அரசின் விருதுகள்

அரச இலக்கிய விருதுகளை எழுத்தாளர்கள் பெறுவதைப் பற்றி நண்பரொருவர் வேடிக்கையாகச் சொன்னார். அவர் முதன்மையான சிக்கலாகச் சொன்னது “இவங்களே அனுப்பி, அத ஒரு குழு தெரிவு செய்து, வாங்குவாங்களா எண்டு உறுதிப்படுத்தி, பிறகு அறிவிப்பு வெளியாகும் இந்த விருதுகள் தேவையா? எழுத்தாளரெண்டால் ஒரு இது இருக்க வேண்டாமா?” என்ற சாரப்படச் சொன்னார். அரச இலக்கிய விருதுகளுக்கும் வாசகர் வட்டங்களினதோ பண்பாட்டு அமைப்புகளினதோ விருதுகளுக்கும் உள்ள இடைவெளியை வெட்டிப் பிரிப்பது முக்கியமானது. …

சினிமாவா இலக்கியமா

சினிமாவா இலக்கியமா சரியாக ஒரு விடயத்தை கடத்தும். இது அரசியல் கேள்வி தான். தமிழர்களின் தேசநிலைப்பாட்டை இலக்கியங்கள் வாயிலாக நிறுவுவதா இல்லை சல்லியர்கள், மேதகு போல சினிமாக்களினால் விளங்கப்படுத்துவது சரியாக அதை கடத்துமா. தணிக்கை தடைகளை கடந்து உண்மை தாங்கும் அல்லது உணர்வு தாங்கும் பணி எதில் சரியாக அமையும். Rtr Kirishanth * வணக்கம், இலக்கியம் தான். அதில் மாற்றம் என்றும் நிகழ முடியாது. இலக்கியம் மொழியின் ஊடாக …

ஈழத்தமிழிலக்கியம் எனுந் தேர்!

சென்னையில் 08.01.2026 தொடக்கம் 21.01.2026 வரை இடம்பெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் பலரது புத்தகங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பார்த்தேன். உள்ளபடியே மகிழ்ச்சியான செய்தி. ஓர் இலக்கியச் சூழலின் மையவிசை தொடர்ந்து உரசலில் இருக்க வேண்டியது. ஒவ்வொரு புத்தகமும் எழுத்தாளரின் ஆணவமோ நிறைவோ வெளிப்படும் ஒன்று. கலைக்கு அத்தகைய தன்மைகளே இருப்பதாகத் தோன்றுகிறது. இப்புதிய நூல்கள் மேலும் பலரைச் சீண்டும், இயங்கச் செய்யும், மூர்க்கமாக எதிர்வினையாற்றச் செய்யும். அது …

ஈழமா? தமிழீழமா? : ஒரு கடிதம்

“தும்பி” சிறுவர் இதழ் குறித்த உங்கள் சமீபத்திய பதிவு ஒன்று அவ்விதழ் ஈழத் தமிழர்களுக்கு ஏன் முக்கியம் என்பதாக ஆரம்பிக்கிறது. இந்த ஈழத்தமிழர் என்கிற பிரயோகம், முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மைச் சமூகங்களைப் பொருட்படுத்தாத ஒன்றாக அமைகிறது என்று ஒரு குற்றச்சாட்டு உங்கள் பதிவை குறித்து எழுந்திருக்கிறது. இது குறித்து உங்கள் பார்வை என்ன? வேனிலினி * வணக்கம் வேனிலினி, நான் ஓர் ஈழத் தமிழ் எழுத்தாளராகவே பண்பாட்டு வெளியில் …

ஏறி வருதல்

உலகம் முழுவதிலுமுள்ள வணிக சினிமா என்பது கேளிக்கையினூடாகவும் மிகைப் புனைவுக் காட்சிகளின் ஊடாகவும் பெரும்பான்மைப் பார்வையாளர்களின் பார்வைக்குள் சலனங்களை ஏற்படுத்துவதை வெற்றிகரமாகச் செய்வதையே வணிக சினிமாவின் வெற்றியாக ஈட்டுகின்றன. இறுதி யுத்தத்திற்குப் பின்னரான ஈழத்து சினிமாவின் முழுநீளத் திரைப்படங்களை அவை உருவாகத் தொடங்கிய காலகட்டத்திலிருந்தே ஒரு பார்வையாளராக நெருக்கமாக அவதானித்து வருகிறேன். ஒவ்வொரு சிறு வெற்றியும் முன்னேற்றமும் என்னை உவகை கொள்ளச் செய்திருக்கிறது. அது ஒரு திரளின் கனவும் இந்த …

சிதறுண்ட நிலத்தின் சொற்கள்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (JNU) தமிழ்த்துறையிலும் தில்லிகை என்ற தமிழ் அமைப்பிலும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஈழத்துக் கவிதைகள் பற்றிய புறச் சித்திரத்தை உருவாக்குதல் பற்றியும் சமகால ஈழத்து இலக்கியச் சூழல் பற்றியும் இரண்டு உரைகளை ஆற்றியிருந்தேன். தமிழ்த்துறையில் கவிதைகள் பற்றி ஆற்றிய உரையின் காணொலி. பகுதி 01 பகுதி 02