வசைவெளிக் கண்ணிகள்

புத்தர் தன் சீடர்களுடன் ஒரு கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அந்தக் கிராம மக்கள் இனிப்புகளையும் சுவையான உணவுகளையும் கொணர்ந்து புத்தருக்கு அளிக்க முயன்றனர். புத்தர் அவற்றை ஏற்க மறுத்தார். அம்மக்கள் அவற்றைத் தாங்களே திரும்ப எடுத்துக்கொண்டு சென்றனர். அடுத்த கிராமத்திற்குள் நுழைந்த போது அங்கிருந்த மக்கள் புத்தரை வசைகளாலும் கெட்ட வார்த்தைகளாலும் ஏசிக் கொண்டிருந்தனர். புத்தர் அமைதியாகச் சென்று கொண்டிருந்தார். அவரது சீடர்களுக்குத் தாங்க முடியாத கோபம் ஏழுந்தது. …

புறமுதுகிடுதல்

விதை குழும செயற்பாட்டாளர்களின் பாலியல் சுரண்டல் குறித்த எதிர்வினையாகவே ஆரம்பித்த உரையாடல் இப்போ வேறு எங்கோ போய் நிற்கிறது. கிரிசாந் கெட்டிக்காரன். அறிவாளியான தன்மீது பாமரர்கள் தொடுக்கும் தாக்குதல் என்பதுபோல திசைதிருப்பி அங்கிருந்து ஜெயமோகன் மறுதலிப்பாக மாற்றி பாலியல் குற்றச்சாட்டுகளை நீர்த்துப்போக செய்திருக்கிறார். சரி, நாம் திரும்ப விசயத்துக்கு வருவோம். சமூகத்தில் சக மனிதர்கள் செய்யும் பிழைகளை, சுரண்டல்களை சுட்டிக்காட்டுவது, கண்டிப்பது, கட்டுரை எழுதுவது ; அதே தம் வாழ்வில் …

ஆசிரியரின் சொற் கேட்டல்

ஒரு பண்பாட்டில் அறிவியக்கம் எதன் வழியாக விரிந்து வளரும்? அதற்கான எல்லைகளை தீர்மானிப்பார்கள் எவர்? எந்தக் காலத்திலும் எந்த மாற்றமும் இன்றிக் கலைகளினாலும் இலக்கியங்களினாலும் அறிவுத் துறைச் சிந்தனையாளர்களினாலுமே பண்பாட்டின் அறிவியக்கம் முன்னகர முடியும். அதற்கான எல்லைகளை மறுவரையறை செய்பவர்கள் அவர்களே. அவர்களின் பங்களிப்பைச் சிந்தனைத் தளம் சார்ந்தே நாங்கள் கவனங்கொள்ள வேண்டும். அவர்கள் வழியாகவே பண்பாடு விரிவடைய முடியும் என்ற தன்னுணர்வு எந்தவொரு பண்பாட்டினதும் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தாக …

சராசரிகளுடன் உரையாடுதல்

சமூகத்தின் பெரும்பான்மை என்ற தொகுதி சராசரிகளின் திரள். எந்தவொரு அறிவியக்கத் தரப்பும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் இடைவிடாது உரையாடிக் கொண்டிருப்பது சராசரிகளுடன் தான். சாராசரிகளின்றிச் சமூகமில்லை. அவர்களைக் கேலியாகவோ வெறுப்புடனோ ஒரு எழுத்தாளர் அணுகத் தேவையில்லை. முகநூலில் என் மீது நண்பர் ஒருவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதையொட்டி உருவான உரையாடலுக்காவும் எனது புனைவு ஒன்றிற்கு வந்த வாசகர் கடிதத்திற்கான எதிர்வினையொன்றிற்கும் நான் பதிலளித்துக் கொண்டிருந்தேன். நண்பருக்கு முகநூலிலும் எதிர்வினைக்கு இணையத் …