பரா லைட்: வாசகர் கடிதம்

காலம் என்பது இருளிலிருந்து ஒளிக்கும் ஒளியிலிருந்து இருளுக்குமாய் தாவுகின்ற ஒரு குரங்கு. இந்தக் குரங்கினை கிளைகளிலிருந்து அகற்றிவிட்டால் எஞ்சி நிற்பது மொட்டை வெளிச்சம் இல்லாவிடின் பட்டை இருள். சமயங்களில் நம்மை வலிந்து இருளுக்குள் திணித்து கொள்கையில் அங்கே பரா வெளிச்சங்களாக உங்களைத் துலக்குபவை கவிதைகள் எனலாம். இந்தப் பரா வெளிச்சத்தை யாரோ ஒருவர் ஏவியிருக்கலாம். ஆனால் துலங்கும் அதன் ஒளியில் வாசிக்கப்படுவதாக உங்களின் அகம் அமைந்து விடுகிறது. என்ன இது …

நன்றியின் நிழல்: ஒரு குறிப்பு

வாழ்க்கைக்குத் திரும்புதல் கிரிசாந்தினுடைய முதலாவது கவிதைத் தொகுதி, குமாரதேவன் வாசகர் வட்ட வெளியீடாக வந்திருக்கிறது. முகநூலிலும் பிற ஊடகங்களிலும் நாளாந்தம் கவிதைகள் என எழுதப்படுகின்றவற்றில் எது கவிதை எனத் தேடிச் சலிக்கின்ற கவிதை மனங்களுக்கு ஆத்மார்த்தமான திருப்தி அளிக்கக்கூடிய ஒரு தொகுப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக இதில் உள்ள அகம் சார்ந்த கவிதைகள், நிஜ உலகின் நிகழ்வெளியில் நின்று மனதைப் பிய்தெடுத்து ஒரு தனித்த வெளியில் மனதை மிதக்க விடுகின்ற பித்து …

வாழ்க்கைக்குத் திரும்புதல்: 12 புத்தகங்கள்

எனது முதற் கவிதைத் தொகுப்பு குமாரதேவன் வாசகர் வட்ட வெளியீடாக வெளிவந்திருக்கிறது. நூல் வடிவமைப்பு மற்றும் அச்சாக்க உதவிகளைக் குக்கூ சிவராஜ் அண்ணாவும் சந்திரசேகர், பாரதி முதலிய குக்கூவின் நண்பர்கள் தொடக்கம் பெயரறியாத பலரும் இவ்வெளிவரவுக்கு உதவினர். உள் வடிவமைப்பினை கல் ஆலும், அட்டைப்பட வடிவமைப்பினை இரா. தியாகராஜனும் வடிமைத்திருக்கிறார். தன்னறம் வெளியீடுகளின் அச்சு நேர்த்தியும், நூலுருவாக்க ஊழ்கமும் நான் பெரிதும் மதிப்பது. தமிழ்நாட்டில் இருந்து ஈழத்திற்குப் புத்தகங்களைச் சேர்க்க …