஏழு தேர்ந்த அரச புரவிகளை அவர் கைப்பட அலங்கரித்துக் கொண்டிருந்தார். நான்கு கரும்புரவிகளும் மூன்று வெண்புரவிகளும் அவர் …

64: நினைவாலயம் : 02

இடையிலிருந்த விண்யாழியை நீள்மரப்பெட்டியில் அமர்ந்திருந்த ஆடற் சித்தரின் முன் ஆற்றில் உள்ளங்கை நீரை ஊற்றுபவள் போல இறக்கி விட்டாள் தூமழை. விண்யாழியின் வாயில் நுரை கசிந்து கைவிரல்களில் எச்சில் வடிந்திருந்தது. மூக்குநீர் ஊறி வாயில் ஒட்டிக்கொண்டிருந்தது. சிக்குப் படிந்தது போல் புழுதி விண்யாழியின் கேசத்தில் அப்பியிருந்தது. அவள் ஆடற் சித்தரை நோக்கினாள். அவளது மழலை விழிகளின் செம்மையைக் கண்டவரது அகம் வீங்கி வீங்கி அடங்குவது அப்பேருடலில் மூச்சென வெளிப்பட்டது. அவரது …

63: நினைவாலயம்

காவற் தகடுகள் வனவிலங்குகளிடம் கையளிக்கப்பட்டு சடங்குகளை முடித்த பின்னர் மேனியால் வழியும் வியர்வையூற்றைக் காற்றில் நனைந்து கொட்ட விட்டுவிட்டு பெருமரங்களினது நிழல்வழிச் சாலையில் குடிகளின் நிரைகளினூடாக நாகதேவி கோவிலை நோக்கிக் காவற்படையினருடன் நடந்து சென்று கொண்டிருந்தார் ஆடற் சித்தர். அந்தியில் நிகழவிருக்கும் சிற்பனின் ஆடலுக்கான அம்பலம் பனங் குற்றிகளால் அரைப்பனையளவு உயரத்திற்கு அடுக்கப்பட்டு அதன் மேல் இளங் கன்னம் போல் வாளிப்புடன் சீவப்பட்ட முதிரை மரத்தின் பலகைகள் அடுக்கப்பட்டு தறையப்பட்டுக் …

62: புரவி அரசன் : 02

உயம்பவின் விழிகளில் மினுங்கிய சினம் செங்கருவிழிகளென அழல் கொண்டிருந்தது. லாமக தன் பொற்சிறகுகளை அம்புச் சிதறலென உலுப்பி உயம்பவை நோக்கிச் சொல்லற்று நின்றது. உயம்ப மெல்லக் கனைத்து அமர்ந்தபடியே குரலை நாணேற்றியது போல் பேசத் தொடங்கியது. “விண்புரவி அரசரே. இன்றுடன் உங்கள் ஆதிக்கம் முடிவடைய வேண்டும். புரவி நெறியெனச் சொல்லப்படுபவை மந்திரச் சுனையில் கலந்த நஞ்சு எனக் கண்டேன். பாதாளப் புரவிகள் தாம் விழையும் போது எங்கும் செல்லும் உரிமை …

61: புரவி அரசன்

அசல பெருங்கூம்பு மலையெனக் கண் முன் எழுந்து நின்ற சர்க்கரீஸ் கூடத்தை நோக்கி நின்றான். சுபல நிரந்தரமானது என்பது போன்ற அவனது திறந்த வாயுடன் கூம்பின் ஓவியங்களையும் அதில் வரையப்பட்டிருந்த அதிசய உயிரிகளையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். விக்கிரம அங்கே எருமைகளின் தினவுடன் சுற்றிச் சுழன்று பணி செய்து கொண்டிருந்த காப்பிரிகளையும் யவனர்களையும் அவர்களது கைதேர் நுட்பங்களையும் வியந்தபடியிருந்தான். அசலவை நெருங்கிய சுபல மந்தணம் உரைப்பவன் போன்ற குரலில் “உள்ளே …

60: பாடு மீன்கள்

அறியாத போது சிந்தும் கண்ணீர் ஆயிரம் மடங்கு சிறகுகள் கொண்டவை. அவை மேனியை மிதத்தி அகத்தை உருக்கி திரவச்சிறகுகள் பூண்கின்றன. காலில்லாக் கண்ணீர் கன்னத்தில் நடக்கின்றது. விழியில்லா அந் நீர் விழிமயக்கு அளிக்கிறது. கண்ணீரின் மொழி ஒற்றைச் சொல்லால் ஆனது. அச்சொல் வைரத்தின் பட்டைகளெனத் திசைக்குள் திசையவிழ்ந்து பொருள் கொள்கின்றன. இன்பத்தின் நாவுகள் சிரசற்றவை. நாவு மட்டுமே ஓர் உடலென அமைந்தவை. நாவின் நரம்புகளில் இன்பமென்பது அனைத்துச் சுவைகளையும் கொண்டது. …

59: காய விழைஞன் : 02

பித்தர் விழிதிறந்து நோக்கிய போது சலனமற்ற நீர்ப்பரப்பில் ஓடும் ஒளிச்சில்லுகளைக் கண்டேன். சினமென அமைந்த உவகை அவரிடம் சுவறியிருந்தது. பெண்கள் கூந்தலில் நறுமணமென எண்ணிக் கொண்டேன். அலைந்து அலைந்து என் அகம் அவரைக் கண்ட பின்னர் அடங்கியிருந்தது. நோயில் காறிய கடைசி எச்சிலென என் வசவுகளையும் துப்பிய பின்னர் சொல்லென என்னில் எதுவும் எஞ்சியிருக்கவில்லை. வடுவென எண்ணிய தேகத்தின் நாற்றம் பழகியிருந்தது. ஆயிரமாயிரம் கொடுமைகள் புரிந்தவனின் விந்தின் அணு நான். …

58: காய விழைஞன்

“நான் அஞ்சுவது என் தாகத்திற்கு மட்டுமே” என்றான் ஓசையிலான். “நீ சொல்லிய சொற்கள் எங்கோ எவரோ சொல்லிக் கொண்டிருக்கும் நீண்ட பாடலின் சிறு சிரங்கையளவு கொண்டவை. அவை வாழ்வை அறிந்து விலகியவர்களுக்கானது. உனது நாவுக்குச் சுவையே பழகவில்லை. நீ எங்கனம் சிவத்தை எண்ண முடியும். அறிக இளையோனே. தாகமென்பது மானுடருக்கு அளிக்கப்பட்டத்தில் தலையாயது. எதன் பொருட்டும் தாகம் கொண்டவரே புடவியை இயக்கும் விசைச் சுழற்சி. அலைந்து பரிமாறிக்கொண்டிருக்கும் பண்பாடுகளின் கயிற்றுத் …