என் தந்தையின் வீடு: கடிதம்

கிட்டதட்ட 2008 மாவீரர் உரையின் மிச்சம் எதிர்கால சந்ததியிடம் இந்த போராட்டத்தை கையளிப்பதாக பாலசந்திரன் தந்தை சொன்னது தான். பிளவுகளில் வரும் போதிமரங்களில் மெதுவாக வந்து தியானம் இருக்கும் புதிய தோரோக்களையும் உலக ஒழுங்கு சந்தையில் வந்தாடும் துவாரகாக்களுக்கும் எதையோ சொல்ல வருகிறது என்பதை விட இதைதான் சொல்கிறது அந்த ஆன்மாக்களின் வீடு பேறுக்காக யாகங்களை செய் என் இனமே என்று எதிர்காலத்திடம் கதறும் ஒரு நிகழ்கால புதுவையின் களக்கானம் …

என் தந்தையின் வீடு

வெளிச்சம் கொள்ள நேராத வீடுகள்காத்திருக்கின்றன.என் தந்தையிடமிருந்து எனக்குஎன்னிடமிருந்து இன்னொருமுறைஎன் மகனுக்கு. மகனே,உன் தந்தையின் வீட்டை  நீ அறிவாயா? உன்  பட்டினங்களின் பாதைகளை,கைவிடப்பட்டவர்களுக்குப் பிளந்து வழி விடாதநந்திக் கடலிடம் கேள்உலோக மழை கொட்டிய இரவில்அங்கு தான் உன்னைத் தலையில் சுமந்து வந்தேன். ஆனால் இப்போதுஉன் பட்டினங்களிடம் திரும்பு வீட்டைச் சுற்றி அலையும்குருவிகளிடம் கேள்கூடென்பதுஇடமா? இருப்பா? சுவர்ப் பிளவில் அரச மரங்கள் – வேர் விடத்துடிக்கும் உன் வீடு. எனவே,உன் தந்தையின் வீடு …