38: ஆடலன்
புலரியில் மெல்லிய நடையெடுத்து மேனி குளிர்காற்றில் மெய்ப்புக் கொண்டு தோகைவிரித்த மஞ்ஞையின் புன் அகவலொன்று சிற்பனின் செவிகளில் நுழைந்தது. அவன் விழிகளைத் திறக்காமல் அகவலின் எதிரொலிகளைத் தனக்குள் கேட்டபடியிருந்தான். அவன் தேகம் அடவிக் குளிரில் விறைத்து ஆண்குறி நெடும்பனையென ஆடைக்குள் புடைத்து நின்றது. குறி மட்டுமே உடலெனத் தன்னை உணர்ந்தான். மஞ்ஞையின் அகவலில் துடிக்கும் காமத்தை எண்ணி நகையொன்று அவனுள் தழைத்தது. காமம் எனும் முதலின்பமே அவனைத் தீராது உலைக்கும் …
