பணிவும் அகங்காரமும்

என்னிடமிருப்பது ஈடில்லாத ஒரு அகங்காரம். இன்னும் ஒன்றுமே குறிப்பிடும் படி நீ எழுதவில்லை உனக்கெதுக்கு இந்த ஆணவம். நீ உன் அகங்காரத்தாலேயே அழியப் போகிறாய். பணிதல் ஒரு நற்குணம் போன்ற பல பரிந்துரைகளை அண்மைக்காலமாக வழக்கத்தை விட அதிகமாகவே நண்பர்கள் சொல்லி வருகிறார்கள். உனது நன்மைக்குத் தான் சொல்கிறேன். பலரும் இப்படி அபிப்பிராயப்படுகிறார்கள் என்று சற்றுத் தயங்கிய முறையில் சொல்பவர்களும் உண்டு. நான் எவ்வளவு அகங்காரம் கொண்டவனோ அதேயளவு பணிவும் …

இந்தாங்கோ இனிப்புத் தட்டு

வாழ்வில் இனிப்பதைப் பகிர்வதே முதன்மையானது. நாம் வாழும் காலம் தினந்தோறும் எதிர்மறை மனநிலைகளாலும் கசப்பின் கசடுகளாலும் பனித்திரையெனச் சூழப்பட்டிருக்கிறது. இதனிடையில் இந்தா வைத்துக் கொள் என வயதான பாட்டியோ தாத்தாவோ யாருமறியாமல் கைபொத்தி அழுத்தித் தரும் ரகசிய இனிப்புத் துண்டெனக் கவிதைகளை எழுதுகிறார் ஆனந்த்குமார். இனிப்பின் தித்திப்பை நாவுகளும் காதுகளும் இதயங்களும் மறந்துபோகலாகாது. வாழ்க்கை மகிழ்ச்சியான கணங்களின் தொகுப்பாக மட்டுமே எஞ்சுவது. அதற்கு மேல் எதுவும் கணக்கல்ல. வாழ்வின் நொடிகளை …

உடல் செவ்வாது பிணி ஒவ்வாது

பாடலாசிரியர் தாமரையின் பாடல்கள் தன் சொற்தேர்வுகளாலும் அன்றாடத்தின் அவதானிப்பு நுண்மைகளாலும் புகழ் பெற்றவை. இவரது பாடல் வரிகள் இசையில் குழந்தையின் விரல்களில் தாயின் கூந்தலிழைகளென பற்றிக்கொள்பவை. ஒரு நல்ல பாடலாசிரியர் தனது சொல்லுலகின் தனித்துவத்தால் தனக்கான பொருளுலகையும் உருவாக்கக் கூடியவர். தாய்மை அல்லது தந்தைமை பற்றிய தாமரையின் பாடல்வரிகள் நம் காலத்தின் மகத்தான தாலாட்டுப் பாடல்களாக தாய்க்கும் தந்தைக்கும் ஆகியிருக்கின்றன. குழந்தைமை தாலாட்டும் பெற்றோர்களென அவர்களை எண்ணத் தூண்டுவது. * …

பாணன்களும் பாடினிகளும்

பாடலெழுதுவதும் கவிதையும் இரண்டு வேறு வேறு துறைகள். இரண்டினதும் தன்மைகள் வித்தியாசமானது. சட்டென நம்முன் எழும் பிரிப்பு என்பதுபாடலாசிரியர் என்பது தொழில். கவிஞர் என்பது தொழில் அல்ல என்பது தான். ஆனால் பாரதி சொல்வதைப் போல் எமக்குத் தொழில் கவிதையென்று சொல்லி வாழ்ந்தால் யானையில் மிதிபட்டே சாக வேண்டியது தான். தொழில்முறையால் மட்டும் அப்பிரிப்பு நிகழ்வதில்லை. நுட்பமான சில திறன்கள் சார்ந்த பிரிவு அது. கவிஞர் தன் சொந்த அனுபவத்தினை …

பச்சை மொழி

கவிதையின் அலங்காரங்கள் பொறுக்க முடியாத ஒருவர் அதனைக் கழற்றி வீசி எறிந்து கொண்டே எழுதும் கவிதைகள் என கற்பகம் யசோதரவின் கவிதைகள் மொழியில் நிகழ்கின்றன. பைத்தியமூட்டும் நம் காலத்தினது பெண் தன்னிலையின் குரல்கள் பித்தியும் ஆங்காரியுமாக எழுவதன் ஒரு கீற்று அவரிலும் திகழ்கிறது. மொழி தன் அறிவார்ந்த பச்சைத் தன்மையால் எழுத விழைபவை அவை. கற்பகம் யசோதரவின் கவியுலகில் யுத்தமும் அதன் அக இடுக்குகளில் மரித்த உயிர்க்கணங்களின் அலறலும் சமூக …

