ஆட்டுக்குட்டி சுவேதா : குறிப்பு
பொங்கல் பரிசாக, கிரிசாந்தின் கதையைப்படித்தேன். அன்பும் காருண்யமும் உணர்ச்சிகளின் மோதுகையும் இணைகையுமே வாழ்க்கை என்பதை உணர்த்தும் கதை. மனிதர்கள் ஒருபோதும் மனிதர்களோடு மட்டும் வாழ்வதில்லை. அப்படி வாழவும் முடியாது. அவர்கள் சூழலோடு இணைந்தே வாழ்கிறார்கள். அந்தச் சூழல் அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாமே தவிர, சூழலை நீங்கி வாழ முடியாது. இங்கே சுவேதா என்ற ஆட்டுக்குட்டியின் உலகமே கதையாகியுள்ளது. அந்தக் குட்டி வாழ்கின்ற சூழலில் உள்ள மனிதர்கள், நாய்கள், …
