இரு நாவல்கள்

யதார்த்தனின் ‘தோறை’, தர்மு பிரசாத்தின் ‘வண்ணசீறடி’ இரண்டு நாவல்களும் தற்போது இந்தியாவில் பெற்றுக் கொள்ளலாம். கிரிசாந் * “காலச்சுவடு பதிப்பகத்தால் செம்படெம்பர் மாதம் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய தோறை நாவல் தற்பொழுது சென்னையில் உள்ள காலச்சுவடு நூல்களைப் பெற்றுக்கொள்ளும் இடங்களில் கிடைக்கிறது. குறித்த புத்தகக் கடைகளில் இணைய வழிகள் மூலமும் இந்திய , தமிழ்நாட்டு நண்பர்கள், வாசகர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான புத்தகங்கள் விரைவில் கிடைக்கும்” …

தோறை – யதார்த்தன்

“என்னுடைய இரண்டாவது நாவலான ’தோறை’ செப்டெம்பர் 2026 இல் காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து வெளியாகின்றது. இவ்வருடத் தொடக்கத்தில் இந் நாவலை எழுதி முடித்திருந்தேன். முதல் நாவலான நகுலாத்தைக்கும் தோறைக்குமான பயணம் என்னளவில் முக்கியமானது. ஒரு எழுத்தாளரின் இரண்டாவது நாவல் என்பது அவர் எந்தச் சாட்டும் சொல்ல முடியாதபடிக்கு நாவலாக ஆகி இருக்க வேண்டும். இந்நாவலை எழுதும் போதும் சீரமைக்கும் போதும் அடைந்த  உணர்வுகளும்  புனைவில் வாழும் அனுபவமும் வாழ்வு மீதான பற்றுதலையும் நம்பிக்கையையும்  செறிவாக்கியபடியே இருந்தது. …

ஒரு தெய்வத்தை எழுப்புதல் : முன்னுரை

நான் ஒரு கவிஞன் என்ற ஆணவம் அளிக்கும் நிமிர்விலும் செளகரியத்திலும் நெடுங்காலம் ஆழ்ந்திருந்தேன். என் முதலாவது கவிதைத் தொகுப்பான ‘வாழ்க்கைக்குத் திரும்புதல்’ வெளிவந்த பின்னர் அது மெல்ல மெல்ல மாறியது. தொகுத்து அளிக்கப்படும் பொழுது சுருங்கிக் கட்டியாகி சிறிய கூழாங்கல் போலாகியது. கவிதையின் உச்ச கணங்கள் அளிக்கும் நிறைவுணர்வு சட்டென்று அகன்று விடுவது. மிச்ச நேரமென்பது மூளையின் நெசவுத்தறிகள் குறுக்கும் நெடுக்குமாகப் பாய கொந்தளிப்புடன் இருப்பது என்பதாகி விட்டது. கவிதையைப் …

தத்வமசி : முற்பதிவு

“17ஆம் நூற்றாண்டின் சோழமண்டலக் கரையிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் டச்சுக்காரர்களின் காலனிய நிழல் படர்கிறது. குருதியும் அடிமை வணிகமும் பேரழிவும் மலிந்த பெருநிலத்தில், வாழ்வின் நிலையாமையை முகத்திலடித்தாற் போல் உணர்ந்து மனை துறக்கிறான் ஒருவன்.  அகத்தின் வெளிச்சத்தைத் தேடி அலையும் அவனுக்குக் காலம் சூட்டும் பெயர் ‘தத்வமசி’. கிரிசாந்தின் பிரம்மாண்டமான புனைவெழுத்து, வரலாற்றின் அந்தகார உண்மைகளையும் தத்துவத்தின் ஆழங்களையும் ஒன்றிணைக்கிறது. மானுட இருப்பைப் பற்றியும், அதன் நித்தியமான ஆன்மீகத் தேடலைப் பற்றியும் …

காலச்சுவடு: கவிதைகள்

மார்ச் மாதக் காலச்சுவடு இதழில் எனது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. அட்டைப்படத்தில் எனது பெயரைத் தவறுதலாகக் கிரிஷாந்த் என்று அச்சிட்டுவிட்டார்கள். உள் வடிவமைப்பில் கிரிசாந் என்றே போட்டிருக்கிறார்கள். அட்டைப்படத்தில் அப்படி வெளிவந்தமை, ஒரு தவறு என்று ஆசிரியர் குழு நண்பரொருவர் போனில் அழைத்துப் பேசினார், இதெல்லாம் ஒரு பிரச்சினையா பாஸ் என்று சொன்னேன். கவிதைகளை வாசித்து உங்களது கருத்துகளை அனுப்பி வையுங்கள். பெயரில் என்ன இருக்கிறது என்றல்லவா நமது கவி மூப்பன் …