யட்சி வதியும் சரக்கொன்றை

தலம்: புவிதரு: சரக்கொன்றைபாடலருளியவர்: பெருந்தேவி எதிர்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமிடையில் ஆடும் பொன் ஊஞ்சலென மொழியில் நிகழ்ந்தவை பெருந்தேவியின் கவிதைகள். பெண் தன்னிலைகளின் உன்மத்தமும் சீற்றங்களும் கசப்புகளும் பெருந்தேவி கவிதைகளில் ஆடுகின்றன. சொற்களவ் ஊஞ்சலில் குழந்தைகளைப் போல் வந்தமர்கின்றன. மெல்லக் கால் ஊன்றிப் பிற்காலத்திற்கும் எதிர்ப்படும் காலத்திற்குள்ளும் தலையும் காலும் நுழைக்கும் கவிதைகள். அவரது கவிதைகளில் உள்ள வாழ்க்கைகள் கடந்ததும் இன்றையதும் எதிர்ப்படுவதுமென முக்கால விருட்சத்தின் கிளையில் தொங்குபவை. இந்தத் தன்மை தமிழில் …

இரண்டு கையளவு ஒற்றைச் சூரியகாந்திப்பூ

தினசரியின் கொடுமணல் மீது கால் வெதுக்க நடக்கும் கவிஞர்கள் மொழியில் தோன்றுவதுண்டு. சமூகச் சிக்கல்களையும் மானுட நெருக்கடிகளையும் ஒன்றாகக் குவித்துப் பார்ப்பது எந்தவொரு அகத்தையும் கொந்தளிப்பூட்டக் கூடியது. சமூகத்தின் அழியாத சிக்கல்களினை மாற்றும் கருவியாகக் கவிதையையும் தன்னையும் ஆக்கிக் கொண்ட கவிஞர்களில் ஆத்மாநாம் முக்கியமானவர். அரசியல் கவிதைகள் மானுடரின் ஆன்மீகத்தை ஒரு நுனியால் பற்றிப் பிடித்து வளரும் பொழுதுதான் கற்சுவரில் கொடியென கவிதைகள் தழைக்கும். ஆத்மாநாமின் கவிதைகள்  தன்னகம் என்ற …

சாம்பலாய் அடங்கும் தாகம்

மொழியுள் நுழையும் உரிமைகளினதும் நீதிகளினதும் குரல்கள் சிலவேளைகளில் நேரடித்தன்மையான மொழியாகத் தம்மை பாவனை செய்வது உண்டு. அது தனது இயல்பின் சொற்பிசகாத் தோற்றமெனத் தன்னை முன்வைப்பதுமுண்டு. இவை தோற்ற வெளிப்பாடுகள். பலநூறு வகைகளில் சொல்லப்பட்டு அழகியலாக்கம், நுண்மையாக்கம், உருவகமாக்கம் நிகழ்வதன் மூலமே ஒரு கவிதை மொழியுள் வாழும் மனங்களில் தம்மை நினைவுறுத்திக் கொள்கின்றது. இந்தத் தன்மைகளை அடைவது ஒரு மொழிச்சூழல் கூட்டாக நடந்து செல்லும் நெடும்பயணம். பண்பாட்டில் இதுவொரு தினசரிச் …

அலைகளிற் தோணியென நங்கூரமிட்ட வீடு

நீதிக்கான மொழியைக் கவிதை பலவகைகளில் பயின்று வருகிறது. அறத்தை வகுத்துரைத்தல், அது கவனம் கொள்ள வேண்டிய எல்லைகளை மறுவிரிவு செய்தல், அதனுள் அதுவரை ஒலிக்காத தன்னிலைகளின் குரல்களைப் பாடவைத்தல் என்று அதன் பயில்வுகள் பல. மொழிக்குள் உருவான பெண் தன்னிலைகளின் நீதியும் வாழ்வுமாகிய குரல்களில் கோபத்தின் நுனி நாக்கென மொழி திரண்டவர் மாலதி மைத்ரி. அவரது கவிதைகளில் மீள மீள மொழியின் எல்லைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. அன்றாடத்தின் நெருக்கடிகளால் தகிக்கும் …

பக்கத்துக்கட்டிலின் அன்பு

கவியுலகை ஒரு வைத்தியசாலை எனக்கொண்டால் அதில் ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு துறை நிபுணர்கள். சிலர் இதயத்திற்கானவர்கள், சிலர் மனதிற்கானவர்கள், சிலர் பெண்களுக்கான விசேட நிபுணர்கள்… இப்படி வகைப்படுத்திக் கொண்டே செல்லலாம். இதில் நிபுணத்துவம் உண்டு. ஆனால் அங்கிருக்கும் நோயாளியொருவரின் மனவுலகின் அடுக்குகள் அன்றாட நுண்மைகளால் துயர்களால் வேடிக்கைகளால் நம்பிக்கைகளால் ஆனவை. ஒரு பக்கத்துக் கட்டிலில் இருப்பவரின் துயர் கேட்பதெனவும் பரிவு கொள்பவரினதும் பாவனை கொண்ட கவியுலகு ந. சத்தியபாலனுடையது. மொழியின் …