நிலத்திலிருந்து வானென எழுந்த மாபெரும் பழங்காலப் பழுப்பு நிறச் சீலையொன்றில், புள்ளியிலிருந்து, எழுந்து, விரிந்து, பரவி, ஒளிர்ந்து, உதிர்ந்து, வீழும், நிறங்களாலான வரிகளை நான் கற்பனை செய்கிறேன். உதிரமிட்டு நிகழ்ந்த விடுதலைப் போராட்டம் இந்தத் தீவின் ஒவ்வொரு விளிம்பிலும் அலையடித்திருக்கிறது. எத்தனை மகத்தான கனவுகளின்…
மீளச் சொல்லுதல் : 01
நாம் நிகழும் காலத்தில் வெளிவரும் புதிய கவிதையென்பது ஒரு நீண்ட வரலாற்றின் முனை. அது மானுடக் கனவில் வேர்கொண்டு இன்றைக்கும் எதிர்காலத்திற்குமென விரிந்து கொண்டிருக்கிறது. கடந்த காலம் மிக விரிவான பரப்பு. அதில் ஒரு துண்டை வெட்டி எடுத்து அறிவதென்பது அச் சூழலின் முன்னையும்…
அரிக்கன்லாம்புச் சூரியன்
எழுந்துவரும் புதிய எழுத்தாளர்கள் இன்று எதிர்கொள்ளும் முதன்மையான சிக்கல்களில் ஒன்று தயக்கம். ஈழத்து இலக்கியச் சூழலில் 2009 க்குப் பின்னர் எழுத வந்த முதற் தலைமுறை எழுத்தாளர்களில் பலர் தங்கள் எழுத்தால், அதன் மீதுள்ள தீராத ஆர்வத்தால் இன்று கவனிக்கப்படுபவர்களாக ஆகியிருக்கிறார்கள். தர்மு பிரசாத்,…
இலை பெய்யும் காலம்
இலை பெய்யும் காலம் எனும் தலைப்பிலான கவிஞர் நேதாமோகன் அவர்களின் கவிதைத் தொகுப்பு வெளியீடு நெடுந்தீவில் 04. 01. 2024, காலை 10 மணிக்கு நிகழ இருக்கிறது. தாயதி பதிப்பகத்தின் 27 ஆவது வெளியீடாக இக் கவிதைத் தொகுப்பு நேதா மோகனின் துணிச்சல்காரன் தொகுப்பிலிருந்து…
காற்சட்டைக் கலாசாரம்
அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் காற்சட்டையுடன் நுழைந்தவர்களை வாயில் காப்பாளர்கள் மறித்து உட்செல்லவிடாமல் தடுத்தமை சமூக வலைத்தளங்களிலும் வெகுசன வெளியிலும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இதன் விளைவான உரையாடல்களில் உட்செல்ல முயன்ற தரப்பினரை மலினமாகச் சித்தரித்து தரக்குறைவாக ஏசி பல்வேறு கருத்துகள் பரிமாறப்படுகின்றன. இந்தப் பிரச்சினைக்குள் நுழைவதற்கு…
கன்னி அம்மன்
தூக்கணாங் குருவிக் கூடுகள்நுனிகளில் தொங்கும் முதிய மரம் ‘நேற்றுநான் வருவேன் என்றுநினைத்தாயா’என்றேன் மஞ்சளாய் வெடித்தது சூரியன்வாய்க்காலின் வெள்ளம் உடலேறியது குழந்தைக்குள் சிரிக்கிறாய் வயல் நெல் நிரப்பிற்று மீண்டும்நெடுங்காலத்திற்குப் பிறகுதனது கருவறையில் அமர்ந்திருக்கும்கன்னி அம்மனைப் போல்வீற்றிருக்கிறாய் நெடும் பள்ளத்தில் வீழும்பேரருவியாய்திரும்பிச் சொல்கிறாய்சில வரிகளை பின்பாதைகள் எங்கும்…
அப்பாவும் கோவர்த்தன கிரியும்
உனது அன்புஒரு பரிசுத்த மழைக்காடு உன் நேசம் பற்றிய விரல்களில்என் குழந்தைக் கால வாசனை முதல் பரா லைட் பார்த்த போதும்முதல் சைக்கிளை விடும் போதும்முதல் துப்பாக்கி வாங்கித் தந்த போதும்எவ்வளவு நெருக்கமாய் இருந்த நீ. முதல் சிகரட்டின் பின்னும்முதல் காதலின் வாசனையின் பின்னும்எவ்வளவு…
கருத்தியல் தலைமையும் அறமும்
சிறுகுழுக்களாக வாழத் தொடங்கிய மனிதர்கள், சமூகங்களாக உருப்பெற்று ஒரு மொத்தமானுட, பூமிபற்றிய உடன்படிக்கைக்கைக்குமான உரையாடல் வெளிக்குள்வந்து சேர்ந்திருக்கிறோம் .சமூகம் மற்றும் பூமி போன்றவற்றுக்கு இடையில் மனிதர்கள் உருவாக்கியிருக்கும் உடன்படிக்கையானது, எத்தகையது என்பது காலத்திற்குக்காலம் மாறியும் மேம்பட்டும் வந்திருக்கின்றது. நமதுஎதிர்காலத்திற்கான அடிப்படைகளை உருவாக்குவதற்கு ஜனநாயகத்தைஅடிக்கட்டுமானமாக உருவாக்கத்…
வீடே முதற் பள்ளிக்கூடம்
கொரோனா நிலமைகள் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் மிகக் குறைவான நாட்களே பள்ளிக் கூடங்கள் இயங்கின. நீண்ட லொக்டவுனுக்குப் பின் பாடசாலை வந்த மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்கொண்ட சிக்கல்கள் கவனப்படுத்தப்பட வேண்டியவை. ஆரம்ப வகுப்பு மாணவர்களை எடுத்துக் கொண்டால் முதலாம் வகுப்புப் படிக்க…
குழந்தைகளும் தண்டனைகளும்
1 சில நாட்களுக்கு முன்னர் முதுகு முழுவதும் அடித்து சிவப்பு வரி வரியாக உள்ள தழும்புகளுள்ள குழந்தையொன்றின் படத்தினை நண்பரொருவர் அனுப்பியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான பாடசாலையொன்றில் முதலாம் வகுப்பில் படிக்கும் அந்த மாணவருக்கு, அவரின் கணித ஆசிரியர், அவர் ஒரு பெண்,கணக்குகளை குழந்தை…