வீடே முதற் பள்ளிக்கூடம்
கொரோனா நிலமைகள் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் மிகக் குறைவான நாட்களே பள்ளிக் கூடங்கள் இயங்கின. நீண்ட லொக்டவுனுக்குப் பின் பாடசாலை வந்த மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்கொண்ட சிக்கல்கள் கவனப்படுத்தப்பட வேண்டியவை. ஆரம்ப வகுப்பு மாணவர்களை எடுத்துக் கொண்டால் முதலாம் வகுப்புப் படிக்க வேண்டிய ஒரு மாணவர் நேரடியான பள்ளி அனுபவம் குறைந்து இரண்டாம் வகுப்பிற்குச் செல்கிறார். புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் ஐந்தாம் வகுப்பிற்கான முழுமையான …
