அமைப்பு, செயல், நெறிகள்
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் மூன்று அமைப்புகளில் செயற்பட்டவன் என்ற அடிப்படையில் ஜெயமோகனின் அமைப்பு பற்றிய விளக்கங்கள் பொருள் பொதிந்தவை என அனுபவ அடிப்படையில் சொல்ல முடியும். மேலதிகமாகச் சில விடயங்களைக் குறிப்பதென்றால் ஒன்று, அமைப்புகளை அல்லது இலக்கியக் குழுக்களை அரசியல்மயப்படுத்துகிறேன் எனும் பேர்வழியில் நுழைந்து தன் சொந்த அரசியல் திட்டங்களை பாம்பு தலையை நுழைப்பதைப் போல போட்டுக் கொள்பவர்களை நுணுக்கமாக அவதானிக்க வேண்டும். முதலில் பரந்துபட்ட சிந்தனையாளராக முற்போக்காளராகத் தோன்றுபவர்கள் …
